இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி, கொழும்பு 07 இலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
அதற்கிணங்க நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 07ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடிகளை பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பெப்ரவரி 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மேற்படி அரச நிறுவன கட்டிடங்களில் மின் குமிழ்களை ஒளிரச் செய்யுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 commentaires :
Post a Comment