12/29/2021

கிளிநொச்சியில் உழவர் சந்தை

கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
.................

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கணடாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து வினைதிறனான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.

கிளிநொச்சி, இரணைமடு கமக்காரர் அமைப்பின் சமேளனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(28.12.2021) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் காணிப் பதிவுகளை ஒழுங்குபடுத்தி பூரணப்படுத்தல், காணி அபிவிருத்தி சபைகளை வினைத் திறனாக இயங்க வைத்தல், கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை, நீர்வழங்கல் செயற்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒவ்வொரு விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாயமான முறையில் விற்பனை செய்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், உழவர் சந்தை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான வளாகத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தையை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியை சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொடுத்தார்.

அதேபோன்று, நெத்தலியாறு தொடக்கம் ஆனையிறவு வரையான சுமார் 16 கிலோ மீற்றர் நீளமான கண்டாவளை உவர் நீரேரிக்கு அணை கட்டப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசணத் திட்டத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

12/25/2021

மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்ட இளைஞன்

இன்று மாலை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டைக்கு புறப்பட்ட புகையிரதத்தினால்  இளைஞனொருவனர்  மோதுண்டுள்ளார். மட்டக்களப்பு  மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்விபத்தில் சிக்கியவராவார். விபத்தில்  காலும் கையும் துண்டாக்கப்பட்டுள்ளதகாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








»»  (மேலும்)

12/16/2021

மட்/மாநகர ஆணையாளராக மீண்டும் மாணிக்கவாசகர் தயாபரன்



மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மீண்டும் மாணிக்கவாசகர் தயாபரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் இன்று (15) பி.ப. 3 மணியளவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் முதல்தர வகுப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நீண்டகால சேவை அனுபவத்தினைக் கொண்டவராவார்.


மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின்போது மாநகர பிரதி ஆணையாளர் உதயகுமார் சிவராஜா மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பெரும் வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


»»  (மேலும்)

12/06/2021

பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது

பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படும்
பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது.

அந்தபேழை இலங்கை அதிகாரிகளிடம் பாகிஸ்தானில் வைத்து கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.

»»  (மேலும்)

12/04/2021

பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரியந்த குமார தியவடன

இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார் என்று பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

»»  (மேலும்)

12/01/2021

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணிக்கு தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் நியமனம்

 இலங்கை














இலங்கையின் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டது.

16 உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த செயலணியில், தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என மூவின சமூகங்களும் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன.

எனினும், ஜனாதிபதியினால் 16 பேரை கொண்டு நியமிக்கப்பட்ட செயலணியில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் காணப்படும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் காணப்படும் நிலங்களை அளவீடு செய்து, அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி செய்வுள்ளது.

இவ்வாறான எதிர்ப்புகள் வலுப்பெற்று வந்த பின்னணியில், சுமார் ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்த நிலையில், இந்த செயலணிக்குள் சிறுபான்மை சமூகத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த செயலணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த நில அளவையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எஸ்.பீ.தென்னக்கோன், அரர சேவையிலிருந்து ஓய்வுப் பெற்ற நிலையில், அந்த வெற்றிடத்தை நிரம்பும் வகையில் புதிய நில அளவையாளர் நாயகம் ஆரியரத்ன திஸாநாயக்க செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஓய்வுப் பெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினராகவும், விரிவுரையாளர் முபிசால் அபுபக்கர் செயலணியின் முஸ்லிம் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குறித்த செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


»»  (மேலும்)

இந்திய கடற்படை தலைமை தளபதியானார் அட்மிரல் ஆர். ஹரி குமார்

இந்திய கடற்படை











இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்திய கடற்படை தலைமை தளபதியானார் அட்மிரல் ஆர். ஹரி குமார்


41 வருடங்களாக கடற்படை சேவையில் இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவி ஓய்வு பெறுவதையொட்டி அவரிடம் இருந்து புதிய பொறுப்பை ஹரி குமார் ஏற்றுக் கொண்டார்.

தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் முன்பு மேற்கு கடற்படைப் பிராந்திய தளபதியாக ஹரி குமார் பணியாற்றினார்.

1962ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்த ஹரி குமார், 1983ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்திய கடற்படை பணியில் சேர்ந்தார். தனது 38 வருட அனுபவத்தில் இந்திய கடலோர காவல் படையின் சி-01 கப்பல், இந்திய கடற்படைக்கு சொந்தமான நிஷாங்க், கோரா, ரன்வீர், விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் ஆகியவற்றின் கமாண்டர் ஆக பதவி வகித்துள்ளார்.

»»  (மேலும்)

11/24/2021

முஸ்லீம் காங்கிரஸ் கூத்தா? குழப்பமா?

பாராளுமன்றத்தில்இ கடந்த 22ஆம் திகதியன்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான  வரவு – செலவு திட்டத்தின் (பட்ஜெட்)  இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் மூவர் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை?
  
அம்மூவரும்  கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்துக்கு அமைவாக செயற்படாததன் காரணத்தால் அவர்கள் கட்சியில் அவர்கள் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் பைசல் காசிம் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 
»»  (மேலும்)

11/17/2021

இந்து குருமார்கள் கலாசார ஆடையுடன் அரச அலுவலகங்களுக்குள் நுழையமுடியாதா?

 


மட்/வவுணதீவு பிரதேச கல்வி வலைய அலுவலகத்துக்குள் நேற்றைய தினம் இந்து குருவானவர் ஒருவர் எதிர்கொண்ட அவரது உடை குறித்த அறிவுறுத்தல்கள் மேற்படி கேள்வியை எழுப்பத்  தூண்டியது.

கோட்டைக்கல்லாறு 'அம்பாறைவில்' பிள்ளையார் ஆலயத்தில் பிரதான குருவாக கடந்த  ஆண்டுகளாக  சேவையாற்றிவருபவர்   ரதிகர சர்மா என்னும் மதகுருவாகும். அதேவேளை இவர் மட்/அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தின்  கல்விசாரா பணியாளராகவும் இருந்து 
வருகின்றார். மேற்படி அவரது அரச பணி  சம்பந்தமாக நேற்றயதினம் செய்வாயன்று மட்/வவுணதீவு பிரதேச கல்வி வலைய அலுவலகத்துக்குள் சென்றுள்ளார்.

அவ்வேளையில் அங்கிருந்த உயரதிகாரி ஒருவரால் 'குறித்த குருக்கள்மாருக்குரிய உடையுடன் அலுவலகங்களுக்கு வரக்கூடாது' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதிகாரியின் இந்த நடவடிக்கையானது எவ்வளவுதூரம் சரியானது? அப்படியானால்  பணியில் இருக்கும் ஏனைய மத குருமார்கள் தமது குருமாருக்குரிய ஆடைகளுடன் அரச அலுவலங்கங்களுக்குள் நுழைவதில்லையா? என்கின்ற கேள்விகளை பாதிக்கப்பட்டவர் எழுப்புகின்றார்.
 
கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய நிர்வாகக்குழு  உறுப்பினராகவும் மக்களிடையே  பிரபலமானவராகவும் இருக்கும் தனக்கே  இந்த கதியென்றால் சாதாரண இந்து குருமாருக்கு என்ன நடக்கும்? என்பது அவரது ஆதங்கமாகவுள்ளது. 
»»  (மேலும்)

11/11/2021

இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் சேர்ப்பு

ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.மனித உரிமை மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி  பற்குணராஜா நியமனம் - Newsfirst

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார்.

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன், அதில் 13 உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இலங்கையில் சர்ச்சையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் இந்த செயலணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இடம்பிடிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமலிங்கம் சக்கரவர்த்த கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் இந்த செயலணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

11/09/2021

நல்லாட்சியில் நடந்த நானுறு கோடி ஊழல்- சரத் பொன்சேகா

எயார்பஸ் ஒப்பந்தத்தை இரத்து செய்து நட்டஈடு வழங்கிய போது நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.400 கோடி) மோசடி செய்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டினார்.

.Sarath Fonseka - Wikipedia

திருடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தைப் போலவே திருட்டுச் செயல்களை மேற்கொண்டதாகச் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தை வேண்டாம் என்று கூறும் மக்கள் மாற்று வழி குறித்து கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீரிகம முத்தரகம பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


 


»»  (மேலும்)

இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி

 

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.இலங்கையிலும் கனமழை: 6 பேர் பலி

வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4300ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடர்களால் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

»»  (மேலும்)

11/08/2021

பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் 35 வீதம் உறுதிசெய்யப்படுத்தல் வேண்டும்

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருதல்  தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்கான கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிப் பிரதிநிதிகள் இன்று பங்கேற்றுள்ளனர். Peut être une image de une personne ou plus, personnes assises et intérieur அவ்வேளையில் தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் உள்ள பல நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு   புதிதாக உருவாக்க இருக்கின்ற தேர்தல் சீர்திருத்தமானது தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையை கொண்ட கலப்பு பொறிமுறை ஒன்று உருவாவதற்கான திட்டம், பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் 35 வீதம் உறுதிசெய்யப்படுதல், புலம்பெயர் தொழிலாளர்களதும் காவலில் உள்ளோரதும் வாக்களிக்கும் உரிமையை உத்தரவாதம் செய்தல், போன்ற முன்மொழிவுகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வமர்வில் கட்சியின் தலைவர் சிவ சந்திரகாந்தன் பா.உ, பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், உபசெயலாளர் ஜெயராஜ், கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி மங்களேஸ்வரி ஷங்கர் மற்றும் திரு செழியன் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

»»  (மேலும்)

மைலந்தனை வாழ் மக்களுக்கான நன்னீர்





மைலந்தனைக்கான கிராமத்துக்கான
3 மில்லியன் பெறுமதியான குடிநீர் வழங்கும் திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்மூலம் நீண்டகாலமாக அப்பகுதி மக்களுக்காக இருந்து வந்த குடிநீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட
 பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன்,  கிரான் பிரதேச செயலாளர் திரு ராஜ்பாபு ,  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் செயலாளரும், சட்டத்தரணியும், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மங்களேஸ்வரி சங்கர். சமுதாய நீர் வழங்கல் மாவட்ட பொறியியலாளர் திரு பிரதீபன் போன்றோர்  அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

»»  (மேலும்)

11/01/2021

கண்டியனாறு குளம் விரிவாக்கம் மூலம் 1500 ஏக்கர் நெற்செய்கை அதிகரிக்கும்

 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கண்டியனாறு கிராமத்தை அண்டிய மாவடி தட்டு பெரியகுளம் அமைப்பதற்கான முன்னேற்பாட்டு களவிஜயம் ஒன்றினை   பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ.சந்திரகாந்தன் அவர்கள்   மேற்கொண்டார்.


இக்குளத்தினை  அமைப்பதன் ஊடாக மண்முனை பிரதேசத்தில் சுமார் 1500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் மேலதிக நெற் செய்கை பண்ணமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் கள விஜயத்தின்போது   நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் பொது மக்கள்   என பலரும் கலந்து கொண்டனர்.

»»  (மேலும்)

10/30/2021

நல்லாட்சிக் காலத்தில் மட்/களுவன்கேணியில் 300 ஏக்கர் காணி ஊழல்- பா.உ சந்திரகாந்தன் காட்டம்

நல்லாட்சிக் காலத்தில் களுவன்கேணி பகுதியில் 300 ஏக்கர் காணிகள் ஏறாவூர் மற்றும் காத்தான்குடியை சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு விற்பனை செய்த மிகப் பெரிய ஊழல் நடைபெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அதனை அன்றிருந்த அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.Speech by Sivanesathurai Chandrakanthan, Chief Minister of Eastern Province  - Sri Lanka - YouTube
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் எரிபொருள் நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையங்களுடனான மீனவர் கட்டடம் நேற்று (26) மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய  சந்திரகாந்தன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்  

“நல்லாட்சிக் காலத்தில் இப்பகுதியில் பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய காணி ஊழல் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று 300 ஏக்கருக்கும் அதிகமான காணியை காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 50 ஏக்கர்களாக பிரித்து சிங்கப்பூர் நிறுவத்துக்கு விற்பனை செய்த மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

“இப்பகுதியில் உள்ள ஐஸ் தொழிற்சாலை காணி மற்றும் இராணுவ முகாம் காணிகளை அடைத்து விற்பனை செய்யும் வரைக்கும் இங்கிருந்த அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். இது எங்களது காலத்தில் நடைபெறவில்லை நல்லாட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. அப்பகுதியில் மிகப்பெரும் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

“பாரம்பரிய கிராமங்களையும் கலாசாரங்களையும் தொழிலையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் சும்மா பேசிக்கொண்டிருக்காமல் சிந்தனை ரீதியான மாற்றத்தை கொண்டு முன்னேற வேண்டும்” என்றார். 

thamil mirror

»»  (மேலும்)