12/31/2020

மட்/விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி



ஜனவரி 10 முதல் 2020-2021 பெரும்போக நெற்செய்கை நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்ய தீர்மானம். 
 
இன்று (30-12-2020) மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட பெரும்போக நெற்செய்கை நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தல் தொடர்பான கூட்டத்தில்  மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவ. சந்திரகாந்தன் கலந்து கொண்டு விவசாயிகள் சார்ந்து தீர்மானங்கள் முன்வைத்தார். 

 இதன் முதற்கட்டமாக 18 ஆயிரம் மெட்ரிக்தொன்   நெல்லை கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சபையின் பிராந்திய முகாமையாளர் ஏ. ஜீ. நிமால் ஏக்கநாயக்க தெரிவித்தார். 
நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள களஞ்சியசாலைகள் மற்றும் மேலதிக களஞ்சியசாலைகளை பெற்றுக் கொடுக்க சிவ. சந்திரகாந்தன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

மட்டக்களப்பில் 48394 விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் இவ்வருடம் 244886 மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது.

0 commentaires :

Post a Comment