11/26/2020

திருமதி யோசேப் பரராஜசிங்கம் பற்றி நா கூசாது பொய் சொல்ல சுமந்திரன்

Sri Lanka: Sampanthan and Sumanthiran stick their necks out for Muslims! -  Al Bilad English Daily   
கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு மட்டக்களப்பு நீதி மன்றத்திலே வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் பொய் பேசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சுமார் ஐந்து வருட காலம்  நீடித்த இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டமா அதிபர் தரப்பிலான அரச தரப்பு சட்டத்தரணிகளே வாதாடி வந்த நிலையில் திருமதி யோசேப் பரராச சிங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தாம் வாதாட முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தே சுமந்திரன் சந்தேக நபர்களுக்கெதிராக வாதங்களை முன்வைத்தார். அதுமட்டுமன்றி நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து ஊடகவியலாளர்களிடமும் அதனை தெரிவித்திருந்தார்.

ஆனால் கனடாவில் வசிக்கும் திருமதி சுகுணம் பரராசசிங்கம் அவர்களுடனோ லண்டனில் வசிக்கும் அவரது மகன் டேவிட் பரராசசிங்கத்திடமோ சுமந்திரன் பேசவேயில்லை என்கின்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது சுயலாப அரசியலுக்காக சுமந்திரன் யோசேப் பரராசசிங்கத்தின் மனைவியின் பெயரை பயன்படுத்தி நீதிவான் முன்னிலையில் பொய் பேசியமை அநாகரிகமான செயல்பாடு ஆகும். 

2 commentaires :

Kumar Sriskanda said...

இது உண்மையானால் சட்ட முறையற்ற ஒரு செயல். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய ஒரு செயல்பாடு.

s.thiyagarajah@gmail.com said...

அன்பர் குமார் ஸ்ரீஸ்கந்த அவர்கட்க்கு ,
வணக்கம் . திரு.சுமந்திரன் ஒரு பிரபல
சட்டத்தரணி .
அவர் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை .
இது ஒரு வதந்தி .

Post a Comment