11/14/2020
மைத்திரி வைத்த தீ - பிரசாந்தனின் கைது
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் பூ. பிரசாந்தன் நேற்றையதினம் (நவம்பர்-12 ) வியாழனன்று வைத்து கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரசாந்தனின் பெற்றோரது வீட்டுவாசலில் வைத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. இலங்கையின் ஆட்சியில் இருக்கும் பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இருக்கின்ற நிலையின் அக்கட்சியின் செயலாளர் கைதாகியுள்ளமை பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி ஆரயம்பதியில் தமிழ்நாடு கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
மேற்படி கொலைக்குற்றச்சாட்டின் பெயரில் கடந்த மைத்திரி தலைமையிலான புதிய நல்லாட்சி உருவானபின்னரே கொலைச்சம்பவம் இடம்பெற்று ஏழு பின்னர் 2015/ஒக்டோபர் 23ஆம் திகதியன்று பிரசாந்தனும் அவரது தம்பியான பூ.ஹரன் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அதன்பின்னர் விசாரணைக்கான வலுவான ஆதாரங்களற்று வழக்கு பின்தள்ளப்பட்டு நிலையில் சந்தேகநபரான பிரசாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் அவர் குறித்த வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தினார் என்று புகாரின் அடிப்படையிலேயே மீண்டும் கைதாகியுள்ளார். இப்புகாரானது 2019ஆம் வருடம் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இக் கடிதத்தினை நல்லாட்சி அரசினால் நிறுவப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019/05/03 அன்று கையொப்பம் இட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் சாட்சிகளை பாதுகாக்கும் ஆணைக்குழுவானது அக்கடிதத்தில் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதனடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
எனினும் சாட்சியை அச்சுறுத்தியமை என்கின்ற குற்றச்சாட்டு குறுகிய நோக்கங்களுக்காக சோடிக்கப்பட்ட பொய் எனவும் குறித்தசாட்சியின் மகன்கன்மார் இருவர் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில் அவர்களுக்கான வதிவிட விசாக்களை சுவிஸில் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியே இப்போலி குற்றச்சாட்டு எனவும் சந்தேகநபர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இப்பொய் குற்றச்சாட்டுக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆலோசனையுடனும் வழிகாட்டுதலில் பெயரிலுமே இடம்பெற்றுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் சிறையிலிருந்த போதிலும் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றதன் காரண கர்த்தாவாக செயலாளர் பிரசாந்தன் இருந்தமை அவரை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இச்சதியில் ஈடுபட காரணமானது எனவும் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அடைந்த வெற்றியானது பல சபைகளை கைப்பற்றமுடியாதவாறு தமிழ் தேசியகூட்டமைப்பினருக்கு பாரிய நெருக்கடியை கொடுத்திருந்தமையே அதற்கு காரணமாக சொல்லப்படுகின்றது.
எது எப்படியிருந்தபோதும் அன்று மைத்திரி வைத்த தீ இன்றுவரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நோக்கி பரவிக்கொண்டேயிருக்கின்றது.
கு.சாமித்தம்பி (புளியந்தீவு)
.
0 commentaires :
New comments are not allowed.