கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பரிசோதனை முயற்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யாவில் ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார். இந்த தடுப்பு மருந்தை தன் மகளுக்கு செலுத்தி சோதனை செய்ததாகவும் அந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியிருந்தார்.
தற்போது இந்த தடுப்பு மருந்தை மெக்சிகோ நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மூன்றரை கோடி டோஸ் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவும் மெக்சிகோ ஏற்கனவே பொருளாதார நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
9/10/2020
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment