8/01/2020

அதனால்தான் பிள்ளையானை ஆதரிக்க வேண்டும்

யுத்தம் அப்போதுதான் முடிந்திருந்தது.  முப்பது வருட காலமாக எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலும் முன்னேற்றமும் இன்றி இயங்கி கொண்டிருந்த கல்வி வலையங்கள் சம்பந்தமாக புதிய அலகுகள் அவசியமாயிருந்தன. குறிப்பாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களும் நகரை அண்டிய வளர்ச்சியடைந்த பிரதேசங்களும் இணைந்து காணப்பட்ட கல்வி வலையங்களில் மாற்றம் அவசியமாயிருந்தது. அதாவது பிற்படுத்தப்பட்ட பிரதேச பாடசாலைகளின் தராதரங்களை பிரித்தறிந்து  அதற்கேற்ற திட்டமிடலை மேற்கொள்ள முடியாத நிலைஇருந்தது. எனவே அவசியமான இரண்டு புதிய கல்வி வலையங்கள் உருவாக்கப்பட்டன.மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ...

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  27 பாடசாலைகளும் , பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து  18 பாடசாலைகளும் , மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து  11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்தில் இருந்து   7 பாடசாலைகளையும் இணைத்து 63 பாடசாலைகள் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான  "வவுணதீவு கல்வி வலையம்" உருவாக்கப்பட்டது..அதேபோன்று அக்கரைப்பற்று கல்வி வலையத்திலிருந்து பிரித்து திருக்கோவில் பிரதேசத்தை கருத்தில் கொண்டு புதியதொரு கல்வி வலையமும் உருவாக்கப்பட்டது.. இப்புதிய வலயங்களினை உருவாக்கியமை  பிற்படுத்தப்பட்ட   பிரதேசங்களின் கல்வி வரலாற்றில் பெரும் வரபிரசாதமாகும்.  

கிழக்கு மாகாணமெங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டதுடன் மேலும் பல பாடசாலைகள் விஞ்ஞானகூட தொழினுட்ப வசதிகள் சார்ந்து அபிவிருத்தி செய்யப்பட்டன. அத்துடன் தொழினுட்ப அறிவை மாணவர்களிடையே விருத்தி செய்யும் நோக்குடன் 1260 கணணிகளும்,218 பிரின்டர்களும் வழங்கப்பட்டன.  

0 commentaires :

Post a Comment