7/22/2020

இலங்கை மன்னனான ராவணன் தொடர்பிலான ஆய்வு

பண்டைய கால இலங்கை மன்னனான ராவணன் தொடர்பிலான ஆய்வுகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.10. ஏழாவது ஸர்க்கம் - புஷ்பக விமானம்

இதன்படி, ராவணன் தொடர்பான புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் பத்திரிகை விளம்பரமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சினால் இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மன்னனான ராவணன் மற்றும் நாட்டின் விமானப் போக்குவரத்து வரலாறு குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ச்சிகளை நடத்த விரும்புவதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

ராவணன் மற்றும் தற்போது இழக்கப்பட்டுள்ள வான் வழிப் பாதைகளின் பண்டைய ஆதிக்கம் குறித்து ஆய்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

0 commentaires :

Post a Comment