7/22/2020

"பிள்ளையான் அலை"யில் வவுணதீவு பிரதேசமும் முன்னணியில்

 

 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வவுணதீவு பிரதேச தேர்தல் பரப்புரைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்பாராத விதமாக மாவட்ட ரீதியாக அதிகரித்துவரும் "பிள்ளையான் அலை"யில்  வவுணதீவு பிரதேசமே முன்னணியில் நிற்பதாகவும் அறிய முடிகின்றது.  

கல்குடா தொகுதியானது ஏலவே தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கோட்டையாக இருந்து வரும் வேளையில் இந்த தேர்தலில் மட்டக்களப்பு,மற்றும் பட்டிருப்பு தொகுதிகளிலும் "பிள்ளையான் அலை" யானது  வெகுண்டெழுந்து வருகின்றது. 

 அதன்காரணமாக கடந்த காலங்களில் தமிழரசு கட்சியின் நிரந்தர வாக்குவங்கிகள் இத்தேர்தலோடு தகர்ந்து செல்கின்றன. அதன் அடிப்படையிலேயே மட்டக்களப்பு தொகுதிக்குட்பட்ட வவுணதீவு பிரதேசம் ஏறக்குறைய 80 சதவீத வாக்குகளை தமிழ் மக்களுக்கு வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.









0 commentaires :

Post a Comment