மட்டக்களப்பின் தேர்தல் களநிலை சம்பந்தமாக கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியம் சார்பில் ஒரு கையேடு வெளியாகியுள்ளது.
இக்கையேட்டில் தமிழர் வாக்களிப்பு வீதம் குறைந்து செல்வதன் காரணமாக தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுவருவதாகவும் அதன் காரணமாக தமிழர்களின் அரசியல் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்குமாறும் அரசியல் அதிகாரம் சம்பந்தமாக விழிப்புறுமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் இம்மாணவர் ஒன்றியத்தினர்.
அத்தோடு எதிர்வரும் தேர்தலில் அளிக்கப்படப்போகும் வாக்களிப்பு நிலைமை குறித்த கருத்துக்கணிப்பு பார்வையொன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி என்பவற்றுக்கிடையே பலத்த போட்டி நிலவுவதாகவும் இவ்விரு கட்சிகளும் தலா 72000 வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விரு கட்சிகளையும் தவிர தென்னிலங்கை தேசிய கட்சிகளுக்கும் தேறாத யாழ்ப்பாண கட்சிகளுக்கும் வாக்களிப்பது வீணானதாகும் எனவும் எச்சரித்துள்ளனர் கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியத்தினர்.
இவ்விடயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக மாவட்டம் எங்கும் மக்கள் கூடும் இடங்களில் கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் 'வீதி நாடகங்களை' அரங்கேற்றி வருகின்றனர்.
0 commentaires :
Post a Comment