7/26/2020

தமிழ் தேசியவாதம் என்பது யாழ்.மேட்டுக்குடி மையவாதமே-புத்தகக்கடை மணியண்ணன்

தமிழ் தேசியவாதம் என்பது யாழ்.மேட்டுக்குடி மையவாதமே
இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் போராடவென அகிம்சாவாதத் தலைமைகளிலிருந்து ஆயுதப் போராட்டத் தலைமைகள் வரை பல தலைமைகள் வந்துபோய்விட்டன. ஆனால் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. அது மாத்திரமல்லஇ முன்னர் இருந்த அற்ப சொற்ப உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர். இலங்கைத் தமிழினம் வந்தடைந்துள்ள நிலைமைபோல உலகில் வேறு ஏதாவது ஒரு தேசிய இனம் வந்தடைந்திருக்குமோ தெரியாது.யாழில் நடைபெற்று வரும் தமிழ்த் ...
இதற்கு அடிப்படையான காரணம் என்னவென ஆராய்ந்து பார்க்கும் நிலைமையிலும் எமது தலைமைகளோ அல்லது அறிவுசார் துறையினரோ இல்லாமல் இருப்பது மிகவும் மோசமான ஒரு நிலையாகும்.
உண்மையில் இந்த மாதிரியான ஒரு நிலை ஏற்பட்டதற்கு எமது தலைமைகள் தமிழ் தேசியவாதம் என்ற பெயரில் படு பிற்போக்கான யாழ்ப்பாண மேட்டுக்குடி மையவாத அரசியலை முன்தள்ளி வந்ததே காரணமாகும். இந்த வகையான பிற்போக்கு அரசியலை முன் தள்ளியவர்கள் தமிழ் நிலப்பிரபுத்துவ சக்திகளின் பிரதிநிதிகளாக இருந்த ஆறுமுகநாவலர்இ சேர்.பொன்.இராமநாதன் போன்ற வகையறாக்களே.
இவர்கள் யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிய இறுக்கமான சாதியமைப்பைக் கட்டிக் காத்தனர். பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வழங்கக்கூடாது என்றனர். சைவ சமயத்தை மட்டும் முதன்மைப்படுத்தினர். இவர்களின் வழியில் வந்து தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்தப் பிற்போக்குக் கொள்கைகளுடன் தமிழ் இனவாதத்தையும் சேர்த்துக் கொண்டார். அந்தப் பாரம்பரியமே இன்றைய தலைமைகள் வரை தொடர்கின்றது.
ஆனால் பல உலக நாடுகளில் நடந்தது போலஇ இந்த கொள்கைகளுக்கு மாறான சக்திகளும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றாமல் இல்லை. அப்படியான ஒரு அமைப்பை யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் என்ற பெயரில் 1924இல் இவர்கள் நிறுவினர். பின்னர் அதன் பெயரை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் என 1926இல் மாற்றிக் கொண்டனர். இந்த அமைப்பை நிறுவிய முன்னோடிகள் பெரும்பாலும் இந்தியப் பல்கலைக்கழகங்களிலும்இ கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியிலும் கல்வி பயின்ற தமிழ் மத்தியதர வர்க்க பகுதியினராவர். இவர்களுக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்த ஹான்டி பேரின்பநாயகம் தலைமை தாங்கினார்.
யாழ்ப்பாண மாணவர் - வாலிபர் காங்கிரஸ் யாழ். பிற்போக்கு மேட்டுக்குடி மையவாதிகளின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்தது. இந்தியாவில் காந்தியின் தலைமையில் வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர இயக்கத்தால் ஆகர்சிக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்இ இலங்கைக்கு பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து பூரண சுதந்திரம் கோரி நின்றது. அதன் காரணமாக டொனமூர் ஆணைக்குழு சிபார்சின் அடிப்படையில் 1931இல் நடத்தப்பட்ட சட்டசபைத் தேர்தலை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாகப் பகிஸ்கரிப்பதில் பூரண வெற்றி பெற்றது.
அதுமட்டுமல்லாமல்இ அனைவருக்கும் வாக்குரிமைஇ தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்புஇ பெண் சமத்துவம்இ சீதன ஒழிப்புஇ அனைவருக்கும் கல்வி போன்ற முற்போக்கான கொள்கைகளை வலியுறுத்தி வாலிபர் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் செய்து வந்தது. அதன் காரணமாகஇ பிற்போக்குவாதிகளும் சாதி வெறியர்களும் வாலிபர் காங்கிரஸ் கூட்டங்களை பல தடவைகள் குழப்பியதுடன்இ அதன் தொண்டர்கள் மீதும் பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொண்டனர்.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் அழைப்பை ஏற்று காந்தி 1927இல் யாழ்ப்பாணத்துக்கு சரித்திரப் பிரசித்தி பெற்ற விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதேபோலஇ வாலிபர் காங்கிரசின் மாநாட்டைத் தொடக்கி வைப்பதற்காக 1931இல் இந்தியாவின் புகழ்பூத்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையும்இ சீர்திருத்த மற்றும் பெண்ணியவாதியுமான கமலாதேவி சட்டோபாத்தியாய யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் பல சிங்களத் தலைவர்களும் கூட கவரப்பட்டனர். குறிப்பாக எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அதன் கொள்கைகளை பெரிதும் வரவேற்றார். அதுமட்டுமல்லாமல்இ வாலிபர் காங்கிரசின் பல கூட்டங்களிலும் பண்டாரநாயக்க கலந்து கொண்டு உரையாற்றினார். அவ்வாறு ஒரு கூட்டத்தில் பேசும்பொழுதுதான்இ இலங்கை மூன்று சமஸ்டி அமைப்புகளைக் கொண்ட நாடாக உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது பிரசித்தி பெற்ற கருத்தை முன்வைத்தார்.
ஆனால் தமிழ் மக்களின் தூரதிஸ்டம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தொடர்ந்து இயங்க முடியாமல் போனமையாகும். காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து செயற்படுவதற்கான தெளிவான திட்டம் இல்லாததால் அது செயலிழந்து போய்விட்டது. இந்தச் சூழ்நிலையைஇ அது விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் பயன்படுத்தித்தான் “தமிழன் என்று சொல்லடாஇ தலை நிமிர்ந்து நில்லடா” என்ற இனவாதக் கோசத்துடன் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமது தமிழ் இனவாத அரசியலை ஆரம்பித்து தமிழ் மக்களிடையே விசத்தைத் திணித்தார். அதன் தொடர்ச்சிதான் இன்றைய தமிழ் தலைமைகளின் இனவாத அரசியல். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தொடர்ந்து செயற்பட்டிருந்தால்இ தமிழ் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுஇ தமிழ் மக்கள் வெற்றிகரமான வேறு பாதையில் பயணித்திருப்பர்.
தமிழ் மக்களுக்கு இரண்டாவதொரு சந்தர்ப்பமும் 1980களில் வாய்த்தது. ஏகாதிபத்திய சார்பான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியின் இன ஒடுக்குமுறை அரசுக்கு எதிராகவும்இ அதற்கு துணை நின்ற பிற்போக்குத் தமிழ் தலைமைக்கு எதிராகவும் தமிழ் இளைஞர்கள் தமது கரங்களில் ஆயுதங்களை ஏந்திப் போராடப் புறப்பட்டனர். அவர்களது போராட்டத்தை அழிப்பதற்கு பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்குக் காரணம்இ அவர்களது போராட்டம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் விதைத்த முற்போக்கு உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன்இ பல இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புஇ சோசலிச அபிலாசை என்பனவற்றை அடிப்படையாகவும் கொண்டிருந்தன.
எனவேஇ தமிழ் பிற்போக்கு சக்திகளும்இ ஏகாதிபத்தியவாதிகளும் திட்டமிட்டு புலிகள் என்ற சுத்த இராணுவவாத – பாசிச இயக்கத்தை உருவாக்கிஇ வளர்த்துவிட்டு ஏனைய முற்போக்கு இயக்கங்களை அழித்தொழித்ததின் மூலம் தமிழ் மக்களுக்கு முற்போக்குப் பாதையில் பயணிக்க கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பமும் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் காரணமாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனாதரவானஇ நாதியற்றவர்களாக உழலும் நிலை ஏற்பட்டது.
இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவதுஇ தமிழ் மக்கள் மத்தியில் எப்பொழுது முற்போக்கான இயக்கம் ஒன்று எழுச்சி பெறுகிறதோஇ அப்பொழுது அதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் அந்த எழுச்சியை திட்டமிட்டு அழித்து விடுகின்றனர். எனவேஇ இதிலிருந்து மீள்வதற்கு தமிழ் முற்போக்கு சக்திகள் வழியொன்றை ஏற்படுத்துவது பற்றி ஆராய்ந்து செயற்படுவது இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமானது.

0 commentaires :

Post a Comment