இனப்பிரச்சனை என்பது இன்று புதிய புதிய பரிமாணங்களை எடுத்து விட்டது. யுத்த இழப்புக்கள் எமது வாழ்வியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது.
யுத்த வடுக்கள் மாறமுன்பே கிழக்கிலே எழுந்துள்ள புதிய முஸ்லீம் அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். வடக்கின் பொருளாதாரம் மணியோடர் பொருளாதாரம். யுத்தத்தை வைத்து புலம் பெயர்ந்த யாழ்பாணத்தவர்களால் ஐரோப்பாவில் இருந்துவரும் வெஸ்டர்ன் யூனியன் வங்கிக்கணக்கையே அது நம்பியுள்ளது. வடக்கின் பொருளாதார கட்டமைப்புக்கள் மேற்கு நாடுகளின் வளர்ச்சி கண்டு வருகின்றன.
கிழக்கின் பொருளாதாரமோ அழிந்து கிடக்கின்றது இந்த மண்ணையும், குளத்தையும்,கடலையுமே நம்பியுள்ளது. எமக்கான புதிய கொள்கைகளை வரித்துக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. எமது மக்களை வாழவைக்க அரசியல் அதிகாரத்தில் பங்கெடுத்தே ஆகவேண்டும்.
ஆனால் தமிழரசு கட்சியோ இந்த சமூக சிக்கல்களை புரிந்து கொள்ள முடியாமல் திணறுகின்றது. யாழ்ப்பாணத்தையும் அதன் சூழலையும் மையமாக கொண்டே தமிழரின் அரசியல் நீரோட்டம் இன்றுவரை தீர்மானிக்கப்படுகின்றது. நேரத்துக்கு ஏற்ப நியாயங்கள் மாறும் என்கின்ற சாதாரண விடயத்தை கூட புரிய முடியாதளவு தமிழரசு கட்சியின் பாதை ஒற்றை தடத்தில் இறுகி செல்கின்றது.
எழுபது வருட சிந்தனைகளை இன்று பொருத்தமாக இருக்க முடியாது. அதுமட்டுமன்றி கிழக்கில் உள்ள தமிழரசு கட்சியின் தலைவர்கள்
தமிழரசு கட்சியின் போக்கை தீர்மானிக்கும் மையத்தில் யாழ்ப்பாண மேட்டுக்குடிகளே வீற்றிருக்கின்றனர். கிழக்கின் தலைவர்களோ போலி தமிழ் தேசியத்தில் காவல் நாய்களாக விளிம்பிலேயே குந்த வைக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழரசு கட்சி கிழக்கு மக்களின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யும் தகைமையை இழந்து விட்டது .
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது எம் முன்னோர்கள் கட்டி வளர்த்த ஒரு கட்சிதான். ஆனால் இன்று அது காலாவதியாகி விட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொதுவாக வகுக்கப்பட்ட அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் காலாவதியாகி விட்டன. கடந்த நூற்றாண்டு கொள்ளைகளுடன் நாம் இந்த நூற்றாண்டிலும் பயணிக்க முடியாது.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கை வழிநடத்தும் தகுதியை இழந்து விட்டது.
எனவே சொந்த தகப்பானேயானாலும் இறந்து விட்டால் எத்தனை நாளைக்கு கட்டியழுது கொண்டிருக்க முடியும்? பிணம் அழுகி நாற்றமெடுக்க முன்னர் அடக்கம் செய்து விட்டு அடுத்தவேலையை பார்க்கத்தானே வேணும்.
கு.சாமித்தம்பி
0 commentaires :
Post a Comment