பொதுத்தேர்தலுக்கான தமது கட்சியின் குறிகோள் பற்றி விபரிக்கையில் கருணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விபரித்ததாவது:
கடந்த எழுபது வருட காலமாகத் தேர்தல் வெற்றிகளை மட்டுமே இலக்காகக் கொண்டு வாக்குச் சேகரிப்பதற்காக மக்களை உணர்ச்சியூட்டிய அரசியலால் கிழக்குத் தமிழர்கள் பெற்றுக் கொண்ட நன்மைகள் எதுவுமேயில்லை. பதிலாக இழந்தவைகள்தான் ஏராளம். பத்திரிகை அறிக்கைகளும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களும் பாராளுமன்ற உரைகளும் மட்டுமே இதுகால வரை தமிழர்களின் அரசியலாகும்.
நாம் செயற்பாட்டுத் திறன்மிக்க அறிவுபூர்வமான அரசியலை நோக்கித் திரும்ப வேண்டும். எஞ்சியிருப்பதைக் காப்பாற்றி இழந்தவற்றுள் சிலவற்றையாவது மீட்க வேண்டும்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை எல்லைகள் வகுக்கப் பெற்ற முழு அளவிலான பிரதேச செயலகமாகத் தரம் உயர்த்த வேண்டும்.
முன்னாள் மல்வத்தை கிராமசபைப் பிரதேசத்தையும் வீரச்சோலை மற்றும் வீரமுனை கிராமங்களையும் உள்ளடக்கியதாகப் புதிய தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவொன்றினையும் பின் அதனை அடிப்படையாகக் கொண்ட தனியான பிரதேசசபையொன்றினையும் தனியான பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தையும் உருவாக்குதல் வேண்டும்.
0 commentaires :
Post a Comment