ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அச்சுறுத்தல் விடுப்பதாக பொய்யான செய்திகளை ஏகப்பட்ட செலவு செய்து வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகங்களை வைத்து வெளியிடவேண்டும்?
எல்லாவகையான பிரச்சாரங்களும் தோல்வியில் முடிவடைந்தமையால் இப்போது புதிதாக இந்தப் பொய்ப்பிரச்சாரம் வெற்றிபெறும் என்று கற்பனை செய்கிறார்களா?
அதிலும் ஒருத்தனுக்கு எழுதிக் கொடுத்து வாசிக்க வைத்து அதை ஒளிப்பதிவு செய்து வெளியிடுகிறார்கள்.
எந்தவிதமான வன்முறைகளிலும் தவறிக்கூட பங்கெடுத்துவிடக் கூடாது என்று கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்த பின்னும் அவ்வாறு யாரும் நடந்துகொள்ள வாய்ப்புக்கள் இல்லையே என சந்தேகப்பட்டு விசாரித்தால் கடன் காசு கேட்டுப்போனவனை கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லி மிரட்டியதாக நாடகம் நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்களோ தொண்டர்களோ எந்தவித வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்.
கட்சியின் தலைவர் கடுமையான உத்தரவுகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
மிகவும் கட்டுக்கோப்பான, புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை மட்டக்களப்பில் ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நோக்கம்.
அவ்வாறான ஒரு ஜனநாயகப் பாதையைக் கட்டமைப்பதற்காக அதன் தலைவர் எடுக்கும் முயற்சிகளுக்கு கட்சியின் தொண்டர்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள்.
அவர் அமைக்கும் பாதையில் பயணித்தே இன்று மிகப்பெரும் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் கதிகலங்கச் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கலக்கத்தினால்த்தான் அவர்கள் இன்று பொய்யான செய்திகளை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்யவேண்டிய இழி நிலை உருவாகியுள்ளது.
இப்படியான பொய்யான பரப்புரைகளை பரப்புவதால் கிடைக்கவிருக்கும் ஒருசில வாக்குகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இழக்கும் நிலை உருவாகும் என்றுதான் இவற்றையெல்லாம் ஆழமாக அவதானிக்கும் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எனவே கூட்டமைப்புக் கோமாளிகளே..
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அவமானப்படுத்துவதன் மூலமாக நீங்கள் வெற்றிபெறலாம் என்ற பொய்யான, கற்பனையான சிந்தனைகளை விடுத்து தேர்தலின் பின்னர் நீங்கள் மக்களுக்காக முன்னெடுக்கவுள்ள செயற்திட்டங்களை பற்றி வெளிப்படையாகச் சொல்லி வாக்குச் சேகரிக்க முயற்சியுங்கள்.
kulanthaivel Navaneethan
0 commentaires :
Post a Comment