7/30/2020

வெளியானது மற்றுமோர் கருத்து கணிப்பு -- பலத்த போட்டி - மட்டக்களப்பில்

மட்டக்களப்பின் தேர்தல் களநிலை சம்பந்தமாக கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியம் சார்பில் ஒரு கையேடு வெளியாகியுள்ளது. 

இக்கையேட்டில் தமிழர் வாக்களிப்பு  வீதம் குறைந்து செல்வதன் காரணமாக தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுவருவதாகவும் அதன் காரணமாக தமிழர்களின் அரசியல் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனால் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்குமாறும் அரசியல் அதிகாரம் சம்பந்தமாக விழிப்புறுமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் இம்மாணவர் ஒன்றியத்தினர். 

அத்தோடு எதிர்வரும் தேர்தலில் அளிக்கப்படப்போகும் வாக்களிப்பு நிலைமை குறித்த கருத்துக்கணிப்பு பார்வையொன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி  என்பவற்றுக்கிடையே பலத்த போட்டி நிலவுவதாகவும் இவ்விரு கட்சிகளும் தலா 72000 வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ்விரு கட்சிகளையும் தவிர  தென்னிலங்கை தேசிய கட்சிகளுக்கும் தேறாத யாழ்ப்பாண கட்சிகளுக்கும் வாக்களிப்பது வீணானதாகும் எனவும் எச்சரித்துள்ளனர் கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியத்தினர்.

இவ்விடயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக மாவட்டம்  எங்கும்  மக்கள் கூடும் இடங்களில் கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள்   'வீதி நாடகங்களை'  அரங்கேற்றி வருகின்றனர். 
»»  (மேலும்)

7/29/2020

பிள்ளையான் களுதாவளைக்கு செய்த சேவைகள்

அன்று முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் களுதாவளைக்கு செய்த சேவைகளில்  நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டியவை 

1.விச்சுக்காலை விவசாயிகளுக்கான மின்சார இணைப்பு கொடுத்ததன் ஊடாக களுதாவளையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கியமை.

2.தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்வராசா எம்பியின் சதியை முறியடித்து களுதாவளை மகாவித்தியாலயத்தை ஆயிரம் பாடசாலை திட்டத்தில் உள்வாங்கியமை.

3.களுதாவளை கிராமத்தின் அநேகமான உள்வீதிகளை கொங்கிரிட் வீதிகளாக அபிவிருத்தி செய்தமை.

4.மஹிந்தோதய திட்டத்தின் கீழ் களுதாவளை மகாவித்தியாலயத்தில்  விஞ்ஞான ஆய்வு கூடத்தை நிறுவியமை.

5.களுதாவளை பிள்ளையார் ஆலய கலாசார மண்டப கட்டிட நிதியில் ஒரு பகுதியை வழங்கி பூர்த்தி செய்ய உதவியமை.

6.மற்றும் ஸ்ரீ முருகன் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம், E D S கல்வி நிறுவனம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு பங்களித்தமை.

7.மீனவர் சங்கங்கள்,R D S அமைப்புக்கள்,பெண்கள் அமைப்புக்கள்,சன சமூக நிலையங்கள்  போன்றவற்றுக்கு செய்த பலவித உதவிகள்.

8.நீண்ட காலமாக நிலுவையிலிருந்த விவசாயிகளின்  இலங்கை வங்கி கடன்களை ரத்து செய்து ஏழை விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுத்தமை.

9,களுதாவளை மகா  வித்தியாலயத்துக்கு சிறந்த அதிபர் ஒருவர் இல்லாத நீண்டகால குறையை தீர்த்துவைத்தமை
»»  (மேலும்)

7/28/2020

மட்டக்களப்பில் பிள்ளையான் அபார வெற்றி பெறுவார் வெளியாகியது கி.ப.மா ஒ. கருத்து கணிப்பு

கிழக்கு பல்கலைக்கழகங்கள் பழைய மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பானது எதிர்வரும் தேர்தல் குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு 'பாராளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம்' என்னும் பொருட்பட இக்கையேடு தொகுக்கப்பட்டுள்ளது. Eastern University of Sri Lanka - Free-Apply.com

 இக்கையேட்டில் இன்றைய விகிதாசார பிரதிநிதித்துவம், உறுப்பினர்கள் தேர்வாகும் முறைமைகள், பெண் பிரதிநிதித்துவங்கள், மற்றும் வாக்களிப்பு விகிதங்கள், போன்றவை பற்றிய விளக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இணக்க அரசியல், இனப்பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச ஆதரவு, போன்ற அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த மக்களின் பார்வைகளும்  இவற்றின்பால் மக்கள் கொண்டுள்ள விருப்பு வெறுப்புக்கள் போன்றவை இத்தேர்தலில் செலுத்தப்போகும் தாக்கங்கள் பற்றிய கருத்துக்களும் பதிவாகியுள்ளன. 

அதேவேளை குறித்த கட்சிகள்  சார்ந்து  எத்தனை சத வீதமான மக்கள் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது பற்றிய கருத்துக்கணிப்புக்களும் இக்கையேட்டில் பதிவாகியுள்ளது. 

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதற்கு 51 வீதமானவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் தமிழ் தேசியகூட்டமைப்பை ஆதரிக்க 32வீதமானவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் 
இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இக்கையேட்டின் தயாரிப்பில் பேராசிரியர், மற்றும் விரிவுரையாளர்களான   தணிகைசீலன், சிவகுமாரன், செந்தில் நாதன், சிந்துயா, கிசாந்தி, திவ்யா மிகிரங்கணி, மற்றும் சீவரத்தினம் போன்றோர் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/27/2020

அல்பிரட் துரையப்பா நினைவு தினம்--கொலைக்கலாசாரத்தை தொடக்கி வைத்த தமிழரசு கட்சியினர்

‘அமுது’ சஞ்சிகையின் 2000 ஆண்டு யூலை இதழில் குருசேத்திரன் என்பவர் எழுதிய கட்டுரையை கீழே மறுபிரசுரம் செய்துள்ளோம்)

Sundayobserver.lk: Features | LTTE's ferocity knew no bounds

1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 27திகதி யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா புலிகளால் சுட்டுக்கொலைச் செய்யப்பட்ட நாள் இன்று.

யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு அல்பிரட் துரையப்பாவே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இதே நாளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:-

*1983 - #கொழும்பு_வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

துரோகியாகவும்….தியாகியாகவும்…..
- குருசேத்திரன்


யாழ்ப்பாண மாநகர மேயர் திரு.அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு யூலை 27ம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் முன்றலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவர்கள் இன்றைய புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது சகாக்களும்.

துரையப்பாவின் கொலை இலங்கையில் தமிழர் வரலாற்றில் முதலாவது அரசியல் கொலையாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இக்கொலை தமிழர்களின் வாழ்வில் அரசியல் பயங்கரவாதத்தின் தொடக்கமாகும்.

இன்றைய தலைமுறையினரிடம் “துரையப்பா யார்?” என்றொரு கேள்வியைக் கேட்டால், “அவர் ஒரு தமிழினத் துரோகி” என்ற பதில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். ஏனெனில் இன்று தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்போராக இருப்பவர்கள், அவர் சுடப்பட்ட காலத்தில் சிறுவர்களாக அல்லது அச்சமயம் பிறந்தவர்களாக இருந்ததே.

துரையப்பாவை துரோகியாக இனம் காட்டிய “தளபதி” அமிர்தலிங்கமும், அவரது சகாவான “இளைஞர்களின் இதயக்கனி” யோகேஸ்வரனும் கூட பின்னர் தமிழினத் துரோகிகளாக புலிகளின் தலைவரால் இனம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.

அதுமாத்திரமின்றி, துரையப்பாவைச் சுட்டுவிட்டு தனது வீட்டுக்கு புகலிடம் தேடி வந்த பிரபாகரனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்த யோகேஸ்வரனின் விதவை மனைவி சரோஜினியும் யாழ் மாநகர மேயர் என்ற மகுடத்துடன், “துரோகி” என்ற புலிகளின் மகுடத்தையும் தாங்கியவாறு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்.
தமது அரசியல் எதிரிகளை அரங்கிலிருந்து அகற்ற ஆரம்பித்த துரோக நாடகத்தின் சிருஸ்டிகர்த்தாக்களே அதே நாடகத்தில் துரோகிகளாக வேசம் கட்டப்பட்டதுதான் உச்சக்கட்ட துன்பியல் காட்சியாகும்.
எது எப்படியிருப்பினும், துரையப்பா சுடப்பட்ட காலத்து யாழ்ப்பாண அரசியலை, அக்கறையுள்ளவர்களுக்கு சொல்லி வைப்பது வருங்காலத்திலாவது தமிழர் வாழ்வுக்கு ஒளியேற்றப் பாடுபடுபவர்களுக்கு பயனாக இருக்கும்.

யாழ்ப்பாணப் பாராளுமன்றத் தொகுதி வடக்கு கிழக்கின் மற்றைய தொகுதிகளை விட சற்று வித்தியாசமான ஒரு தொகுதி. தமிழர்களின் தலைநகரம் போல கருதப்பட்ட இத்தொகுதியில் இயல்பாகவே எல்லா இனத்தினரும், எல்லா மதத்தினரும், எல்லாச் சாதியினரும், எல்லாத் தொழில்துறையினரும் நிறைந்து வாழ்ந்தனர். இத்தகைய ஒரு நகரின் செல்வாக்கு மிக்க மேயராக துரையப்பா திகழ்ந்தார். குறிப்பாக, ஏழை மக்கள், சாதி குறைந்த மக்கள், மீனவர்கள், கத்தோலிக்க மக்கள், அநாதரவான பெண்கள் என யாழ்ப்பாணச் சமூகத்தில் இரண்டாம்தர நிலையில் வாழ்ந்த மக்களே துரையப்பாவின் ஆதரவு சக்திகளாகும்.
இத்தொகுதியில் கணிசமாக வாழ்ந்த சைவ – வேளாள மேட்டுக்குடி மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தனர். அதிலும் குறிப்பாக, அந்தக் காலத்தில் வெளிப்படையாகவே சாதி வெறியும் சைவ வெறியும் கொண்டு நின்ற ஜி.ஜி.பொன்னம்பலத்தின் காங்கிரசுக்கே மேட்டுக் குடியினர் ஆதரவு கூடுதலாக இருந்தது.

இடதுசாரிகளின் கட்சிகளுக்கும் கணிசமான செல்வாக்கு இருந்ததால் அவர்களது ஆதரவும் பெரும்பாலும் துரையப்பாவுக்கே. இதனால் தமிழரசுக் கட்சியின் நிலை யாழ்ப்பாணத் தொகுதியில் சற்றுப் பலவீனமாகவே இருந்து வந்தது.
1956ம் ஆண்டுத் தேர்தலில் ஜி.ஜி.பொன்னம்பலம் யாழ்ப்பாண எம்.பியாகத் தெரிவானார். 60ம் ஆண்டுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட துரையப்பா யாழ்ப்பாண எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்தே அவரது செல்வாக்கு தெளிவாகும்.

1970ம் ஆண்டு மட்டுமே தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சி.எக்ஸ்.மார்ட்டின் 64 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். அதுவும் கூட ஒரு முன்னாள் நீதிபதி என்பதும், ஒரு கிறிஸ்தவர் என்பதுமான இரண்டு சாதகமான அம்சங்கள் அவரது வெற்றிக்கு அனுகூலமாக இருந்தன.
இருப்பினும் யாழ்ப்பாண நகரினதும் மக்களினதும் அபிவிருத்தி தேவைகளை கணக்கிலெடுத்த மார்ட்டின், வெற்றி பெற்ற சில நாட்களில் தமிழரசுக் கட்சியை விட்டு விலகி ஸ்ரீமாவோ அரசின் பக்கம் சேர்ந்து கொண்டார்.

இத்தகைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத் தொகுதி எப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு சவாலாகவே இருந்தது. ஊர்காவற்துறையிலும் சாவகச்சேரியிலும் ஒரு தடியை நட்டுவிட்டு தமிழரசுக் கட்சி என்று சொன்னாலும் மக்கள் வோட்டுப் போடுவார்கள் என்று அநாயாசமாகச் சொல்லும் தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் யாழ்ப்பாணத் தொகுதி என்று வந்தால் எப்போதும் மிக அவதானமாகவே இருப்பர்.
1972ல் ஸ்ரீமாவோ அரசு கொண்டு வந்த புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து தனது காங்கேசன்துறை தொகுதி எம்.பி. பதவியை இராஜினாமா செய்து இடைத் தேர்தலொன்றுக்கு வழிவகுத்த தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் அத்தேர்தலில் வென்ற போதும், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட வி.பொன்னம்பலத்திடம் 1970 பொதுத் தேர்தலை விட 1,000 கூடுதல் வாக்குகளை இழக்க நேரிட்டது.

இந்தச் சூழ்நிலையில் அரசியல் ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் துரையப்பாவின் செல்வாக்கை வீழ்த்த முடியாத தமிழ் தலைமை துரையப்பாவை வன்முறையின் மூலம் அழித்துவிட முடிவு எடுத்தது.
துரையப்பாவுக்கு தனிப்பட்ட முறையில் யாழ்ப்பாண மக்களிடம் செல்வாக்கு இருந்தது. துரையப்பா மாநகரசபை மேயராக மட்டுமின்றி, மக்களுடன் அதிகம் தொடர்புடைய யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். பல தமிழ்த் தலைவர்களைப் போலல்லாது பணம் வாங்காமல் ஏழைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞராகவும் இருந்தார். அத்துடன் அவரது மனைவி யாழ்ப்பாணத்தில் டாக்டராகவும் இருந்தார். தனது ஆதரவாளர்களின் நன்மை தீமை நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களின் நிகழ்ச்சிகளிலும் கூட அழைப்பில்லாவிடினும் தவறாமல் கலந்து கொள்ளும் ஒருவராக இருந்தார்.

அதிகாலையிலேயே துரையப்பாவின் வீட்டின் முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணுவதற்காக கூடி நிற்பதைக் காணலாம். இந்தக் காட்சியை வேறு எந்தவொரு தமிழ் அரசியல்வாதியின் வீட்டின் முன்னாலும் அப்போது காண முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய நவீன யாழ்ப்பாணத்தின் சிற்பி துரையப்பாதான் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையாகும். இவருக்கு முன்னர் யாழ் மாநகர அபிவிருத்தியில் சாம் சபாபதியே கூடுதல் அக்கறை கொண்ட மேயராவார்.
துரையப்பாவை அழிப்பதற்கு முன்னர் அதற்குத் தேவையான “துரோகி” முத்திரை குத்தலையும் பிரச்சாரத்தையும் தமிழ்த் தலைமை கனகச்சிதமாக மேற்கொண்டிருந்தது.

1974ல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட 4வது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சிகளின் போது தமிழரசுத் தலைமையாலும், தென்னிந்தியாவிலிருந்து வந்து கலந்து கொண்ட இரா.ஜனார்த்தனம் போன்றோராலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குழப்பங்களின் சூத்திரதாரியாக துரையப்பாவை இனம்காட்டி வேண்டுமென்றே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.

1972ல் கொல்வின் ஆர்.டி.சில்வா உருவாக்கிய, தமிழர்களைப் புறக்கணித்த புதிய அரசியல் சாசனத்தாலும், தமிழ் மாணவர்கள் மீதான பாரபட்சமான தரப்படுத்தல் முறையாலும் விரக்தியும் கோபமும் அடைந்திருந்த தமிழ் இளைஞர்களின் பொது விரோதியாக துரையப்பாவை தமிழ் தலைவர்கள் சித்தரித்து வந்தனர். 1965 – 69 காலகட்டத்தில் டட்லியின் ஐ.தே.க. அரசில் தமிழரசு – காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து தமிழர் உரிமைகளை காற்றில் பறக்கவிட்டதற்குப் பரிசாக 1970 பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தையும், உடுப்பிட்டித் தொகுதியில் மு.சிவசிதம்பரத்தையும் மக்கள் தோற்கடித்தனர்.

பாராளுமன்றத்திற்கு வெளியே விடப்பட்ட வேலையற்ற இத்தலைவர்கள் இருவரும் மூலை முடுக்கெல்லாம் சென்று கருத்தரங்குகள் நடாத்தி தமிழ் இளைஞர்களை அணிதிரட்டினர். சட்டவிரோத வேலைகளில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், 1977 தேர்தலில் தமிழர் கூட்டணி சார்பில் போட்டியிடக் காத்திருந்த யோகேஸ்வரன் வீட்டில் ‘துரோகிகளை’ ஒழிப்பதற்காக தொடர்ச்சியாக மேலதிக ஆலோசனைகளும் திட்டங்களும் இடம் பெற்றன.

தமிழர் கூட்டணியின் அங்குரார்ப்பணத்தை தனது வல்வெட்டித்துறை வீட்டில் முன்னின்று நடாத்திய முன்னாள் உப தபாலதிபர் ஞானமூர்த்தி துணிச்சல் மிக்க வல்வெட்டித்துறை இளைஞர்கள் சிலரை யோகேஸ்வரனுக்கும் இதர தலைவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். அவ்வாறு அறிமுகமாகி துரையப்பாவைக் கொலை செய்தவர்தான் இன்றைய புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன்.

துரையப்பா கொலை செய்யப்பட்ட போது விடுதலைப் புலிகள் உட்பட இப்போதுள்ள எந்த இயக்கமும் உருவாகி இருக்கவில்லை. தமிழர்களின் ஒரேயொரு ஏகபோக கட்சியாக தமிழர் கூட்டணியே விளங்கியது.
எனவே, ஒரு தொகுதியை வெல்வதற்கான அற்பத் தேவைக்காக, ஒரு மக்கள் செல்வாக்குப் பெற்ற நகர முதல்வரைக் கொலை செய்வதற்கு தமிழ் தலைமை திட்டமிட்டு செயலாற்றியது என மக்கள் நம்புவதற்கு இதுவே காரணம்.

தவிரவும், துரையப்பா கொலை செய்யப்பட்ட போது ஆயுதக் கலாச்சாரத்தின் தொடக்கத்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட எந்த தமிழர் கூட்டணித் தலைவரும் கண்டிக்கவில்லை. போதாததிற்கு சுட்டுவிட்டு வந்தவர்களுக்கு தேநீர் தயாரித்துப் பரிமாறியதை தான் சுடப்பட்டதற்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியொன்றில் யோகேஸ்வரன் எம்.பியின் மனைவி சரோஜினியே பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஆனால், துரையப்பாவின் கொலை யாழ்ப்பாணத்தில் அன்று பெரும் கவலையையும் கோபாவேசத்தையும் கிளறியதை நேரில் கண்டவர்கள் நன்கறிவர். கொலைச் செய்தி பரவியதும் சாதாரண பொதுமக்கள் கதறி அழுததுடன், பெரியாஸ்பத்திரியை நோக்கி ஆயிரக்கணக்கில் படையெடுத்தனர்.
அவரது இறுதிச் சடங்கின் போது, பூதவுடல் வைக்கப்பட்டிருந்த யாழ் நகர மண்டபத்திற்கு அதிகாலையிலிருந்து பொழுது சாயும் வரை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வந்து பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத யாழ். முஸ்லீம் பெண்கள் கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கில் அஞ்சலி செலுத்தக் காத்திருந்தனர்.
துரையப்பாவின் மரணச் சடங்கைத் தவிர யாழ்ப்பாணத்தில் அதிக மக்கள் கலந்துகொண்ட மரண நிகழ்வு தமிழர் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினுடையது மட்டுமே.
ஆனால் ஒரு வித்தியாசம் திரு.செல்வநாயகம் இலங்கை முழுவதும் அப்பொழுது வாழ்ந்த 35 இலட்சம் தமிழ் பேசும் மக்களின் தலைவராகவும் தந்தையாகவும் வர்ணிக்கப்பட்டவர். ஆனால் துரையப்பாவோ யாழ் நகரின் சில ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அரசியல் நடத்தியவர்.

துரையப்பாவுக்கு துரோக முத்திரை குத்தியவர்களும் பின்னர் அதே முத்திரையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டனர். ஆனால் தமிழ் பயங்கரவாதத்திற்கு இரையான முதல் களப்பலி என்ற வகையில் துரையப்பாவின் பெயர் மட்டுமே இறுதிவரை நிலைத்து நிற்கும் பெருமை பெற்றது.



யார் குற்றம்?

இன்று யாழ்ப்பாண மாநகர மேயர் திரு.அல்பிரட் துரையப்பா (1975 ஆம் ஆண்டு யூலை 27ம் திகதி) பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் முன்றலில் சுட்டுக் கொல்லப்பட்ட தினம். 

ஒரு தொகுதியை வெல்வதற்கான அற்பத் தேவைக்காக, ஒரு மக்கள் செல்வாக்குப் பெற்ற நகர முதல்வரைக் கொலை செய்வதற்கு தமிழரசு  திட்டமிட்டு செயலாற்றியது  வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது சகாக்களையும் துரையப்பாவை சுட்டுக்கொல்ல தமிழரசு கட்சி பயன்படுத்தியது. 

எதிரியெனப்படுபவனை துரோகியென்று சுட்டுக்கொல்வதே இன்றுமுதல் தமிழர்களின் அறம்  என்னும் வரலாறு தொடக்கி வைக்கப்பட்ட 21 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் பிறந்தார்  பிள்ளையான். 

ஒரு லட்ஷம் கொலைகள் நடந்த நாட்டில் இந்த மட்டக்களப்பான்  மட்டும் விசாரிக்கப்படுகின்றானாம். 

நல்லாட்சி அரசில் தமிழரசு கட்சி மக்களுக்கு செய்த  கேவலமான சாதனை இதுதான்.

பொறுங்கடா மக்காள் இன்னும் எண்ணிச்சில நாட்கள் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.










»»  (மேலும்)

7/26/2020

ஐபிசி தமிழ் பொறுக்கிகளின் கூடாரம். புருஷோத்தமன் தங்கமயில்

ஐ.பி.சி தமிழ்: பொறுக்கிகளின் கூடாரம்!  

இலண்டனை தளமாகக் கொண்டியங்கும் ‘ஐ.பி.சி தமிழ்’ என்கிற ஊடகம், ஊடக விழுமியங்கள்- அறம் சார்ந்து என்றைக்குமே இயங்கி வந்தது இல்லை. தொடர்ச்சியாக ஊடகப் பொறுக்கித்தனங்களின் உச்ச கட்டங்களையே பதிவு செய்து வந்திருக்கின்றது. இந்தத் தேர்தல் கால நிகழ்ச்சிகளைக் காணும் போது, அதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

அதற்கு சின்ன உதாரணம் தான், நான் பின்னூட்டப் பகுதியில் இணைத்திருக்கின்ற ‘Tea கடை’ என்கிற நையாண்டி(!) அரசியல் நிகழ்ச்சி. அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகள் உலகம் பூராக ஊடக சூழலில் இருக்கும் ஒன்றுதான். அதில் பிரச்சினையில்லை. ஆனால், அதில் தரமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும்.

தங்களை தமிழ்த் தேசியத்தின் காவலாளிகளாக தொடர்ந்தும் காட்சிப் படுத்தி வரும் ஐ.பி.சி. கும்பல், இந்த நையாண்டி நிகழ்ச்சியில், எந்தவித அடிப்படை அறிவும் அறமும் இன்றியும், பெண்களை கேலிப் பொருளாகச் சித்தரித்தும் பேசிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் அந்த இரண்டு பேரும், ஆணாதிக்க அசிங்கங்களின் ஒட்டுமொத்த உருவங்களாக நிற்கிறார்கள். எளிய மொழியில் சொல்வதானால், கழிசடைகள்.

“இரண்டு பிகர்களோட ஐ.நா.க்குப் போறியள், மேக்கப் போட்ட சிலுக்கு, எங்களுக்கு பிகர்களைக் காட்டுகிறீர்கள் இல்லை....” இப்படியான உரையாடல் நிகழ்ச்சி பூராவும் பேசப்படுகின்றது. இதில், ஆங்காங்கு சிரிப்பு வேறு. 

ஜனாதிபதி சட்டத்தரணி என்பதன் அடிப்படை அர்த்தமே தெரியாமல், அரசியல் பேசிக் கொண்டிருக்கும் இந்த இரு பண்ணாடைகளும் ‘ஜனாதிபதியின் சட்டத்தரணி’ என்று விடயத்தைத் திரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

ஐ.பி.சி.யின் இன்னொரு விவாத நிகழ்ச்சியில் தோன்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஊடகத்தின் ஆசிரியரான நிராஜ் டேவிட், தாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண், சமூகத்தின் காவல் நாய்கள் என்று கூறுகிறார். ஆனால், அவரது மேற்பார்வையில் வரும், இந்த நிகழ்ச்சியில், இரு பெண்களைப் பற்றி, எந்தவித அடிப்படையும் இல்லாமல் பேசிக் கொண்டிருப்பதை எப்படி ஊக்குவித்து, ஒளிபரப்புகிறார்? இவ்வளவு கீழ்த்தரமான மனகிலேசங்களோடு இருக்கின்றவர்கள்தான், தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் என்றால், தமிழ்த் தேசியம் கறை படிந்ததாகிவிடும். 

நிராஜ் டேவிட் கலந்து கொண்டிருந்த அதே நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் பா.நடேசனும் கலந்து கொண்டு தாயக அரசியல் பற்றியும், தேவை பற்றியும், அறம் பற்றியும் பேசுகிறார். நான் நினைக்கிறேன், அவர் ‘தமிழ் சொலிடாரிட்டி’ என்கிற இயக்கத்தின் ஒரு உறுப்பினர் என்று. சமூக அநீதிகளுக்கு எதிராக பிரித்தானியாவில் இருந்து போராடுகின்ற இயக்கம் அது. இந்தியா, இலங்கை தொடங்கி எங்கு சமூக அநீதிகள் இடம்பெற்றாலும், அதற்கு எதிராக பொங்குவார்கள்; போராடுவார்கள். ஆனால், பெண்கள் இருவரை, ‘பிகர்கள், மேக்கப் போட்ட சிலுக்கு, அவர்களை கொண்டு திரியிறார்’ என்கிற உரையாடல்களை பேசுகின்ற ஊடகத்தைக் கண்டு கொள்வதும் இல்லை. கண்டிப்பதும் இல்லை. நடேசன் என்கிற இளைஞர், எந்த அறத்தின் அடிப்படையில், இவ்வாறான நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும், நிராஜ் டேவிட்டோடு ஒரே விவாத அரங்கை பகிர்ந்து கொள்கிறார்?

அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்பது என்பது, அசிங்கங்களை அரங்கேற்றுவது அல்ல. அதுபோல, மஞ்சள் பத்திரிகைகளின் வேலைகளை தொலைக்காட்சி வழி செய்வதுமல்ல. அதுவும், தமிழ்த் தேசியக் காவலர்கள் என்கிற போர்வையின், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அசிங்கங்களை அரங்கேற்றுவது, அயோக்கியத்தனங்களின் உச்சம். அதனை புலம்பெயர் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தாயகத்தில் இந்த ஊடகங்களினால் பெரிய தாக்கம் செலுத்த முடிவதில்லை. அதனால், மக்கள் தப்பித்துக் கொள்வார்கள். 

அந்த நிகழ்ச்சியின் காணொலி முதலாவது பின்னூட்டத்தில்...
»»  (மேலும்)

கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்து வரும் தமிழர் பிரதிநிதித்துவங்கள்

கிழக்கு மாகாணத்தின் கடந்த காலப் பொதுத் தேர்தல்களில் இனத்துவ ரீதியாகத் தமிழர்கள் பின்தள்ளப்பட்டு வருவதைப் பொறுப்புடன் எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. வெறுமனே கிழக்கு மாகாணமும் தமிழரின் தாயகப் பிரதேசம் என்று கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. அதனை உறுதிப்படுத்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டியது தமிழர் பிரதிநிதிகளின் கடமை ஆகும்.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சிங்கள ...

இலங்கையின் அரசியலமைப்பின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டும் தமிழ் மொழிக்கு முதன்மை நிர்வாக உரிமையுள்ள மாகாணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி மேற்படி  இரு மாகாணங்களும் தமிழர்களின் தாயகப் பகுதிகள் என்பதும் தெளிவாகின்றது.

தமிழர் பிரதிநிதித்துவங்கள் இவ்வாறு குறைவடைவதற்கு தமிழர் மத்தியிலே பல்வேறு தரப்பினர் பிளவுபட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது ஒரு காரணியாயுள்ளது. அத்துடன் தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி மாற்று சமூகத்தினரது பிரதிநிதித்துவ அதிகரிப்புக்காக செயற்படும்  தமிழர்  தரப்பும்,வாக்களிப்பில் அக்கறை செலுத்தாத தமிழர் தரப்பும் காரணமானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையின்படி சிந்தித்து,ஒன்றுபட்டு இனத்துவ நலன் கருதி வாக்களிக்காவிட்டால் இருக்கும் தமிழர் பிரதிநிதித்துவங்களுக்கும் இழப்பு ஏற்பட வழி வகுத்ததாயமையும்.

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டைஆள, மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றபடி தரமும்,தகுதியும்,திறமையும், இனநல நோக்கும் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பும் கடமையும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களைச் சார்ந்தது.

த.மனோகரன்
(துணைத் தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்)





»»  (மேலும்)

வட கொரியா: முதல் கொரோனா தொற்று என அரசு அறிவிப்பு- என்ன நிலவரம்?

 

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று என அரசு அறிவிப்பு- என்ன நிலவரம்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர், இருநாட்டு எல்லை வழியாகக் கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்திய வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், எல்லை நகரான கேசாங்கில் பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.

தங்கள் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பே இல்லை என முன்பு வட கொரியா கூறியிருந்தது. ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை என நிபுணர்கள் கூறினர்.

''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற நபர், கடந்த ஜூலை 19-ம் தேதி சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது'' என கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வைரசைக் கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை உடனே செய்யுமாறு சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் கிம் வலியுறுத்தினார்.

அத்துடன், கடும் பாதுகாப்புகள் நிறைந்த எல்லையை அந்த நபர் எப்படிக் கடந்துவந்தார் என்பது குறித்த விசாரணைக்கு கிம் உத்தரவிட்டுள்ளார் என்றும், இதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார் என்றும் கேசிஎன்ஏ கூறுகிறது.

»»  (மேலும்)

தமிழ் தேசியவாதம் என்பது யாழ்.மேட்டுக்குடி மையவாதமே-புத்தகக்கடை மணியண்ணன்

தமிழ் தேசியவாதம் என்பது யாழ்.மேட்டுக்குடி மையவாதமே
இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் போராடவென அகிம்சாவாதத் தலைமைகளிலிருந்து ஆயுதப் போராட்டத் தலைமைகள் வரை பல தலைமைகள் வந்துபோய்விட்டன. ஆனால் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. அது மாத்திரமல்லஇ முன்னர் இருந்த அற்ப சொற்ப உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர். இலங்கைத் தமிழினம் வந்தடைந்துள்ள நிலைமைபோல உலகில் வேறு ஏதாவது ஒரு தேசிய இனம் வந்தடைந்திருக்குமோ தெரியாது.யாழில் நடைபெற்று வரும் தமிழ்த் ...
இதற்கு அடிப்படையான காரணம் என்னவென ஆராய்ந்து பார்க்கும் நிலைமையிலும் எமது தலைமைகளோ அல்லது அறிவுசார் துறையினரோ இல்லாமல் இருப்பது மிகவும் மோசமான ஒரு நிலையாகும்.
உண்மையில் இந்த மாதிரியான ஒரு நிலை ஏற்பட்டதற்கு எமது தலைமைகள் தமிழ் தேசியவாதம் என்ற பெயரில் படு பிற்போக்கான யாழ்ப்பாண மேட்டுக்குடி மையவாத அரசியலை முன்தள்ளி வந்ததே காரணமாகும். இந்த வகையான பிற்போக்கு அரசியலை முன் தள்ளியவர்கள் தமிழ் நிலப்பிரபுத்துவ சக்திகளின் பிரதிநிதிகளாக இருந்த ஆறுமுகநாவலர்இ சேர்.பொன்.இராமநாதன் போன்ற வகையறாக்களே.
இவர்கள் யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிய இறுக்கமான சாதியமைப்பைக் கட்டிக் காத்தனர். பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வழங்கக்கூடாது என்றனர். சைவ சமயத்தை மட்டும் முதன்மைப்படுத்தினர். இவர்களின் வழியில் வந்து தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்தப் பிற்போக்குக் கொள்கைகளுடன் தமிழ் இனவாதத்தையும் சேர்த்துக் கொண்டார். அந்தப் பாரம்பரியமே இன்றைய தலைமைகள் வரை தொடர்கின்றது.
ஆனால் பல உலக நாடுகளில் நடந்தது போலஇ இந்த கொள்கைகளுக்கு மாறான சக்திகளும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றாமல் இல்லை. அப்படியான ஒரு அமைப்பை யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் என்ற பெயரில் 1924இல் இவர்கள் நிறுவினர். பின்னர் அதன் பெயரை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் என 1926இல் மாற்றிக் கொண்டனர். இந்த அமைப்பை நிறுவிய முன்னோடிகள் பெரும்பாலும் இந்தியப் பல்கலைக்கழகங்களிலும்இ கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியிலும் கல்வி பயின்ற தமிழ் மத்தியதர வர்க்க பகுதியினராவர். இவர்களுக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்த ஹான்டி பேரின்பநாயகம் தலைமை தாங்கினார்.
யாழ்ப்பாண மாணவர் - வாலிபர் காங்கிரஸ் யாழ். பிற்போக்கு மேட்டுக்குடி மையவாதிகளின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்தது. இந்தியாவில் காந்தியின் தலைமையில் வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர இயக்கத்தால் ஆகர்சிக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்இ இலங்கைக்கு பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து பூரண சுதந்திரம் கோரி நின்றது. அதன் காரணமாக டொனமூர் ஆணைக்குழு சிபார்சின் அடிப்படையில் 1931இல் நடத்தப்பட்ட சட்டசபைத் தேர்தலை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாகப் பகிஸ்கரிப்பதில் பூரண வெற்றி பெற்றது.
அதுமட்டுமல்லாமல்இ அனைவருக்கும் வாக்குரிமைஇ தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்புஇ பெண் சமத்துவம்இ சீதன ஒழிப்புஇ அனைவருக்கும் கல்வி போன்ற முற்போக்கான கொள்கைகளை வலியுறுத்தி வாலிபர் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் செய்து வந்தது. அதன் காரணமாகஇ பிற்போக்குவாதிகளும் சாதி வெறியர்களும் வாலிபர் காங்கிரஸ் கூட்டங்களை பல தடவைகள் குழப்பியதுடன்இ அதன் தொண்டர்கள் மீதும் பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொண்டனர்.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் அழைப்பை ஏற்று காந்தி 1927இல் யாழ்ப்பாணத்துக்கு சரித்திரப் பிரசித்தி பெற்ற விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதேபோலஇ வாலிபர் காங்கிரசின் மாநாட்டைத் தொடக்கி வைப்பதற்காக 1931இல் இந்தியாவின் புகழ்பூத்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையும்இ சீர்திருத்த மற்றும் பெண்ணியவாதியுமான கமலாதேவி சட்டோபாத்தியாய யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் பல சிங்களத் தலைவர்களும் கூட கவரப்பட்டனர். குறிப்பாக எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அதன் கொள்கைகளை பெரிதும் வரவேற்றார். அதுமட்டுமல்லாமல்இ வாலிபர் காங்கிரசின் பல கூட்டங்களிலும் பண்டாரநாயக்க கலந்து கொண்டு உரையாற்றினார். அவ்வாறு ஒரு கூட்டத்தில் பேசும்பொழுதுதான்இ இலங்கை மூன்று சமஸ்டி அமைப்புகளைக் கொண்ட நாடாக உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது பிரசித்தி பெற்ற கருத்தை முன்வைத்தார்.
ஆனால் தமிழ் மக்களின் தூரதிஸ்டம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தொடர்ந்து இயங்க முடியாமல் போனமையாகும். காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து செயற்படுவதற்கான தெளிவான திட்டம் இல்லாததால் அது செயலிழந்து போய்விட்டது. இந்தச் சூழ்நிலையைஇ அது விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் பயன்படுத்தித்தான் “தமிழன் என்று சொல்லடாஇ தலை நிமிர்ந்து நில்லடா” என்ற இனவாதக் கோசத்துடன் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமது தமிழ் இனவாத அரசியலை ஆரம்பித்து தமிழ் மக்களிடையே விசத்தைத் திணித்தார். அதன் தொடர்ச்சிதான் இன்றைய தமிழ் தலைமைகளின் இனவாத அரசியல். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தொடர்ந்து செயற்பட்டிருந்தால்இ தமிழ் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுஇ தமிழ் மக்கள் வெற்றிகரமான வேறு பாதையில் பயணித்திருப்பர்.
தமிழ் மக்களுக்கு இரண்டாவதொரு சந்தர்ப்பமும் 1980களில் வாய்த்தது. ஏகாதிபத்திய சார்பான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியின் இன ஒடுக்குமுறை அரசுக்கு எதிராகவும்இ அதற்கு துணை நின்ற பிற்போக்குத் தமிழ் தலைமைக்கு எதிராகவும் தமிழ் இளைஞர்கள் தமது கரங்களில் ஆயுதங்களை ஏந்திப் போராடப் புறப்பட்டனர். அவர்களது போராட்டத்தை அழிப்பதற்கு பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்குக் காரணம்இ அவர்களது போராட்டம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் விதைத்த முற்போக்கு உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன்இ பல இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புஇ சோசலிச அபிலாசை என்பனவற்றை அடிப்படையாகவும் கொண்டிருந்தன.
எனவேஇ தமிழ் பிற்போக்கு சக்திகளும்இ ஏகாதிபத்தியவாதிகளும் திட்டமிட்டு புலிகள் என்ற சுத்த இராணுவவாத – பாசிச இயக்கத்தை உருவாக்கிஇ வளர்த்துவிட்டு ஏனைய முற்போக்கு இயக்கங்களை அழித்தொழித்ததின் மூலம் தமிழ் மக்களுக்கு முற்போக்குப் பாதையில் பயணிக்க கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பமும் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் காரணமாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனாதரவானஇ நாதியற்றவர்களாக உழலும் நிலை ஏற்பட்டது.
இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவதுஇ தமிழ் மக்கள் மத்தியில் எப்பொழுது முற்போக்கான இயக்கம் ஒன்று எழுச்சி பெறுகிறதோஇ அப்பொழுது அதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் அந்த எழுச்சியை திட்டமிட்டு அழித்து விடுகின்றனர். எனவேஇ இதிலிருந்து மீள்வதற்கு தமிழ் முற்போக்கு சக்திகள் வழியொன்றை ஏற்படுத்துவது பற்றி ஆராய்ந்து செயற்படுவது இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமானது.
»»  (மேலும்)

7/25/2020

பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் எனும் அடிப்படையிலும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவே இம்முறை தேர்தலில்
எமக்கு உரித்தான விருப்பு வாக்குகள் மூன்றில் ஒரு விருப்புவாக்கையேனும்
பெண்ணொருவருக்காகப் பயன்படுத்துவோம். எனும் அடிப்படையிலும் அவளுக்கு ஒரு வாக்கு எனும் பிரச்சார செயற்திட்டம் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் வலயமைப்புக்கள் இணைந்து நடாத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்த ஓர் பிரச்சாரமாகும். தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது தனிக் கட்சி சார்ந்தோ இப்பிரச்சாரம் மேற்கொள்ளப் படவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பெண் வேட்பாளருக்குமான பிரச்சாரமாகும். இப்பிரச்சாரத்தின் ஊடாக. பெண்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதனை வீதி நாடகத்தின் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தல் வழங்கப்படுகின்றது.
»»  (மேலும்)

யாழ் மேட்டுக்குடி கனவான்களின் காவல் நாய்களே தமிழரசு கட்சி வேட்பாளர்கள்

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...



இனப்பிரச்சனை என்பது இன்று புதிய புதிய பரிமாணங்களை எடுத்து விட்டது. யுத்த இழப்புக்கள்  எமது வாழ்வியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது.
யுத்த வடுக்கள் மாறமுன்பே கிழக்கிலே எழுந்துள்ள புதிய முஸ்லீம் அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.  வடக்கின் பொருளாதாரம் மணியோடர் பொருளாதாரம். யுத்தத்தை வைத்து புலம் பெயர்ந்த யாழ்பாணத்தவர்களால்  ஐரோப்பாவில் இருந்துவரும் வெஸ்டர்ன் யூனியன் வங்கிக்கணக்கையே அது   நம்பியுள்ளது. வடக்கின் பொருளாதார கட்டமைப்புக்கள் மேற்கு நாடுகளின் வளர்ச்சி கண்டு வருகின்றன. 

கிழக்கின் பொருளாதாரமோ அழிந்து கிடக்கின்றது இந்த மண்ணையும், குளத்தையும்,கடலையுமே நம்பியுள்ளது. எமக்கான புதிய கொள்கைகளை வரித்துக்கொள்ள வேண்டிய  தேவை எழுந்துள்ளது. எமது மக்களை வாழவைக்க அரசியல் அதிகாரத்தில் பங்கெடுத்தே ஆகவேண்டும். 
ஆனால் தமிழரசு கட்சியோ இந்த சமூக சிக்கல்களை  புரிந்து கொள்ள முடியாமல் திணறுகின்றது. யாழ்ப்பாணத்தையும் அதன் சூழலையும் மையமாக கொண்டே தமிழரின் அரசியல் நீரோட்டம் இன்றுவரை தீர்மானிக்கப்படுகின்றது. நேரத்துக்கு ஏற்ப நியாயங்கள் மாறும் என்கின்ற சாதாரண விடயத்தை கூட புரிய முடியாதளவு தமிழரசு கட்சியின் பாதை ஒற்றை தடத்தில் இறுகி செல்கின்றது. 

எழுபது வருட சிந்தனைகளை இன்று பொருத்தமாக இருக்க முடியாது. அதுமட்டுமன்றி கிழக்கில் உள்ள தமிழரசு கட்சியின் தலைவர்கள் 
தமிழரசு கட்சியின் போக்கை தீர்மானிக்கும் மையத்தில் யாழ்ப்பாண மேட்டுக்குடிகளே வீற்றிருக்கின்றனர். கிழக்கின் தலைவர்களோ   போலி தமிழ் தேசியத்தில் காவல் நாய்களாக  விளிம்பிலேயே குந்த வைக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழரசு கட்சி  கிழக்கு மக்களின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யும் தகைமையை இழந்து விட்டது .  
  
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது எம்  முன்னோர்கள்  கட்டி வளர்த்த ஒரு கட்சிதான். ஆனால் இன்று அது காலாவதியாகி விட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொதுவாக  வகுக்கப்பட்அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் காலாவதியாகி விட்டன.  கடந்த நூற்றாண்டு கொள்ளைகளுடன் நாம் இந்த நூற்றாண்டிலும் பயணிக்க முடியாது. 
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கை வழிநடத்தும் தகுதியை இழந்து விட்டது.

எனவே சொந்த தகப்பானேயானாலும் இறந்து விட்டால்  எத்தனை நாளைக்கு கட்டியழுது கொண்டிருக்க  முடியும்?  பிணம் அழுகி நாற்றமெடுக்க முன்னர் அடக்கம் செய்து விட்டு அடுத்தவேலையை பார்க்கத்தானே வேணும்.  

கு.சாமித்தம்பி 


»»  (மேலும்)

7/23/2020

உணர்ச்சியூட்டும் அரசியலால் தமிழருக்கு கிடைத்த நன்மை எதுவுமே இல்லை

பொதுத்தேர்தலுக்கான தமது கட்சியின் குறிகோள் பற்றி விபரிக்கையில் கருணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விபரித்ததாவது:

கடந்த எழுபது வருட காலமாகத் தேர்தல் வெற்றிகளை மட்டுமே இலக்காகக் கொண்டு வாக்குச் சேகரிப்பதற்காக மக்களை உணர்ச்சியூட்டிய அரசியலால் கிழக்குத் தமிழர்கள் பெற்றுக் கொண்ட நன்மைகள் எதுவுமேயில்லை. பதிலாக இழந்தவைகள்தான் ஏராளம். பத்திரிகை அறிக்கைகளும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களும் பாராளுமன்ற உரைகளும் மட்டுமே இதுகால வரை தமிழர்களின் அரசியலாகும்.

நாம் செயற்பாட்டுத் திறன்மிக்க அறிவுபூர்வமான அரசியலை நோக்கித் திரும்ப வேண்டும். எஞ்சியிருப்பதைக் காப்பாற்றி இழந்தவற்றுள் சிலவற்றையாவது மீட்க வேண்டும்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை எல்லைகள் வகுக்கப் பெற்ற முழு அளவிலான பிரதேச செயலகமாகத் தரம் உயர்த்த வேண்டும்.

முன்னாள் மல்வத்தை கிராமசபைப் பிரதேசத்தையும் வீரச்சோலை மற்றும் வீரமுனை கிராமங்களையும் உள்ளடக்கியதாகப் புதிய தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவொன்றினையும் பின் அதனை அடிப்படையாகக் கொண்ட தனியான பிரதேசசபையொன்றினையும் தனியான பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தையும் உருவாக்குதல் வேண்டும்.

»»  (மேலும்)