caption |
நான் உங்கள் பிள்ளையான் பேசுகிறேன்,
என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, உழைக்கும் மக்களே, உத்தியோகஸ்த்தர்களே, மாணவர்களே! உங்கள் அனைவரோடும் ஒரு சில நிமிடங்கள் உரையாட விரும்புகின்றேன்.
எமது அரசியல் வரலாறு என்பது சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக மேட்டுக்குடி தலைமைகளினால் பிழையாக வழிநடத்தப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக நாம் நமது சொந்த மூளைகளை தொலைத்து நிற்கின்றோம்.
எமது நாட்டில் நடைபெறுகின்ற ஒவ்வொரு ஆட்சி அதிகார மாற்றங்களிலும் எமது மக்களின் குரல்கள் பலவீனப்பட்டு போயுள்ளன. தனி நாட்டுக்காக போராடிய ஓர் இனம் இன்று கிழக்கில் தனது இருப்பிற்காக போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வந்து நிற்கின்றது. எம்மைச் சூழ எழுந்து நிற்கின்ற அதிகார வர்க்கங்களை எப்படி நாம் எதிர்கொள்ளப் போகின்றோம்?
மட்டக்களப்பான் மதியிழந்து மட்டுமன்றி மானம் இழந்தும் நின்றான் என்று எமது எதிர்கால சந்ததிகள் எம்மை தூற்றவேண்டுமா? இல்லையா? என்பதை நிச்சயிக்கப் போகின்ற தருணமாக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் அமையப் போகின்றது. இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய கடமைப்பாடு மண்ணின் மைந்தன் ஆகிய எனக்குண்டு.
எமது கட்சியானது காட்டிலும், கடலிலும், நெருப்பிலும் கூட புடம் போட்டுப்பட்டு நிமிர்ந்து நிற்கும் கட்சியென்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பலவிதமான இன்னல்களையும் உயிரிழப்புகளையும், தியாகங்களையும் தாண்டி வந்த புலிகள் நாங்கள். ஆனால் எமது வளர்ச்சியையும் தனித்துவத்தையும் சிதறடித்து, சீர்குலைக்க நாலாபுறங்களிலும் இருந்தும் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அத்தகைய சதிகளில் ஒன்றே இந்த பிள்ளையான் மீதான அரசியல் பழிவாங்கலாகும். இன்றும் கூட கிழக்கின் தனித்துவத்தைக் கட்சியை அழித்தொழிக்க பலமுனைகளிலிருந்தும் போலித் தமிழ் தேசியவாதிகள் களமிறங்குகின்றனர். ஆனாலும் நாம் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி கிழக்கின் தனித்துவம், கிழக்கின் தலைமை என்று எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் உரிமை குரல்களையும் உயர்த்தி பிடித்து நிற்கின்றோம்.
எதிர்வரும் தேர்தலில் எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் விருப்பங்களுக்கும் வேண்டுகோளிற்க்கும் மதிப்பளித்து எமது தனித்துவ அடையாளமாகிய படகு சின்னத்தில் களமிறங்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை எடுத்துள்ளோம்.
எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை தொடக்கமாக வைத்து கிழக்கு தமிழர்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அந்த ஒற்றுமை ஊடாக படகு சின்னத்துக்கு வரலாறு காணாத வெற்றியை ஈட்டித்தர வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் உங்கள் பிள்ளையான்.
0 commentaires :
Post a Comment