கூட்டமைப்பின் வேட்பாளர்
Govindan Janaa Karunakaram
அவர்கள் தனது தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பல விடயங்களைப் பேசியிருந்தார். அவை அனைத்துக்கும் என்னால் விளக்கமாக பதில் தர முடியும். உங்கள் பேச்சுக்கான பதில்கள் தெளிவாக கிடைக்கும்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்குகளை ஒப்பிட்டு பேசிய நீங்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குகளை ஒப்பிட்டுப் பேசியிருக்கலாமே. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிலவரத்தினை ஒப்பிட்டால் நீங்கள் மூக்குடைபட்டவைகள் வெளிப்பட்டுவிடும் என்றா?
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலே உங்களுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத அரசியல்வாதியாகவா நீங்கள். அல்லது அரசியலுக்காக மக்களை முட்டாள் ஆக்கலாம் என்றா நினைக்கின்றீர்கள்.
நீங்கள் கூறிய 7000 சிங்கள வாக்குகளின் சரியான புள்ளிவிபர தகவல்களை வெளியிட முடியுமா?
கடந்த காலங்களிலே நமது இனம் பட்ட துன்பங்கள் அவலங்கள் பற்றி பேசியுள்ளீர்கள். புலிகளின் காலத்தில் மாற்று இயக்கங்களினால் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், கடத்தல்கள், கொலைகள், கற்பழிப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள் என்று அனைத்தையும் நான் நேரடியாகவே பாரத்தவன், அனுபவித்தவன். தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் துன்பங்கள் பற்றி பேசுவதற்கு கூட்டமைப்பிலுள்ள எந்த இயக்கத்திற்கும் அருகதை இல்லை ( காரணம் கேட்டால் புட்டுப், புட்டு வைக்க முடியும்)
அடிக்கடி ரவுண்டப் பண்ணி புலிகளுக்கு உதவினார்கள் என்பதற்காக கோடரிப் பிடிகளால் தாக்கி சித்திரைவதை செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லபட்டதை சிறு வயதில் வேடிக்கை பார்த்தவன் நான். அந்த அப்பாவிகள் இதுவரை எங்கே என்பதுகூட தெரியாது. அவர்களின் குடும்பங்கள் இப்போது படும் கஸ்ரங்களையும் நேரில் அவதானிப்பவன்.
நன்றி *சந்துரு யோகராஜா
0 commentaires :
Post a Comment