6/20/2020

அதிர்ந்து பேசாத ஆளுமை-அஞ்சலி மண்டூர் மகேந்திரன்

அஞ்சலி
மண்டூர் மகேந்திரன்
மெல்லியன் ஆனால் வல்லியன்
மகேந்திரனை நான் சந்தித்தது கொழும்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் வீட்டில் நான் கிழகுப் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக முன் நடந்த அந்தச் சந்திப்பு பேராசிரியர் அவர்கள்தான் அவரை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தவர்.
அதன் பின் தொடர்புகள் நீண்டன.மட்டக்களப்பு வந்த பின் அடிக்கடி அவரை சந்திக்கும் சந்தற்பங்கள் அசியல் சமூக இலக்கிய அக்கறை கொண்ட ஆளுமையாய் அவரை அறிந்து கொண்டேன்.
மட்டக்களப்பின் வரலாறு கலை கலாசார மரபுகளில் தீவிர அக்கறை கொண்டவராய் நான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில்  பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை சந்திக்க செல்லும் அனேக வேளைகளில் மகேந்திரன் அங்கு இருப்பார்.
எங்கள் உரையாடல் பல் துறை சார்ந்ததாய் தொடரும் அடிக்கடி அவர் சொல்கிற விடயம் "மட்டக்களப்பின் வரலாறு முழுமையாய் எழுதப் படணும் எல்லாம் துண்டு துண்டா கிடக்கு" அந்த ஆதங்கம் இன்னமும் நிறைவேறாமலேயே கிடக்கு.தான் பிறந்த மண் மீது தீராக் காதல் கொண்ட மண் பற்றாளன் திருமிகு மகேந்திரன்.
மண்டூர் பல மாண்புறும் மனிதர்களைத் தந்த மண் அந்த வகையில் மண்டூர் பெருமையுறும் சமூக அக்கறை மிக்க செயல் மறவன் மண்டூர் மகேந்திரன்.
அதிர்ந்து பேசாத ஆளுமை. நன்றி* பாலசிங்கம்  பாலசுகுமார்

0 commentaires :

Post a Comment