6/15/2020

மட்டக்களப்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஆளுமை கேள்விக்குறியாகி உள்ளது

தேர்தல் கணக்குகள் மாறுமா
இம் முறை தேர்தல் கணக்குகளும் ஆருடங்களும் தமிழ் பிரதேசங்களில் மாறுகின்ற சூழ் நிலையும் மாற்றத்துக்கான திறவுகோல் கணக்குகளை மாற்றும் கரங்களுக்கு செல்லும் வாய்ப்பும், அதிகமாய் உணரப் படுவதாக நான் நினைக்கிறேன்
அரசியல் என்பது கொள்கை சார்ந்தது  ஒரு வகை கவர்ச்சி நிறைந்தது அந்த கவர்ச்சி என்பது பல்வகைப் பட்டு பிரதிபலிக்கும் .
ஒரு காலம் ஒன்றிருந்தது மட்டக்களப்பின் சொல்லின் செல்வர் என்று அழைக்க்கப் பட்ட இராஜதுரையின் பேச்சுக்களைக் கேட்பதற்காகவே பெரும் கூட்டம் கூடும்.அது கிழக்கில் இருந்து வடக்கு வரை, அவர் பேச்சை கேட்கவும் பார்க்கவும் ஆர்வம் இருந்தது. நான் என் சின்ன வயதில் அவர் பேச்சை ஓடி ஓடி பார்த்திருக்கிறேன்.தந்தை செல்வா பேச்சுத் திறன் வாய்க்கப் பெறாதவர்தான் ஆனால் அவர் சொல்வதில் உண்மை இருபதாக மக்கள் நம்பினர்.நம்பிக்கைக்குரிய ஒரு தலைவராக தமிழ் மக்கள் கருதினர்
இன்றைய நிலையில் தமிழர் அரசியல் கவர்ச்சியோ உண்மைத் தன்மையோ இல்லாமல் போய் விட்ட ஒரு காலமாய் உள்ளது .
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் வலம் வந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.இந்தக் கால கட்டத்தில் இவர்கள் செய்த ஒரே வேலை ஐக்கியதேசியக் கட்சியையும் ரனில் விக்கிரம சிங்கவையும் ஆட்சிக் கட்டிலில் அப்படியே உட்கார வைக்க, எடுத்த பிரயத்தனங்களேயாகும்.
தமிழ் மக்களுக்க்கான உரிமைகள் தொடர்பாக எந்த அழுத்தமும் பிரயோகிக்காமல் ரனிலுக்கு முதுகு சொறியும் வேலையயையே செய்தனர்.இவர்கள் சொல்லலாம் நிதி ஒதுக்கீடுகள் செய்தோம் என ஒரு கம்புத் தடி  பாராளுமன்ற உறுப்பினராய் இருந்தால் கூட நிதி ஒதுக்கீடுகள் நடை பெறும்.
வெற்றுக் கோசம் உள்ள அரசியல் வாதிகளாகவே இவர்கள் வலம் வந்தார்கள் .சலுகைக் கார்களும் சம்பளமும் பென்சனுக்கு மேல் பென்சனாய் தொடர, மக்கள் வாழ்வும் வாழ் நிலங்களும் ஒவ்வொரு நாளும் பறிபோகும் அவலமுமாய் தொடரும் நிலமையே .
இம்முறை இவர்கள் கணக்குகள் மாறுவதற்கான வாய்ப்புகளே   யாழ்ப்பாணம் ,வன்னி,மட்டக்களப்பு,அம்பாறை என அகலித்து கிடக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இடதுசாரிகள் தங்களுக்கான தளத்தில் புதிய வேகத்துடன் களத்தில் உள்ளனர்.
மக்கள் புதிய கணக்கொன்றை துவக்க தயாராகி விட்டதாகவே தெரிகிறது.வன்னியிலும் இந்த வாசம் வீசுகிறது.
மட்டக்களப்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஆளுமை கேள்விக்குறியாகி உள்ளது ஏனைய கட்சிகளில் மிகச் சிறந்த ஆளுமையாளர்கள் களத்தில் உள்ளனர்.
திருகோணமலை குழம்பிப் போய்க் கிடக்கிறது.
அம்பாறையும் அவ்வழியே
கணக்குகள் மாறும் என்றே நான் நினைக்கிறேன்
பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கிழக்குப் பல்கலைக்கழகம் நன்றி *முகநூல்

0 commentaires :

Post a Comment