ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள கிழக்குமாகாணத்துக்கான தொல்பொருள் செயலணியில் பூர்வ குடிகளும் கிழக்கு தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள கிழக்குமாகாணத்துக்கான தொல்பொருள் செயலணியின் உருவாக்கத்தை வரவேற்றுள்ள கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினர் அதிலுள்ள குறைபாடுகளையிட்டு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்று ஞாயிறன்று மட்/கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடகவள நிலையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்படி கருத்துக்களை இவர்கள் தெரிவித்தனர்.
இம்மாநாட்டில் கருத்து தெரிவித்த பத்திநாதன் அவர்களுடன் மது,மற்றும் ஜினோத் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment