1/28/2020

கண் விழிக்கப்பண்ணி இரு கண்கள் மூடிக்கொன்டன மல்லிகை சி, குமாரின் மறைவு

மலையகம் தனித்துவமான ஒரு பண்பாட்டுப் பிரதேசம்.அங்கு வாழும் தமிழ் மக்கள் தமக்கான பண்பாடும் வரலாறும் கொண்டவர்கள்.அம்மக்களின் உழைப்பு இலங்கைபொருளாதாரத்தை தாங்கி நிற்கும் முக்கிய தூண்களுள் ஒன்று
இருந்தும் அவர்கள் பலரின் வாழ்க்கைத் தரம்
இன்றும் கீழ் நிலையில்தான்
இந்த மக்களின் துன்பதுரங்களையும்,பெருமூச்சையும் அவர் தம் நற்குணங்களையும் பண்பாட்டையும் வரலாற்றையும் உலக அரங்கில் கொணர்ந்தவர் பலர்
நடேச ஐயர்,அவர் மனைவி,
சி,வி வேலுப்பிள்ளை,
கணேஸ். என ஆரம்பித்து
சிவலிங்கம்,செந்தூரன்,
தெளிவத்தை ஜோசெப். சோமு,
மாத்தளைக் கார்த்திகேசு, குறிஞ்சி நாடன்
அந்தனி ஜீவா வடிவேலன்,
ஜோதிகுமார்.பிரபாகரன்
பேரா சந்திரசேகரன், வாமதேவன்
எனச்சென்று
இன்று தீவிரமாகசெயற்படும் இளைஞர் வரை அது வியாபிக்கும்
மலையகத்தின் விழிப்பு இக்கால இலங்கை வரலாற்றில்
ஓர் முக்கிய அம்சம்
உலகை வெல்லச்சென்ற நெப்போலியன் அனைத்து நாடுகளையும் வென்றபடி சீனாவின் எல்லைக்கு வந்தானாம்.
அமைதியாக இருந்த சீன எல்லையில் நின்று பரந்து கிடந்த சீன நிலத்தைப்பார்த்தானாம்
பின்னர் இவ்வாறு சொன்னானாம்
" உறங்கும் அரக்கனை எழுப்பி விட வேண்டாம் அதை உறங்க விடுங்கள்"
சீனாவின் உறக்கத்தைச் சிதைக்காது வந்த வழியே படைகளையும் கூட்டிகொண்டு திரும்பிச் சென்றானாம்
சிறு வயதில் படித்தது இது
மாஓ தலைமையில் நெப்போலியன் சொன்ன அந்த அரக்கன் இன்று விழித்தெழுந்து இலங்கை நாட்டின் மிக முக்கிய சக்தியாகி விட்டான்
மலையகத்தை நினைக்கையில் எனக்கு எப்போதும் அன்று அந்த நெப்போலியனின் கூறிய கூற்றே ஞாபகத்திற்கு வரும்
அந்த தூங்கும் அரக்கனை பண்பாட்டுத் தளத்தில் எழுப்பிவிட முயற்சித்தோரே மேலே நான் குறிபிட்டோர்
இவர்களுள் மிகப்பலருடன் எனக்கு நெருக்கமான நேரடி உறவுகள் உண்டு
அவர்களுள் ஒருவரே மல்லிகை சி,குமார்
இளம் வயதிலிருந்தே அவரை நான் நன்கு அறிவேன் உற்சாகமும் துடி துடிப்பும் மிகுந்தவர்
அவர் இழப்பு எனக்கும் கவலை தருகிறது,
அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்
தூங்கிக் கிடந்த மலையகம் மெல்லக் கண் விழித்திருப்பதை அணமைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன
கண் விழிக்கப் பண்ணிய ஒருவர் இன்று
கண் மூடி விட்டார்
நன்றி முகநூல்
மௌனகுரு

1 commentaires :

Premaraja said...

நடேச ஐயர்,அவர் மனைவி,
சி,வி வேலுப்பிள்ளை,
கணேஸ். என ஆரம்பித்து
சிவலிங்கம்,செந்தூரன்,
தெளிவத்தை ஜோசெப். சோமு,
மாத்தளைக் கார்த்திகேசு, குறிஞ்சி நாடன்
அந்தனி ஜீவா வடிவேலன்,
ஜோதிகுமார்.பிரபாகரன்
பேரா சந்திரசேகரன், வாமதேவன்
எனச்சென்று
இன்று தீவிரமாகசெயற்படும் இளைஞர் வரை அது வியாபிக்கும், மறைந்த தலைவர் தொண்டைமானை மறந்து விட்டார் மவனகுரு , மற்ற எல்லோரும் நடேச ஐய்யர் தவிர வாய்சொல்லில் வீரர்களே

Post a Comment