12/31/2020

மட்/விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி



ஜனவரி 10 முதல் 2020-2021 பெரும்போக நெற்செய்கை நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்ய தீர்மானம். 
 
இன்று (30-12-2020) மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட பெரும்போக நெற்செய்கை நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தல் தொடர்பான கூட்டத்தில்  மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவ. சந்திரகாந்தன் கலந்து கொண்டு விவசாயிகள் சார்ந்து தீர்மானங்கள் முன்வைத்தார். 

 இதன் முதற்கட்டமாக 18 ஆயிரம் மெட்ரிக்தொன்   நெல்லை கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சபையின் பிராந்திய முகாமையாளர் ஏ. ஜீ. நிமால் ஏக்கநாயக்க தெரிவித்தார். 
நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள களஞ்சியசாலைகள் மற்றும் மேலதிக களஞ்சியசாலைகளை பெற்றுக் கொடுக்க சிவ. சந்திரகாந்தன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

மட்டக்களப்பில் 48394 விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் இவ்வருடம் 244886 மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது.
»»  (மேலும்)

12/24/2020

கோவிட் சாவு உடலங்களை எரியூட்டும் இலங்கையரசின் நடவடிக்கைகளை கண்டிக்கின்றோம்- பெண்கள் சந்திப்பு

(பல்லின மக்களின் பண்பாடுகளுக்கு  மாறாக கோவிட் சாவு உடலங்களை எரியூட்டும் இலங்கையரசின் நடவடிக்கைகளை கண்டித்து புகலிட பெண்கள் சந்திப்பு  குழுவினர் விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை) Naseemah Kapoor on Twitter: "Pls tie a piece of white cloth at the entrance  of your house door or gate to respect muslims who were forcefully cremated  and did not have Kafan. #

“இலங்கையில் சிறுபான்மை மதங்களின் உரிமைகளை மறுத்து கோவிட்-19  பெருந்தொற்றுக்குள்ளாகி அல்லது தொற்றுக்குள்ளாகியதாகக் கருதப்பட்டு மரணிக்கும் உடல்களை எரிக்கும் பேரினவாத அரசின் மனிதநேயமற்ற செயலை ‘பெண்கள் சந்திப்பு’ வன்மையாகக் கண்டிக்கிறது.

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை மீறி பலவந்தமாக அவர்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வெள்ளைத் துணிகளைக் கட்டி (கஃபான்(kafan) நடத்தப்படும் அடையாளப் போராட்டத்தில் நாமும் இணைந்து எமது பூரண ஆதரவை வழங்குகிறோம்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குள்ளாகி அல்லது தொற்றுக்குள்ளாகியதாகக் கருதப்பட்டு இறக்கும் மதச்சிறுபான்மையினரின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மாறாக புதைக்கவிடாது பலவந்தமாக எரிக்கப்படுவது இலங்கை அரசினால் சிறுபான்மை மதங்கள் மீது திட்டமிட்டமுறையில் நடத்தப்படும் மனிதவுரிமை மீறலே. 

இதுவரை இறந்தவர்களின் மொத்தத் தொகையில் எண்பதிற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன. பிறந்து சிலநாட்களில் மரணமான இரு குழந்தைகளின் உடல்கள் அவர்களின் பெற்றோரின் ஒப்புதலின்றி எரிக்கப்பட்டிருப்பது அம்மக்கள் மத்தியில் பெருந்துயரையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பான WHO மற்றும் சர்வதேச அமைப்பான  centers for diseaes control and prevention வெளியிட்டுள்ள வழிகாட்டிகளில் (standrad operating procedure in disposing dead bodies) கோவிட் தொற்றுக்குள்ளாகி இறக்கும் உடல்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ முடியுமென அறிவுறுத்துவதோடு  வரையறுக்கப்பட்டிருக்கும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களின் உறவினர்கள் மரணச் சடங்குகளை மேற்கொள்ளலாமெனவும் இறந்த உடலின் மூலமாக நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் உறுதிப்படுத்துகின்றன. 
இவற்றை உதாசீனப்படுத்தி எந்தவித விஞ்ஞான பூர்வமான ஆதாரமுமின்றி உடல்கள் எரிக்கப்படுவது இலங்கைப் பேரினவாத அரசின் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத அரசியலையே புலப்படுத்துகிறது.

சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்களும் ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனத்தின் வதிவிடப் பிரதிநிதியும்(resident coordinetor) மதச்சுதந்திரம் கலாசாரம் சார்ந்த விசேட நிபுணர்களும்(special rapporteur) இலங்கை அரசினால் விஞ்ஞான நம்பகத்தன்மையின்றி பலவந்தமாக உடல்கள் எரியூட்டப்படுவதை சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடிப்படை மனிதவுரிமை மீறலெனச் சுட்டிக்காட்டியுள்ளன. 
இறந்த உடல்களை புதைக்கும் தமது அடிப்படை உரிமையைக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பதினொரு மனுக்களையும் இலங்கை உச்ச நீதிமன்றம் தகுந்த காரணங்களின்றி நிராகரித்துள்ளது. 
இலங்கையில் சமீபகால நடவடிக்கைகளிலிருந்து நோக்கும் போதுஇ நீதித்துறை துரிதமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்குச் சாட்சியமாக விளங்குகிறது.

இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருப்பது போலவே  ஏனைய மதங்களுக்கும் மதிப்பளிக்கவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனினும் இலங்கை அரசின் இவ்விதமான இனவாத அரசியற்கொள்கைச் செயற்பாடுகள் பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவிற்குப் பாதகம் விளைவிக்கின்றன. 
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அரசு தனது நாட்டில் வாழும் சிறுபான்மையினத்தவரின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களை அநாதரவாகக் கைவிட்டுள்ளது. 
தமது உறவினர்களின் இறப்பிற்குப் பின் தங்களது மதநம்பிக்கைகளுக்கு இணங்க இறுதிக் கடமைகளைச் செய்யமுடியாமல் தவிக்கும் எமது சகோதரர்களின் துயரில் நாமும் பங்கேற்போம்.

• இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவரின் மதச்சடங்குகளுக்கான உரிமைகளை அவர்களுக்கு வழங்கி இறந்த உடல்களைப் புதைப்பதற்கு அனுமதிக்கும்படி இலங்கை அரசைக்கோருகிறோம்.

• சிறுபான்மை இனமக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் மூலம் அவர்களைப் புறக்கணித்து தனிமைப்படுத்தாமல் அவர்களின மனிதவுரிமைகளுக்குப் பாரபட்சமின்றி மதிப்பளிக்கும்படி இலங்கை அரசைக் கோருகிறோம். 

சிங்களம், தமிழ், மலையகத்தமிழ்,  முஸ்லிம், பறங்கியர், மலே என்ற பல்லின இலங்கையரான நாம் ஒருநாட்டின் குடிமக்களாக ஒருவர் வலியை ஒருவர் உணர்ந்து ஒற்றுமையாக சக இனத்தவர் மீதான அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.” 
»»  (மேலும்)

11/26/2020

திருமதி யோசேப் பரராஜசிங்கம் பற்றி நா கூசாது பொய் சொல்ல சுமந்திரன்

Sri Lanka: Sampanthan and Sumanthiran stick their necks out for Muslims! -  Al Bilad English Daily   
கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு மட்டக்களப்பு நீதி மன்றத்திலே வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் பொய் பேசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சுமார் ஐந்து வருட காலம்  நீடித்த இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டமா அதிபர் தரப்பிலான அரச தரப்பு சட்டத்தரணிகளே வாதாடி வந்த நிலையில் திருமதி யோசேப் பரராச சிங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தாம் வாதாட முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தே சுமந்திரன் சந்தேக நபர்களுக்கெதிராக வாதங்களை முன்வைத்தார். அதுமட்டுமன்றி நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து ஊடகவியலாளர்களிடமும் அதனை தெரிவித்திருந்தார்.

ஆனால் கனடாவில் வசிக்கும் திருமதி சுகுணம் பரராசசிங்கம் அவர்களுடனோ லண்டனில் வசிக்கும் அவரது மகன் டேவிட் பரராசசிங்கத்திடமோ சுமந்திரன் பேசவேயில்லை என்கின்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது சுயலாப அரசியலுக்காக சுமந்திரன் யோசேப் பரராசசிங்கத்தின் மனைவியின் பெயரை பயன்படுத்தி நீதிவான் முன்னிலையில் பொய் பேசியமை அநாகரிகமான செயல்பாடு ஆகும். 
»»  (மேலும்)

11/20/2020

தோழர் வி.சின்னத்தம்பி காலமானார் - அஞ்சலி


வடமராட்சியின் மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களில் ஒருவரான பருத்தித்துறை- வராத்துப்பளையைச் சேர்ந்த தோழர் வி.சின்னத்தம்பி இன்று இயற்கை எய்தினார். பயிற்றப்பட்ட ஆசிரியரான தோழர் சின்னத்தம்பி தனது இளமைக் காலம் முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டு வந்தவர். அநீதி அடக்குமுறைகளுக்கு எதிரான போர்க்குணம் மிக்கவராகவும் மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனையை சொல்லாலும் செயலாலும் முன்னெடுப்பதில் உறுதியுடன் இருந்து வந்தவர். வடபுலத்தில் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஜன எழுச்சியிலும் போராட்டங்களிலும் பங்கு கொண்ட முன்னிலைத் தோழர்களில் முக்கியமானவராகவும் விளங்கியவர். அவருடனான நினைவுகள் என்றும் நம்முடன் நிலைத்து நிற்கும். அவரது மறைவுக்கு எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தனது இதய அஞ்சலியையும் செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. குடும்பத்தினருக்கு எமது அனுதாபம். க.செந்தில்வேல் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
»»  (மேலும்)

11/17/2020

தமிழ் பதிப்புலகின் பெரும் ஆளுமையையும் பலியெடுத்த கொரோனா

தமிழ்நாட்டின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவரான 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன் மறைவு; தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்:  கமல், தினகரன், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் | Leaders condolences for  ...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார். 


1974ஆம் ஆண்டில் நண்பர்களோடு இணைந்து 'க்ரியா' பதிப்பகத்தைத் துவங்கினார். சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்', அம்பை எழுதிய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', இமயத்தின் 'கோவேறு கழுதைகள்', பூமணியின் 'அஞ்ஞாடி', ந. முத்துச்சாமியின் 'மேற்கத்திக் கொம்பு மாடுகள்' உள்ளிட்ட மிகச் சிறந்த புனைவுகளையும் ஆல்ஃபர் காம்யுவின் 'அந்நியன்', காஃப்காவின் 'விசாரணை', எக்ஸ்பரியின் 'குட்டி இளவரசன்' போன்ற மொழிபெயர்ப்புகளையும் இவரது மேற்பார்வையின் கீழ் க்ரியா வெளியிட்டது.

ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூலான Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. புத்தகத்தை ஹாவர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது இவருடைய சாதனைகளில் ஒன்று.

க்ரியாவின் தற்கால தமிழகராதி, எஸ். ராமகிருஷ்ணனின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று.

தற்கால பொது எழுத்துத் தமிழில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருள் அளிக்கும் நோக்கில் க்ரியா அகராதி திட்டம் உருவாக்கப்பட்டது.

1985ல் இந்த அகராதிக்கான பணிகள் துவங்கப்பட்டு, 1992ல் முதல் பதிப்பு வெளிவந்தது. 12 முறை மறு அச்சாக்கம் செய்யப்பட்ட பிறகு, விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2008ல் வெளியானது. அந்த அகராதியின் மேலும் விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு எஸ். ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. ப்ரெஞ்ச் மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் நேரடியாக பல படைப்புகளை க்ரியா கொண்டு வந்திருக்கிறது.

»»  (மேலும்)

11/15/2020

பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் கைது தொடர்பான ஊடக அறிக்கை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

 பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் கைது தொடர்பான ஊடக அறிக்கை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி Tamil makkal viduthalai pulikal தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - Home |  Facebook

 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் கடந்த 12.11.2020 அன்று கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த குற்றத்தடுப்புப் பிரிவின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பான வழக்கொன்றில் சாட்சியை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எமது கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 இக்கொலை தொடர்பாக ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களும் மற்றும் அவரது சகோதரரும் இன்னும் சிலரும் 2015ஆம் ஆண்டு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 இவ்வழக்கில் தொடர்ச்சியாக அதன் ஒரு சாட்சியாளரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட சாட்சியங்களை பாதுகாக்கும் அதிகார சபையின் ஊடாக இந்த கைது நடவடிக்கை சட்டமா அதிபரின் பணிப்பின் பெயரில் இடம்பெற்றுள்ளது.

 இக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத நிலையிலும் இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தற்போது இவ்வழக்கின் பிரதான சாட்சியாளர் ஒருவரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டமூலத்தின் ஊடாக நிறுவப்பட்ட சாட்சியங்களை பாதுகாக்கும் அதிகார சபையின் ஊடாக சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றது. உண்மையிலேயே இக்குற்றச்சாட்டாது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதும் தனிப்பட்ட பழிவாங்கல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதுமாகும்  என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 குறிப்பிட்ட முறைப்பாட்டாளர் ஆரையம்பதி பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவரது இரண்டு பிள்ளைகள் தற்போது சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி வருகின்றனர் குறித்த சாட்சியாளரும் சுவிஸ்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காகவே இம்முறைபாட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. இம்முறைப்பாடானது சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் அளவில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இம்முறைப்பாட்டுக்கு எதிராக அப்போதே எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார். எவ்வித தகுந்த காரணமும் இன்றி திட்டமிட்ட அடிப்படையில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக தன்மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை குறித்த சாட்சியாளர் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகார சபையில் முன்வைத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

 நாங்கள் எப்போதும் சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். கட்சியின் தலைவர் அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வட கிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற போதிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியாக இருக்கின்ற போதிலும் எவ்வித அரசியல் நலன்களை பயன்படுத்தாமல் சட்டத்தின் ஊடாகவும் நீதிமன்றத்தின் ஊடாகவும் அவரின் விடுதலை பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் தான் இப்போது எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கைதும் இடம்பெற்றிருக்கின்றது.

 இதனடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது கட்சியின் பொதுச் செயலாளரை சட்டத்தின் ஊடாக நீதிமன்றத்தின் ஊடாகவும் விரைவில் வெளிக் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எமது கட்சி மேற்கொண்டுள்ளது. 

 எமது கட்சியின் வளர்ச்சியையும் எமது கட்சியின் மக்கள் ஆதரவினையும் கண்டு பொறுக்க முடியாத சக்திகள் இதனை கொண்டாடுகின்ற போதிலும் இது எமது வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையுமே தவிர மாறாக நாங்கள் இதைக்கண்டு அஞ்சவோ அல்லது தளரவோ மாட்டோம் என்பதனை இந்த கடந்த கால வரலாறு நிருபித்துள்ளது.

 எம்மை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம் மக்களின் பேராதரவுடன் பெரும் விருட்சமாக நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோமே தவிர கானல் நீரில் கரைந்து போன பொருட்களாக நாங்கள் மாறவில்லை. எனவே முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடனும் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெற வேண்டும் என்ற காரணத்திற்காகவும் எமது கட்சியின் பொதுச் செயலாளர் மீது புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 எவ்வித ஆதாரமும் இல்லாமல் எவ்வித அடிப்படை காரணமும் இல்லாமல் ஒரு முறைப்பாடு அளிக்கப்பட்டு இருக்கின்றது என்ற காரணத்திற்காக மாத்திரம் ஒரு பாரதூரமான சட்டமூலத்தை பயன்படுத்தி அந்த சட்டப் பிரிவின் ஊடாக உடனடியாக பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி கட்சி செயலாளரை சிறைப்படுத்தி இருப்பதானது இந்த அரசியல் உள்நோக்கத்தின்  பின்புலத்தில் யாழ் மேலாதிக்க வாதிகளின் கரங்கள் இறுக்கமாக இருக்கின்றன என்ற ஐயத்தினை தோற்றுவித்துள்ளது.

 எது எவ்வாறு இருப்பினும் நீதிதேவதை எம்மோடு இருப்பதன் காரணமாக எமது கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிராக இந்த போலியாக புனைக்கப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து சட்டத்தின் ஊடாகவும் நீதிமன்றத்தின் ஊடாகவும் மிக விரைவில் வெளிக்கொணரும் நடவடிக்கையினை எமது கட்சி மேற்கொண்டுள்ளது எனவே இதன் ஊடாக எம்மை அழிக்கலாம், தடுத்து நிறுத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு இதனை ஒரு பாடமாக கொண்டு நாம் மீண்டும் ஒரு வீறுகொண்ட சக்தியாக மீண்டெழுவோம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

-ஊடகப்பிரிவு-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 
(ஒற்றுமை உரிமை தனித்துவம்)
»»  (மேலும்)

11/14/2020

மைத்திரி வைத்த தீ - பிரசாந்தனின் கைது


மைத்திரி வைத்த தீ - பிரசாந்தனின் கைது தனி வழியில் செல்ல தயாராகும் மைத்திரி அணி – Lankaone

  தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் பூ. பிரசாந்தன் நேற்றையதினம்  (நவம்பர்-12 ) வியாழனன்று  வைத்து கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுத்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரசாந்தனின்  பெற்றோரது   வீட்டுவாசலில் வைத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.  இலங்கையின்  ஆட்சியில் இருக்கும் பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இருக்கின்ற நிலையின் அக்கட்சியின்  செயலாளர் கைதாகியுள்ளமை பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. 

2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி ஆரயம்பதியில் தமிழ்நாடு கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் ஒரு பெண்ணின்  கொலை சம்பந்தமாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது. 

மேற்படி கொலைக்குற்றச்சாட்டின் பெயரில் கடந்த  மைத்திரி தலைமையிலான புதிய நல்லாட்சி  உருவானபின்னரே கொலைச்சம்பவம் இடம்பெற்று ஏழு  பின்னர் 2015/ஒக்டோபர் 23ஆம் திகதியன்று பிரசாந்தனும் அவரது தம்பியான பூ.ஹரன் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர் விசாரணைக்கான வலுவான ஆதாரங்களற்று வழக்கு பின்தள்ளப்பட்டு நிலையில்   சந்தேகநபரான பிரசாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

எனினும் அவர் குறித்த வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தினார் என்று  புகாரின்  அடிப்படையிலேயே  மீண்டும் கைதாகியுள்ளார். இப்புகாரானது 2019ஆம் வருடம் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இக் கடிதத்தினை நல்லாட்சி அரசினால் நிறுவப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் ஆணைக்குழுவிற்கு  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019/05/03 அன்று  கையொப்பம் இட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பியுள்ளார். 

ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் சாட்சிகளை பாதுகாக்கும் ஆணைக்குழுவானது அக்கடிதத்தில் அடிப்படையில் நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு  சட்டமா அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதனடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. 

எனினும் சாட்சியை அச்சுறுத்தியமை என்கின்ற குற்றச்சாட்டு குறுகிய நோக்கங்களுக்காக சோடிக்கப்பட்ட பொய் எனவும் குறித்தசாட்சியின்  மகன்கன்மார்  இருவர் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில் அவர்களுக்கான வதிவிட விசாக்களை சுவிஸில் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியே இப்போலி குற்றச்சாட்டு எனவும் சந்தேகநபர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை இப்பொய் குற்றச்சாட்டுக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆலோசனையுடனும் வழிகாட்டுதலில் பெயரிலுமே இடம்பெற்றுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் சிறையிலிருந்த போதிலும் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றதன் காரண கர்த்தாவாக செயலாளர் பிரசாந்தன் இருந்தமை  அவரை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இச்சதியில் ஈடுபட காரணமானது எனவும் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அடைந்த  வெற்றியானது பல  சபைகளை கைப்பற்றமுடியாதவாறு தமிழ் தேசியகூட்டமைப்பினருக்கு   பாரிய நெருக்கடியை  கொடுத்திருந்தமையே அதற்கு காரணமாக சொல்லப்படுகின்றது.

எது எப்படியிருந்தபோதும் அன்று மைத்திரி  வைத்த தீ இன்றுவரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நோக்கி பரவிக்கொண்டேயிருக்கின்றது.


கு.சாமித்தம்பி (புளியந்தீவு)




.


»»  (மேலும்)

11/03/2020

திருமாவளவனின் அறைகூவலுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வேரூன்ற கடும் முயற்சிகள் செய்கிறது. நிறைய பணம் செலவு செய்கிறது. பல்வேறு மாவட்டங்களிலும், நகரங்களிலும் சிற்றூர்களிலும் ஆட்களை பிடித்து போஸ்டர்கள் ஒட்டுவது, பேனர்கள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது என வேலை பார்ப்பதை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் கட்சி ஒன்று இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்சிப்படுத்துவதில் வெற்றியடைந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய பிரச்சினை எதை வைத்து அரசியல் செய்வது என்பதில்தான் அடங்கியுள்ளது.

தமிழக மக்களிடம் உணர்வுரீதியாக தாக்கம் செலுத்தும் சமூக நீதி பிரச்சினைகளில் அவர்கள் எதிர்மறையாக வில்லன் வேடம் போடுகிறார்கள். நீட்டால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% உள் ஒதுக்கீடு என்ற முயற்சிக்கே ஆளுனர் அனுமதி தராமல் இழுத்தடித்து தனக்கும், தன்னை நியமித்த பாஜக ஆளும் மத்திய அரசிற்கும் இழுக்கை தேடிக் கொண்டார். அவருக்கு எதிராக தி.மு.க போராட்ட த்தில் இறங்கியது. இப்படி மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் காரியங்களை செய்துவிட்டு மோடி பட பேனர்களை வைத்துவிட்டால் அரசியலில் வெல்லலாம் என்று நினைக்கிறார்கள். முன்னம் ஒரு கட்டுரையில் சொன்னபடி பரிதாபமான அரசியல் இது.

குஷ்புவை நோக்கி கவனம் ஈர்ப்பது எப்படி?

குஷ்பு போன்ற பிரபலமான முன்னாள் திரை நட்சத்திரத்தை தங்கள் கட்சியில் சேர்த்தது உண்மையாகவே தங்கள் கட்சிக்கு வலுவூட்டும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. குஷ்பு முன்னணி நடிகையாக இருந்த காலத்திற்குப் பிறகு நக்மா, சிம்ரன், திரிஷா, நயன்தாரா, தமன்னா என்று பல பிரபல நடிகைகள் முன்னணிக்கு வந்து விட்டார்கள். இதில் சிம்ரன் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த பிறகு 2006 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-விற்கு பிரசாரம் செய்தார். அவரைக் காண கூட்டம் திரண்டது. ஆனால் கட்சி தோற்றது.

அதற்கடுத்த 2011 தேர்தலில் புகழின் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தி.மு.க-விற்காக பிரசாரம் செய்தார். சென்ற இடமெல்லாம் கூட்டம் திரண்டது. கட்சி தேர்தலில் தோற்றது. இது போன்ற பல உதாரணங்கள் இருந்தால் கூட ஏதோ ஒரு காரணத்தால் குஷ்பு மக்களை ஈர்த்துவிடுவார் என்று ஒரு நம்பிக்கை பாஜகவில் நிலவுகிறது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பாஜக ஒரு போராட்ட நாடகத்தை உருவாக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஒரு இணைய கருத்தரங்கத்தில் மனுஸ்மிருதியின் கருத்துக்களை விவரித்ததிலிருந்து ஒரு சிறிய துணுக்கை வெட்டியெடுத்து பரப்பிய பாரதிய ஜனதா கட்சியினர் அவர் பெண்களை அவமதித்து விட்டார் என்று அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தது. குஷ்பு தலைமையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தியது. அதாவது மனுஸ்மிருதியின் கருத்தை அவர் சுட்டிக் காட்டி கண்டித்ததை அவரே கூறியதாக கற்பித்து ஒரு போராட்டம். இதன் மூலம் தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம், குஷ்புவை நோக்கி கவனத்தை ஈர்க்கலாம் என்பன போன்ற நோக்கங்கள் செயல்பட்டிருக்கலாம்.

சிறுத்தையை சீண்டலாமா?

திருமாவளவன் முப்பதாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக, சமூக நீதிக்காக அரசியல் செய்து வருபவர். அம்பேத்கர்-பெரியார் கருத்தியலை அடியொற்றி ஜாதீய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்கு நிலைகளை கடுமையாக எதிர்த்து போராடி வருபவர். மிகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் இலட்சியங்களையும், நடைமுறை அரசியலையும் இணைத்துப் பேசி, செயலாற்றி வருபவர். அவர் அரசியல் முதிர்ச்சிக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுபவர். அவர் எதற்காக பெண்களை கொச்சைப்படுத்தியோ, இழித்தோ, பழித்தோ பேசப் போகிறார்? அதற்கான காரணம் ஏதேனும் வேண்டுமல்லவா? அவர் சனாதன தர்மத்தை ஆதரிப்பவர் என்றால் இன்று பெண்கள் படிதாண்டி விட்டார்கள் என்றெல்லாம் குறைபட சாத்தியம் இருக்கிறது. அவரோ மிகவும் தீர்க்கமாக முற்போக்கு அரசியல் பேசுபவர். அவர் பெண்களை இழிவு படுத்தி பேசினார் என்றால் யாராவது நம்புவார்களா?

இந்த விஷயத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குஷ்புவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் மகளிரணி போராடியது குறிப்பிடப் படுகிறது. இது பழைய விரோதம் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்போது நிகழ்ந்தது என்ன என்பதைக் குறித்த தெளிவு பலருக்கும் இல்லை. குஷ்பு முதலில் ஒரு இதழுக்கு கொடுத்த நேர்காணலில், இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ள நேர்ந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டும்; எய்ட்ஸ் போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கூற்று ஒழுக்கமின்மையை ஏற்றுக்கொள்வதாக, கற்பு என்ற கோட்பாட்டை மறுப்பதாக பலபேர் கண்டனம் தெரிவித்தனர். வழக்குகள் போடப்பட்டன. இந்த நிலையில் ஒரு நாளிதழ் குஷ்புவை இது குறித்து கேட்டபோது அவர் “ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள், தமிழ் பெண்கள் எல்லோருமே கற்புடையவர்களா ?” என்று கேட்டதாக வெளியாகியிருந்தது.

இந்த “தமிழ்ப் பெண்கள் எல்லோருமே கற்புடையவர்களா?” என்ற கேள்விக்கு எதிராகத்தான் தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று இயங்கிய பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இட த்தில் ஒரு வரலாற்றுப் பிரச்சினையையும் நினைவில் கொள்ள வேண்டும். மேட்டுக்குடிப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே வசித்ததாலும், உழைக்கும் வர்க்க பெண்கள் வெளியே பொது இடங்களில் வேலை செய்ததாலும், உழைக்கும் பெண்கள் ஐயத்திற்கு உட்பட்டவர்களாக மேட்டுக்குடியினரால் சித்தரிக்கப்பட்டனர். சங்கராச்சாரியார் போன்றவர்கள் பெண்கள் வேலைக்கு செல்வது ஒழுக்கம் தவற வழிவகுக்கும் என்று பேசிவந்தனர். அதனால் தமிழ் பெண்கள் அனைவரும் கற்புடன்தான் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிராக உழைக்கும் வர்க்க பெண்கள் அணிதிரண்டதை, குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது என்று மட்டும் பார்க்க முடியாது.

பெண்ணிய சிந்தனைகளில் வர்க்கம், ஜாதி போன்றவை ஏற்படுத்தும் வேறுபாடுகளை சிந்தனையுலகம் அங்கீகரிக்கிறது. குஷ்புவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் மகளிரணியின் போராட்டம் ஒரு மேட்டிமைத்தனமான குரலுக்கு எதிரான போராட்டம் என்பதையும் ஆங்கில கல்விப்புலத்தில் சில பெண்ணிய சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த குஷ்பு புகழ் வெளிச்சத்திற்காக திருமாவளவன் பெண்களை இழிவு படுத்திவிட்டார் என்று போராடுவது அபத்தமானது. அதற்கு எந்த ஒரு வரலாற்றுப் பின்னணியும் கிடையாது. மாறாக பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், வன்முறை, பிற்போக்கு சிந்தனைகள் அனைத்திற்கும் உறைவிடமாக இருப்பது பாரதிய ஜனதா கட்சிதான்.

மனுஸ்மிருதியை தடை செய்க!

தேவையில்லாமல் சீண்டப்பட்ட திருமாவளவன் தர்க்கரீதியாக ஒரு காரியம் செய்தார். மனுஸ்மிருதியை தான் மேற்கோள் காட்டியதே பெண்களை அவமதிக்கிறது என்றால், அந்த மொத்த நூலுமே பெண்களுக்கு எதிரானதுதானே. அதனால் மனுஸ்மிருதியை தடை செய்யுங்கள் என்று ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. பலரும் மனுஸ்மிருதியை தேடிப் படிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன. குறிப்பாக தமிழக கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த கலை, இலக்கிய மாதர் சங்க அமைப்புகள் திருமாவளவனை அழைத்து சிறப்பான இணைய கருத்தரங்கம் ஒன்றை நடத்தி மனுஸ்மிருதி எதிர்ப்பை பரவலாக்கியுள்ளன.

மனுஸ்மிருதியை தடை செய்வது என்றால் என்ன?அதனை யாரும் அச்சிட்டு வினியோகிக்கக் கூடாது, அதை குறித்து பரப்புரை செய்யக்கூடாது என்பதே பொருள். காரணம் அதில் வெளிப்படையாக வர்ண, ஜாதி அமைப்பை வலியுறுத்தியும், பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தியும் கருத்துக்கள் உள்ளன. அது எந்தக்காலத்தில் எழுதப்பட்டது, அதிலுள்ள கருத்துக்கள்தான் இந்து மதமா, இன்றைக்கு இந்து மதம் என்று பொதுமைப்படுத்தி அழைக்கப்படும் பல்வேறு மத அமைப்புகள், சிந்தனை முறைகள் அனைத்தும் மனுஸ்மிருதியை ஏற்றுக்கொண்டனவா, காலனீய ஆட்சிதான் அதனை இந்துக்களின் சட்டமாக பொதுமைப்படுத்தியதா போன்ற கேள்விகள் இந்த கோரிக்கைக்கு முக்கியமானதல்ல. அதில் காலத்திற்குப் பொருந்தாத கருத்துக்கள் இருக்கின்றன. அவை சமகாலத்தில் பெண்களின், உழைக்கும் ஜாதியினரின் மனதை புண்படுத்துகின்றன. அதன் சமூக விதிமுறைகள் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன. அதனால் அந்த நூல் தொடர்ந்து சமூகத்தில் புழக்கத்தில் இருப்பது தடை செய்யப்பட வேண்டியது பொருத்தமானது. மற்றபடி அதன் பிரதிகள் ஆவணக்காப்பங்களில் ஆய்வாளர்களுக்கு என்றும் கிடைக்கும். இந்த தடை மனுவாத சிந்தனையை நவீன இந்திய அரசு முற்றிலும் மறுதலிப்பதன் அடையாளமாக மாறும்.

பாரதிய ஜனதா கட்சி தாங்கள் அனைத்து இந்துக்களையும் ஒன்றாகப் பார்ப்பதாக சொல்லும். பட்டியல் இனத்தவரை அலங்கார பதவிகளில் அமர்த்தும். ஆனால் அந்த கட்சியின் மூலவேரான ஆர்.எஸ்.எஸ்-சின் தலைமை அறுதிப்பெரும்பாலும் பார்ப்பனர்களிடமே இருந்து வந்துள்ளது. அது நவீன இந்தியாவை உருவாக்குவதாகச் சொன்னாலும் அது இந்து, இந்திய அடையாளமாகக் கொள்வது பார்ப்பனீய சனாதன தர்மத்தைதான். அதனால் அந்த கட்சியால் ஒருபோதும் மனுஸ்மிருதியை தடை செய்ய முடியாது. அது அந்தக்காலத்தில் எழுதப்பட்ட நூல், அதை நாம் இன்றைய நோக்கில் மதிப்பிடக் கூடாது என்றெல்லாம் இந்துத்துவ அறிவுஜீவிகள் பேசுவார்கள். நாம் எதற்கு அதை மதிப்பிட வேண்டும்? அதை இன்றைய விழுமியங்களை கருதி தடைதானே செய்ய வேண்டும்? பெண்களையும், சூத்திரர் என்று உழைக்கும் ஜாதியினரையும் இழிவுபடுத்தும் நூலை தடை செய்வதில் என்ன தயக்கம்?

மனுஸ்மிருதிக்கு தடை போடுவது இருக்கட்டும். ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் மனுவுக்கு சிலை ஒன்றையே 1989 ஆம் ஆண்டு எழுப்பியுள்ளார்கள். இதை பலரும் எதிர்க்க, ஹை கோர்ட் நீதிபதிகள் அந்த சிலையை அகற்ற உத்திரவிட்டுள்ளார்கள். உடனே அந்த சிலையை அகற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார்கள். யார் அந்த வழக்கை தொடுத்தது?விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஆச்சாரிய தர்மேந்திரா உள்ளிட்டவர்கள் என்று தெரிகிறது. சென்ற மாதம் இரண்டு தலித் பெண்கள் அந்த சிலையின் மீது பட்டப்பகலில் பகிரங்கமாக கறுப்பு வர்ணம் பூசியுள்ளார்கள். அதற்காக அவர்கள் மத உணர்வைகளை புண்படுத்தினார்கள் என்று கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மனுவின் சிலை அகற்றப்படவேண்டும், மனுஸ்மிருதி தடை செய்யப்படவேண்டும் என்ற குரல்கள் நாடெங்கும் ஒங்கி ஒலிக்கவேண்டும்! திருமாவளவனின் அறைகூவலுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.

ன்றி *மின்னம்பலம்




»»  (மேலும்)

10/29/2020

பிரான்ஸ் நீஸ் நகரத்தில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நீஸ் நகரத்தில் ஒரு பெண் உட்பட மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நீஸ் நகர தேவாலயம் ஒன்றினுள் இன்று வியாழகிழமை காலை ஒன்பது மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. அல்லாஹு அஃபர் என்று கூக்குரல் இட்டுக்கொண்டு  வந்த ஒருவர் தேவாலயத்தினுள் இருந்தவர்களை கழுத்தில் கத்தியால் குத்தி இந்த கொலைகளை செய்துள்ளார். இவரது தாக்குதலில் மேலும் சிலர் காயமுற்றுள்ளனர் என்று தெரியவருகின்றது. இது இஸ்லாமிய பயங்கர வாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நகரமேயர் கருத்து வெளியிட்டுள்ளார்.Nice
»»  (மேலும்)

9/22/2020

மீண்டுமொரு பொற்காலம் இன்றுமுதல் தொடங்கட்டும்

கிழக்குமாகாணம்  இயற்கை வளங்களால் நிறைந்த ஒரு இடம். ஆனால் எமது மக்கள் சமூக,பொருளாதார  மேம்பாட்டில் இன்னும் பின்னடைவிலேயே உள்ளனர். பொருளாதார பலமும் அதுசார்ந்த அறிவும் இல்லாத காரணத்தாலேயே  இவ்வளங்களை செவ்வனே பயன்படுத்தி முன்னேறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. அதேவேளை மண்பற்றும் செயலூக்கமும்  மிக்க ஒரு அரசியல் தலைமை இருந்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமாகும்.
இலங்கையிலும் உலகமெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் ஈதுல் - அல்ஹா  ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் ...

அப்படியொரு மனிதனாகத்தான் சி.சந்திரகாந்தன் தனது மாகாணசபை ஆட்சிக்காலத்தை நிரூபித்தார். பல்வேறு கிராமிய வீதிகளும்,அணைக்கட்டுகளும்,குளங்களும் திருத்தப்பட்டும் புதியதாக நிர்மாணிக்கப்பட்டும் அபிவிருத்தியடைந்தன. மின்சாரமோ குடிநீர் விநியோகமோ இல்லாதிருந்த பல்வேறு கிராமங்களுக்கு அவ்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

அதேபோல வாய்ப்பு எமது மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. கெளரவ சி.சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக இன்று நியமனம் பெற்றுள்ளார். எமது மண்ணுக்கான மீண்டுமொரு  பொற்காலம் இன்றுமுதல் தொடங்கட்டும். 





»»  (மேலும்)

9/17/2020

ஈழ தமிழர்களின் அதிகூடிய நம்பிக்கையை பெற்ற தலைவர் யார்?

கிழக்கு,வடக்கு மாகாணங்களில் வெற்றியடைந்த தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பு வாக்கு விபரங்கள் 


1. சிவனேசதுரை சந்திரகாந்தன் -(மட்டக்களப்பு)-      - 54,198 

2. எஸ்.எம் தௌபீக் - (திருகோணமலை)   ------------      - 43, 759

3. இம்ரான் மஹ்ரூப் -(திருகோணமலை)  ------------       - 39,029 

4. எம்.எச்.எம் ஹரீஸ் - (அம்பாறை)        -----------------      - 36,850

5. அங்கஜன்-(யாழ்ப்பாணம்)    --------------------      - 36,356

6. சிறிதரன் -(யாழ்ப்பாணம்)  ----------------------      - 35,884

7. ஏ.எச்.எம் அதாவுல்லா- (அம்பாறை) ---------      - 35,697

8. சாணக்யா ராஹுல் - (மட்டக்களப்பு)  ---------------       - 33,332 

9.டக்ளஸ் - (யாழ்ப்பாணம்)   ---------------------------------       - 32,156

10.கஜேந்திரகுமார் - (யாழ்ப்பாணம்)---------------------       - 31,658

11. பைஸல் காசிம் - (அம்பாறை) -------------------------        - 29,423

12.ரிஷாட் பதியுதீன் -(வன்னி) -----------------------------         - 28,203

13.சுமந்திரன் - (யாழ்ப்பாணம்) ---------------------------        - 27,734

14.கோவிந்தன் கருணாகரன் -  (மட்டக்களப்பு) ---       - 26, 382

15.சார்ல்ஸ் நிர்மலநாதன் -  (வன்னி)  ------------------       - 25,668 

16. சித்தார்த்தன் (யாழ்ப்பாணம்) -----------------------        - 23,740

17. சதாசிவம் வியாழேந்திரன்  (மட்டக்களப்பு)---        - 22,218

18. விக்னேஸ்வரன்  (யாழ்ப்பாணம்) ------------------         - 21,554  

19. ஆர்.சம்பந்தன் (திருகோணமலை)----------------         - 21,422

20. செல்வம் அடைகலநாதன்( வன்னி) ---------------       - 18,563

21. மொஹமட் முஸரப் (அம்பாறை)  ------------------        -18,389

22. அஹமட் செய்னுலாப்தீன் நசீர்  ---------------------       - 17,599

  

23.யோகராஜலிங்கம்( வன்னி )  ---------------------------      - 15,190
 
24.காதர் மஸ்தான்  ( வன்னி )   ----------------------------      - 13,454 
 
25.குலசிங்கம் திலீபன் ( வன்னி)   ------------------------      -  3,203 



»»  (மேலும்)