கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸர்லாந்து பெண் ஊழியர்கள் விவகாரம் தொடர்பிலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது விடயங்களை தெளிவூட்டியிருந்தார்.
குறித்த பெண்ணினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் போலியானவை என தொழில்நுட்ப சாட்சியங்களின் ஊடாக சுவிஸர்லாந்து தூதுவருக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த பெண் சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றுகின்றமையினால், அந்த பெண் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகம் முன்னிலையாகின்றமை எந்தவிதத்திலும் தவறு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 commentaires :
Post a Comment