பிரவசத்திற்காக 20/12/2019 அன்று மாலை பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அன்று இரவு ஊசி போடப்பட்டது அதன் பின் வலி அதிகம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த பெண் அங்கு இருந்த தாதியிடம் சென்று கூறியுள்ளார் தனக்கு பிள்ளைய பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறியுள்ளார் ஒரு பிள்ளையின் தாய் என்பதால் அவருக்கு அனுபம் எனவே தாய் தாதியிடம் கூற அந்த தாதி தானும் பெண் என்பதை மறந்தாளோ தெரியவில்லை உனக்கு இப்பதானே ஊசி போட்டிருக்கு நாள் இருக்கு நேரம் இருக்கு பேசாம இரு என்று ஏனோ தானென்று அலட்சியமாக கூறியுள்ளார்.
அந்த சமயம் அனைவரும் உறக்கத்தில் இருந்ததாகவும் அந்த பெண் கூறினார் பின்பு வலி மீண்டும் அதிகரிக்க அந்த பெண்ணால் எழும்ப கூட முடியாத நிலையில் பக்கத்தில் இருந்த மற்றுமெரு பிரசவத்துக்காக வந்திருந்த பெண் தாதியிடம் சென்று கூற அதன் பின்புதான் பிரசவ அறைக்கு கொண்டு செல்லபட்டிருக்கிறார் அங்கும் சில மணித்தியாலங்கள் போராட்டத்தின் மத்தியில் நள்ளிரவு 1:35 am ஆண் குழந்தை பிறந்துள்ளது அக்குழந்தை அழுததாகவும் சிறுநீர் கழித்ததாகவும் அத் தாய் கூறினார் பின் அக்குழந்தைக்கு சுவாசிப்பதில் கடினமாக உள்ளதாகவும் 1மணித்தியலம் கண்ணாடி பெட்டியில் வைத்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்...
பிள்ளையை எதிர் பார்த்து கொண்டிருந்த தாய் 2மணித்தியாலங்கள் கழித்தும் பிள்ளையை காட்டவும் இல்லை பிள்ளை இறந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள் பிள்ளையின் நிறை 2kg 315g இறந்ததுக்கான காரணம் வினவிய போது பல தரபட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டது ஒருவரால் தெரிவிக்கப்பட்டதை கேட்க எமக்கே ஆச்சரியமாய் இருந்தது நுரையீரல் இல்லயாம் என்று அப்படியானால்....
அந்த குழந்தை 8மாதத்தில் பிறந்தது எப்படி இவ்வளவு தேக ஆரோக்கியமாக பிறந்திருக்கும் Doctor சரவணன் ஐயா நீங்கள் தானே 18ம் திகதி அந்த பெண் சாதுவான வலி ஏற்பட உங்களிடம்தான் வந்து scan பன்ன நீங்கதானே பிள்ளை ஆரோக்கியமாக உள்ளதாகவும் ஓரிரு தினங்களில் சுகபிரவசமாகிவிடும் 20ம் திகதி வைத்தியசாலைக்கு வருமாறு விடுதி இலக்கம் எழுதி குடுத்திருந்தீர்கள் அப்படியிருக்கையில் உங்களுக்கு அந்த குறை தெரியவில்லையா..??
அப் பச்சிளங் குழந்தையின் தகப்பனிடம் கூறிய காரணங்களும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார் என்ன செய்வது வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பமாச்சே ஏமாற்றத்தான் செய்வார்கள் எத்தனை குழந்தைகள் இவ் வைத்தியசாலையில் இறந்து இருக்கிறார்கள் யாருக்குத்தான் நியாயம் கிடைத்திருக்கு கடைசியில் இவர்களுக்கும் ஏமாற்றம்தான் இதற்கு தீர்வுதான் என்ன
மட்டக்களப்பு மக்களாகிய நாம் என்னதான் செய்யப்போகிறோம் வரும் சந்ததிகளின் நிலமைதான் என்ன இப்படி அடிக்கடி குழந்தை இறப்பு வீதம் அதிகரிக்குமாயின் எப்படி இந்த வைத்தியசாலையை நாடுவார்கள் இவர்களது அசமந்தப்போக்காள் இன்னும் எத்தனை குழந்தைகள் பழியாகுமோ நம்ம இனத்தின் அவலநிலைக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது...!
தம்பி முனைக்காடான் குபேந்திரன் அவர்களது பதிவின் பிரதி.
0 commentaires :
Post a Comment