12/31/2019

நம் கல்வி நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளா?



தேடலற்று
தேங்கிப் போதல்Photo de profil de Balasingam Sugumar, L’image contient peut-être : 1 personne, sourit, texte
ஒரு அறிவார்ந்த அதி உயர் தளத்தில் பணியாற்றுவோர் தேடலும் தீவிர வாசிப்பும் புதியனவற்றை உள் வாங்கலும் அதிலிருந்து கண்டு பிடிப்புகளுடன் பயணிப்பதும் இந்த பண்பாட்டை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவன மயப் பட்ட சூழலில் கற்பித்தலும் கற்றலும் என ஒரு சுழர்ச்சி முறையான அறிவுத் தேடலே ஒரு ஆரோக்கியமான அறிவார்ந்த அறிவு ஜீவிகளை உருவாக்க முடியும்.
நம் சூழலில் இது நம்மை சுற்றி எப்படி நடை பெறுகிறது என நாம் விரிவாக பேச வேண்டியவர்களாகிறோம்.
மட்டக்களப்பு நகரமும் நகரத்து சூழலும் உயர் கல்வி நிறுவனங்களினால் நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
1.கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வளாகம்
2.கிழக்குப் பல்கலைக்கழகம் மருத்துவ பீட மட்டக்களப்பு வளாகம்
3.கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்.கல்லடி
4.கல்வியற் கல்லூரி தாளங்குடா
5.திறந்த பல்கலைக்கழக வளாகம் மட்டக்களப்பு நகரம்
6.அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மட்டக்களப்பு நகர்
7.அரச தொழில் நுட்பக் கல்லூரி நாவற்குடா
தமிழர் பிரதேசங்களில் இத்தனை கல்வி நிறுவனங்கள் ஒரு நகரத்தை சூழ அமைந்திருப்பது பெரும் வரப்பிரதாசமே.
இத்தனை இருந்தும் இந்த நிறுவனங்களும் அது சார்ந்த பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இயக்குனர்கள் அவற்றில் பயிலும் கல்விச் சமூகத்தினர் என எல்லோரும் தம்மை சூழ நடக்க்கும் விடயங்களில் காட்டும் ஈடுபாடும் பங்களிப்பும் கேள்விக் குறியாகவே காணப் படுகிறது
அரசியல் சமூக கலை இலக்கிய நிகழ்வுகள் பலரால் முன்னெடுக்கப் படுகின்ற போது மீண்டும் மீண்டும் ஒரே முகங்களே எல்லாவற்றிலும் அக்கறையுடன் செயல்படும் காட்சிகளை காண்கிறோம்.
அறிவார்ந்த சமூகம் என்பது தேங்கிப் போகும் குட்ட்டையல்ல குட்டையில் நீர் வற்ற வற்ற அது நாற்றமெடுத்து எதுக்கும் உதவாமல் போய் விடும் .வெறும் குட்டையாக இல்லாமல் பிரவாகம் எடுத்து ஓடும் வற்றாத நதியாக அறிவுத் தேடல் அமைய வேண்டும்.
வாசிப்பில்லாத கல்வி என்பது கண்டுபிடிப்புகள் அற்ற இயந்திரத் தன்மையான ரோபோக்களாகவே உருவாக முடியும் .
நம் கல்வி நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளா? 
நன்றி முகநூல் *பாலசுகுமார் 

0 commentaires :

Post a Comment