தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் தற்போது கிட்டியுள்ளது. அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வின் வெற்றியில் பங்காளர்களாக இருப்பதுடன் அந்த சந்தர்ப்பத்தை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நான் கூறும் வழிமுறையை நோக்கி நீங்கள் அணிதுரண்டு வருவீர்களானால் அடுத்த ஐந்து வருடங்களில் நான் நீங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைளுக்கும் முடியுமானவரை தீர்வுகண்டு தருவேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இப்பகுதி மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாகா காணி உரிம பிரச்சினை இப்பகுதி மக்களின் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது நிரந்தர வீடு இன்மை வாழ்வாதார பொரச்சினை என பல தேவைப்படுகளுடன் காணப்படுகின்ரனர்.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிந்திக்காதிருப்பது அவர்களது சுயனலமாகவே இருக்கின்றது.
ஆனால் நாம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே முதன்மை நோக்காக கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எமது இந்த பணிகள் மேலும் வலுப்பெறுவதற்கு எமக்கு அதிகளவான அரசியல் அதிகாரம் தேவையாக இருக்கின்றது.
இந்த பலத்தை மக்கள் இம்முறை எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
இந்த பலத்தை மக்கள் இம்முறை எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நீங்கள் எம்மை நம்புங்கள் நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.
0 commentaires :
Post a Comment