மின்னல் வீடியோவை தெளிவாக பாருங்கள்,மலையக மக்களின் நலன் சார்ந்தே அதாவுல்லாவும் பேசுகின்றார். ஆனாலும் "தோட்டக்காட்டானும் அப்படியே இருக்க வேணும்" என்று கூறியது கூறலாகத்தான் அவர் சொல்கின்றார். அதனை மேற்கோளாகவே சொல்லுகின்றார். அவரது வசனம் முழுமையடைய முன்பே மனோ கணேசனுடன் சக்தி நிகழ்ச்சி தொகுப்பாளரும் இணைந்து அவரை பேசாது தடுத்து விட்டனர்.
அந்த வார்த்தையை மலையக மக்களை நிந்திக்கும் நோக்குடனோ,மலையக மக்கள் மீதான வன்மமாகவோ அவர் பயன்படுத்தவில்லை. ஆனபோதிலும் மனோ கணேசன் அவர்கள் அவ்வார்த்தையை எதிர்கொள்ளும் போது ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக அவர் காட்டிய எதிர்ப்புக்கு அனைத்து நியாயங்களும் உண்டு. ஆனால் அவர் அதாவுல்லாமீது தண்ணீரை வீசியதும் நியாயமற்றதே.
ஏதோ ஒரு வகையில் அதாவுல்லாவின் வார்த்தையானது மனோவையும் அவர் சார்ந்த மக்களையும் காயப்படுத்தியே விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களிடையே உள்ள உறவுகளை யாரும் சீர்குலைக்க நாம் இடமளிக்க கூடாது. எனவே இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அதாவுல்லா அவர்கள் மன்னிப்பு கேட்பதே சரியானது. தலை நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல மக்களின் மனம் நோகாமல் மன்னிப்பு கேட்கின்ற தைரியமும் கூட ஒரு தலைவனுக்கு தேவை. தலைமைத்துவத்தின் மாண்பு என்பது அதுதான். அதனை அவர் இந்த தருணத்தில் நிரூபிக்க வேண்டும்.
ஆனால் இந்த விடயத்தில் கை சுத்தமானவர்கள் மட்டுமே அவர் மீது கல்லெறிய முடியும். யாழ்ப்பாணத்தில் இராஜதுரையை மட்டக்களப்பு சக்கிலியன் என்று சிவாஜிலிங்கம் திட்டி தீர்க்கும் போதும், அரியநேந்திரன் பியதாசை எம்பி கட்சி மாறியபோது சக்கிலியன் என்று வசை பாடும்போதும் கள்ள மெளனம் காத்தவர்கள் இப்போது மலையக மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது அவர்கள் மீதான அக்கறையின் பாற்பட்டதல்ல. வெறும் கடைந்தெடுத்த முஸ்லீம் எதிர்ப்பிலிருந்தே இந்த நீதிமான்கள்கள் எழுகின்றனர்.
எளிய சாதிகள் வன்னிக்காட்டான்,மட்டக்களப்பு மடையன், தொப்பி பிரட்டி சோனி,தோட்டகாட்டான்,மோட்டு சிங்களவன்,என்கின்ற வசை சொற்களை மற்றவர்கள் மீது பயன்படுத்தாதவர்கள் மட்டுமே அதாவுல்லாவை விமர்ச்சிக்கும் தார்மீகம் கொண்டவர்கள்.
0 commentaires :
Post a Comment