ராஜபக்ஷக்கள் சரித்திர காலம் தொட்டே மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் செய்தவர்கள். அவர்களின் அரசியல் சரித்திரத்தில் அவர்கள் திடீரென அதிகாரத்துக்கு வந்தவர்கள் அல்ல. தெற்கில் அவர்களைப் பற்றி முதலில் குறிப்பிடப்படுவது 1761ம் ஆண்டு கண்டி அரச மாளிகையில்அனுமதி பெற்று மடுவன்வெல பிரதேச 13 நிலமேக்களுடன் தெற்கில் போர்த்துக்கேயரின் கோட்டையை தாக்க வந்தவர்கள் என்பதாகும்.
அதில் ஒருவர் கொடக்கவெல ராஜபக்ஷ நிலமே. சப்ரகமுவ படையுடன் சண்டையிட்ட இந்த நிலமே கட்டுவன, தங்காலை, மாத்தறை போர்த்துக்கேய கோட்டை மற்றும் காலிக்கோட்டை என்பவற்றைத் தாக்கியுள்ளார்கள்.
பின்னர் படையினர் சப்ரகமுவையை நோக்கிச் செல்லும் போது ராஜபக்ஷ நிலமே மாத்தறை கரத்தொட்ட விஜேசிங்க குடும்பத்தின் பெண்ணொருவரை திருமணம் முடித்து தனது வசிப்பிடமாக கரத்தொட்டையை ஆக்கிக் கொண்டார். இவர்களின் வழி வந்த வணிகசிந்தாமணி தொன் அந்திரிஸ் ராஜபக்ஷ 1818 இல் ஊவவெல்லஸ்ஸ யுத்தத்தில் வீர கெப்பட்டிபொல நிலமேயுடன் இணைந்து போர் புரிந்தார். வீரக்கெட்டிய புத்தியாகம என்னும் இடத்துக்கு வசிக்க வந்த அவரின் வழிவந்த டி. ஏ. ராஜபக்ஷவின் தந்தை டொன் டாவித் ராஜபகஷவாகும். வீரகெட்டிய புத்தியாகம வளவ்வை தனது பிறந்த இடமாகக் கொண்ட அவரின் புதல்வர்கள் டீ. ஏ. ராஜபக்ஷ டி. எம். ராஜபக்ஷ ஆவர்.
ஊவா புரட்சியின் போது வீர கெப்பட்டிபொல காட்டிக்கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் கைது செய்த போது வணிகசிந்தாமணி மொஹட்டி டொன் அந்தியஸ் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் மாணிக்க கங்கையின் ஊடாக கதிர்காமத்துக்கு தப்பிச் சென்றார்கள்.
1936ல் கவுன்சில் சபைக்கு டி. எம். ராஜபக்ஷ முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் ஒரு குலத்தைச் சேர்ந்த மக்களுக்கு மேலாடையணிவது ஆங்கிலேயருக்கு ஆதரவான பிரபுக்களால் தடை செய்யப்பட்டிருந்தது. அதனைப் போராடி அவர்களுக்கும் அவ்வுரிமையைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அவர்களின் ஆதரவையும் பெற்றார். அவர் 1945 வரை அம்மக்களின் பிரதிநிதியான கவுன்சில் சபையின் பிரதிநிதியாக இருந்தார்.
திடீரென அவரின் மறைவுக்குப் பின்னர் டொன் அந்தியஸ் ராஜபக்ஷவின் இன்னொரு பேரரான மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி. ஏ. ராஜபக்ஷவை பதவிக்கு வருமாறு கோரினார்கள். சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட முதலில் அதனை ஏற்கவில்லை. ஆனால் மக்களின் வற்புறுத்தல் காரணமாக வயலில் தனது கைையக் கழுவிய பின்னர் ஹம்பாந்தோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடக் கையெழுத்திட்டார்.
அதில் ஏகமனதாகத் தெரவு செய்யப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பமாக பண்டாரநாயக்கவின் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு மாறிய சந்தர்ப்பமாகும். அவருடன் எதிர்க்கட்சிக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்து பொதுமக்களுக்காகப் பணியாற்றியவராவார். அப்போதைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்க பண்டா போனதைப் பற்றிக் கவலையில்லை, டீ. ஏ. போனது தாங்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்வின் ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக பதவி வகித்தார்.
1965 தேர்தலில் பெலிஅத்த பாராளுமன்ற உறுப்பினரான டீ. ஏ. ராஜபக்ஷ அத்தொகுதியில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ஓய்வாக ஏழ்மையான வாழ்க்கை நடத்திய அவர் 1967 ஆம் ஆண்டு காலமானார். தனது பரம்பரையில் மக்கள் சேவைக்காக லக்ஷ்மன் ராஜபக்ஷ மற்றும் ஜோர்ஜ் ராஜபக்ஷ ஆகியோரை மக்கள் சேவையை முன்னெடுத்துச் சென்றனர்.
0 commentaires :
Post a Comment