தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை கடத்தும் ஒரு கட்சியாக மாற்றமடைந்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய போதிலும், தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு சக்தியாகவே அந்த கட்சி செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் இன்று வலுவிழந்துள்ளதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறுகின்றார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கோ அல்லது சஜித் பிரேமதாஸவிற்கோ ஆதரவை வழங்குங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதாக இருந்தாலும், கூட்டமைப்பிற்கு தற்போதுள்ள செல்வாக்கும் குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்ததை கூறிய கருணா அம்மான், அவ்வாறென்றால், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏன் ஆதரவளிக்க மறுப்பு தெரிவிக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment