11/11/2019

ஜனாதிபதி தேர்தலுக்கு எண்ணிச் சிலநாட்களே உள்ளன. தேர்தல் வாக்களிப்பு என்பது குறித்த ஐந்து வருடங்களுக்கு மீளப்பெற முடியாத ஆணையாகும். எனவே  நின்று நிதானமாக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு உரிமையே வாக்குரிமையாகும். அந்தவகையில் எமது மக்களின் தெரிவானது ஒரு சரியான தலைமையை  நோக்கி எடுக்கப்படவேண்டும்.

இத்தகைய தீர்மானங்களை நோக்கி பலவிதமான பிரச்சாரங்களையும் ஒருங்கிணைக்கும்  மையமாக மட்டக்களப்பு கல்லடி மாறிவருவது ஒரு சுவாரசியமானதொன்றாகும். கிழக்கு மாகாணத்தின் இறுதி நேர அரசியல் மாற்றங்களையும் முடிவுகளையும் தீர்மானிப்பதில் இந்த தேர்தலில் கல்லடியில் இடம் பெற்றுவரும்  கூட்டங்கள் பெரும் பங்கு வகிக்கப்போகின்றன.

இந்த கல்லடியானது பலவிடயங்களில் மட்டக்களப்பு தமிழகத்தாரின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த இடமாகும்.எமது அடையாளமான பாடும் மீன், கல்லடி பாலம்,இராமகிருஷ்ண மிஷன், சாண்டோ சங்கரதாஸ்,  மாமேதை விபுலானந்தரின் கல்லறை என்று  சொல்லிக்கொண்டே போகலாம்.

அரசியல் ரீதியாகவும் இந்த கல்லடிக்கு ஒரு வரலாறு உண்டு. கிழக்கு போராளிகள் ஆயுதங்களை கைவிட்டு ஒரு அரசியல் கட்சியாக பரிணமித்தவேளையில் உருவாகிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட் சியானதும் தனது முதலாவது தேசிய மாநாட்டை இந்த கல்லடியில்தான் நடாத்தியிருந்தது. இதை நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் அந்த மாநாட்டு  தீர்மானம் கல்லடி தீர்மானம் என்றே அழைக்கப்படுகின்றது.

அந்த தீர்மானத்தின் முதலாவது பிரகடனமானது வடக்கு கிழக்கு பிரதேசங்களை அரசியல் நிருவாக ரீதியாக ஒரே கொள்கையின் கீழ் நிர்வகிக்க முயலுகின்ற  கோஷங்கள் "கிழக்கு மக்களின் பல்லின சூழலுக்கும்,சுயவிருப்பத்துக்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும்   எதிரானது.(கல்லடி தீர்மானம் 12/032012)என்கின்றது.

சுமார் ஏழுவருடங்களுக்கு முன்னர் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  போது வழமைபோலவே யாழ்ப்பாண-மேட்டுக்குடிகளின் ஆதிக்கத்தில் செயற்படுகின்ற ஊடகங்கள் அவற்றை பெரிது படுத்தவில்லை. ஆனால் அதன் தாற்பரியங்கள் இன்று அதே கல்லடி மேடைகளில் அரங்கேற்றப்படுகின்றன என்பது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகும்.

 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஒரு ஆயுத பிரிவாக இருந்து அரசியலில் நுழைந்தபோது  அது ஒரு ஜனநாயக கட்சியாக

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது  12/03/2012 

0 commentaires :

Post a Comment