11/28/2019

அங்கஜன் வியாளேந்திரன் ஆகியோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள்

Résultat de recherche d'images pour "பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்""
அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் இன்று (27) வழங்கப்பட்டன.
இந்தவகையில் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் வருமாறு,
  • கொழும்பு மாவட்டத்துக்கு விஜேதாச ராஜபக்ஸ
  • கம்பஹா மாவட்டத்துக்கு சுதர்சனி பெர்ணாந்து புள்ளே
  • களுத்துறை மாவட்டத்துக்கு பியல் நிசாந்த
  • கண்டி மாவட்டத்துக்கு கலாநிதி சரத் அமுனுகம
  • மாத்தளை மாவட்டத்துக்கு லக்ஸ்மன் வசந்த பெரேரா
  • மொனராகலை மாவட்டத்துக்கு சுமேதா பீ. ஜயசேன
  • நுவரெலியா மாவட்டத்துக்கு முத்து சிவலிங்கம்
  • காலி மாவட்டத்துக்கு சந்திம வீரக்கொடி
  • மாத்தறை மாவட்டத்துக்கு நிரோசன் பிரேமரத்ன
  • யாழ். மாவட்டத்துக்கு அங்கஜன் ராமநாதன்
  • மன்னார் மாவட்டத்துக்கு காதர் மஸ்தான்
  • மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எஸ். வியாளேந்திரன்
  • அம்பாறை மாவட்டத்துக்கு சிறியானி விஜேவிக்ரம
  • அனுராதபுர மாவட்டத்துக்கு வீரகுமார திஸாநாயக்க
  • பதுளை மாவட்டத்துக்கு தேனுக விதானகமகே
  • கேகாலை மாவட்டத்துக்கு சாரதீ துஸ்மன்த மித்ரபால
  • இரத்தினபுரி மாவட்டத்துக்கு துனேஸ் கன்கந்த 
  • ஆகியோரே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
»»  (மேலும்)

11/25/2019

ஆனாலும் அதாவுல்லா மன்னிப்பு கேட்பதே மாண்பு



மின்னல் வீடியோவை தெளிவாக பாருங்கள்,மலையக மக்களின் நலன் சார்ந்தே அதாவுல்லாவும் பேசுகின்றார். ஆனாலும் "தோட்டக்காட்டானும் அப்படியே இருக்க வேணும்" என்று கூறியது கூறலாகத்தான் அவர் சொல்கின்றார். அதனை மேற்கோளாகவே சொல்லுகின்றார். அவரது வசனம் முழுமையடைய முன்பே மனோ கணேசனுடன் சக்தி நிகழ்ச்சி தொகுப்பாளரும் இணைந்து அவரை பேசாது தடுத்து விட்டனர். Résultat de recherche d'images pour "அதாவுல்லா""

அந்த வார்த்தையை மலையக மக்களை  நிந்திக்கும் நோக்குடனோ,மலையக மக்கள் மீதான வன்மமாகவோ  அவர் பயன்படுத்தவில்லை. ஆனபோதிலும் மனோ கணேசன் அவர்கள் அவ்வார்த்தையை எதிர்கொள்ளும் போது ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக அவர் காட்டிய எதிர்ப்புக்கு அனைத்து நியாயங்களும் உண்டு. ஆனால் அவர் அதாவுல்லாமீது தண்ணீரை வீசியதும் நியாயமற்றதே.  

தோ ஒரு வகையில் அதாவுல்லாவின்  வார்த்தையானது மனோவையும்  அவர் சார்ந்த மக்களையும் காயப்படுத்தியே  விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களிடையே உள்ள உறவுகளை யாரும் சீர்குலைக்க நாம் இடமளிக்க கூடாது. எனவே இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அதாவுல்லா அவர்கள் மன்னிப்பு கேட்பதே சரியானது.   தலை  நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல  மக்களின் மனம் நோகாமல்  மன்னிப்பு கேட்கின்ற தைரியமும் கூட ஒரு தலைவனுக்கு தேவை. தலைமைத்துவத்தின் மாண்பு என்பது அதுதான். அதனை அவர் இந்த தருணத்தில் நிரூபிக்க வேண்டும். 

ஆனால் இந்த விடயத்தில்  கை  சுத்தமானவர்கள் மட்டுமே அவர் மீது கல்லெறிய முடியும். யாழ்ப்பாணத்தில் இராஜதுரையை மட்டக்களப்பு சக்கிலியன் என்று சிவாஜிலிங்கம் திட்டி தீர்க்கும் போதும், அரியநேந்திரன் பியதாசை எம்பி கட்சி மாறியபோது சக்கிலியன் என்று வசை பாடும்போதும் கள்ள மெளனம் காத்தவர்கள் இப்போது மலையக மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது அவர்கள் மீதான அக்கறையின் பாற்பட்டதல்ல. வெறும் கடைந்தெடுத்த முஸ்லீம் எதிர்ப்பிலிருந்தே இந்த நீதிமான்கள்கள் எழுகின்றனர்.

எளிய சாதிகள்   வன்னிக்காட்டான்,மட்டக்களப்பு மடையன், தொப்பி பிரட்டி சோனி,தோட்டகாட்டான்,மோட்டு சிங்களவன்,என்கின்ற  வசை சொற்களை  மற்றவர்கள் மீது பயன்படுத்தாதவர்கள் மட்டுமே  அதாவுல்லாவை விமர்ச்சிக்கும் தார்மீகம் கொண்டவர்கள். 
»»  (மேலும்)

11/24/2019

வாசிப்பு மனநிலை விவாதம் -29 -பிரான்ஸ்

பிரான்ஸ் இலக்கிய தோழர்களின் ஒருங்கிணைப்பில் பலவருடங்களாக நடைபெற்றுவரும் வாசிப்பு மனநிலை விவாதம் என்கின்ற நிகழ்வானது இம்முறை தனது 29வது  சந்திப்பை  நடத்துகின்றது. இன்று ஞாயிறு அன்று இடம்பெறும் இச்சந்திப்பில் கனடாவாழ் பெண் ஆளுமைகளாக கறுப்பி சுமதி,நிரூபா,சிவரஞ்சனி போன்றோரின் நூல்கள் இடம்பெறுகின்றன. நிகழ்வினை தோழர் விஜி ஒருங்கிணைத்து நடத்தவுள்ளார்.  விமர்சன உரைகளை தோழர்கள் டானியல்,தர்மு பிரசாத்,மனோ,தில்லைநடேசன்,நெற்கொழுதாசன்,அசுரா போன்றோர் நிகழ்த்தவுள்ளனர்.L’image contient peut-être : texte
»»  (மேலும்)

11/23/2019

தெற்கின் சிங்கங்களான ராஜபக்ஷக்கள் அரச வம்சத்தினரா?


தெற்கின் சிங்கங்களான ராஜபக்ஷக்கள் அரச வம்சத்தினரா?Résultat de recherche d'images pour "kandy kingdom sri lanka""
ராஜபக்ஷக்கள் சரித்திர காலம் தொட்டே மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் செய்தவர்கள். அவர்களின் அரசியல் சரித்திரத்தில் அவர்கள் திடீரென அதிகாரத்துக்கு வந்தவர்கள் அல்ல. தெற்கில் அவர்களைப் பற்றி முதலில் குறிப்பிடப்படுவது 1761ம் ஆண்டு கண்டி அரச மாளிகையில்அனுமதி பெற்று மடுவன்வெல பிரதேச 13 நிலமேக்களுடன் தெற்கில் போர்த்துக்கேயரின் கோட்டையை தாக்க வந்தவர்கள் என்பதாகும்.
அதில் ஒருவர் கொடக்கவெல ராஜபக்ஷ நிலமே. சப்ரகமுவ படையுடன் சண்டையிட்ட இந்த நிலமே கட்டுவன, தங்காலை, மாத்தறை போர்த்துக்கேய கோட்டை மற்றும் காலிக்கோட்டை என்பவற்றைத் தாக்கியுள்ளார்கள்.
பின்னர் படையினர் சப்ரகமுவையை நோக்கிச் செல்லும் போது ராஜபக்ஷ நிலமே மாத்தறை கரத்தொட்ட விஜேசிங்க குடும்பத்தின் பெண்ணொருவரை திருமணம் முடித்து தனது வசிப்பிடமாக கரத்தொட்டையை ஆக்கிக் கொண்டார். இவர்களின் வழி வந்த வணிகசிந்தாமணி தொன் அந்திரிஸ் ராஜபக்ஷ 1818 இல் ஊவவெல்லஸ்ஸ யுத்தத்தில் வீர கெப்பட்டிபொல நிலமேயுடன் இணைந்து போர் புரிந்தார். வீரக்கெட்டிய புத்தியாகம என்னும் இடத்துக்கு வசிக்க வந்த அவரின் வழிவந்த டி. ஏ. ராஜபக்ஷவின் தந்தை டொன் டாவித் ராஜபகஷவாகும். வீரகெட்டிய புத்தியாகம வளவ்வை தனது பிறந்த இடமாகக் கொண்ட அவரின் புதல்வர்கள் டீ. ஏ. ராஜபக்ஷ டி. எம். ராஜபக்ஷ ஆவர்.
ஊவா புரட்சியின் போது வீர கெப்பட்டிபொல காட்டிக்கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் கைது செய்த போது வணிகசிந்தாமணி மொஹட்டி டொன் அந்தியஸ் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் மாணிக்க கங்கையின் ஊடாக கதிர்காமத்துக்கு தப்பிச் சென்றார்கள்.
1936ல் கவுன்சில் சபைக்கு டி. எம். ராஜபக்ஷ முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் ஒரு குலத்தைச் சேர்ந்த மக்களுக்கு மேலாடையணிவது ஆங்கிலேயருக்கு ஆதரவான பிரபுக்களால் தடை செய்யப்பட்டிருந்தது. அதனைப் போராடி அவர்களுக்கும் அவ்வுரிமையைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அவர்களின் ஆதரவையும் பெற்றார். அவர் 1945 வரை அம்மக்களின் பிரதிநிதியான கவுன்சில் சபையின் பிரதிநிதியாக இருந்தார்.
திடீரென அவரின் மறைவுக்குப் பின்னர் டொன் அந்தியஸ் ராஜபக்ஷவின் இன்னொரு பேரரான மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி. ஏ. ராஜபக்ஷவை பதவிக்கு வருமாறு கோரினார்கள். சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட முதலில் அதனை ஏற்கவில்லை. ஆனால் மக்களின் வற்புறுத்தல் காரணமாக வயலில் தனது கை​ையக் கழுவிய பின்னர் ஹம்பாந்தோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடக் கையெழுத்திட்டார்.
அதில் ஏகமனதாகத் தெரவு செய்யப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பமாக பண்டாரநாயக்கவின் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு மாறிய சந்தர்ப்பமாகும். அவருடன் எதிர்க்கட்சிக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்து பொதுமக்களுக்காகப் பணியாற்றியவராவார். அப்போதைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்க பண்டா போனதைப் பற்றிக் கவலையில்லை, டீ. ஏ. போனது தாங்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்வின் ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக பதவி வகித்தார்.
1965 தேர்தலில் பெலிஅத்த பாராளுமன்ற உறுப்பினரான டீ. ஏ. ராஜபக்ஷ அத்தொகுதியில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ஓய்வாக ஏழ்மையான வாழ்க்கை நடத்திய அவர் 1967 ஆம் ஆண்டு காலமானார். தனது பரம்பரையில் மக்கள் சேவைக்காக லக்ஷ்மன் ராஜபக்ஷ மற்றும் ஜோர்ஜ் ராஜபக்ஷ ஆகியோரை மக்கள் சேவையை முன்னெடுத்துச் சென்றனர்.
»»  (மேலும்)

11/22/2019

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 இன்று அமைச்சராக பொறுப்பேற்கும் என்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் தோழர் கெளரவ டக்ளஸ் அவர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்,ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி,உண்மைகள் இணையத்தளம் சார்பாக  மனமார்ந்த வாழ்த்துக்கள்.  L’image contient peut-être : 1 personne, debout
»»  (மேலும்)

யார் செய்த குற்றம்? -இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது. பிரதமர் பதவியேற்பு
சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை. 
»»  (மேலும்)

11/19/2019

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல்

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். நமால் ராஜபக்‌ஷ
இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
»»  (மேலும்)

7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.இந்த பதவிப்பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவன்வெலி சாய மண்டபத்தில் இடம்பெற்றது.பதவியேற்ற பின்னர், உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பை பேணுவதே தனது முதன்மையான நோக்கம் என தெரிவித்தார்.இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு






»»  (மேலும்)

11/16/2019

அஞ்சலி- குமாரதேவன்

ஈழப்போர்களுக்கு பின்னான யாழ்ப்பாணத்தின் Living Treasure ஆக இருந்த குமாரதேவன் ஐயா சுகவீனம் காரணமாக காலமானார். L’image contient peut-être : 1 personne, texte
2009 ஈழப்போர் முடிவின்பின் தமிழ்பாசிச அழிவின்பின் யாழ்ப்பாணத்தில் தங்கள் இருபதுகளிலுள்ள ஒரு இளைஞர் கலை/இலக்கிய இயக்கம் முகிழ்த்தது. வாழக்கொடுத்துவைத்த இந்த தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரும்(ஒரு சிலர் தவிர) உள்ள இப்படத்தில் நடுவில் இருப்பவர் இயக்கத்தின் "மூத்த உறுப்பினர்" #குமாரதேவன் #ஐயா.
இந்த டிசம்பர் மாதத்தில் தன் 60வது பிறந்தநாளைக்கொண்டாடவிருந்த காரைநகரானான குமாரதேவன் ஐயா ஒரு பிரமச்சாரி. வண்ணார்பண்ணையில் ஒரு சாப்பாட்டுக்கடையின் மனேச்சராக தன்வாழ்நாள் பூராக இருந்தவர் . தீவிரமான படிப்பாளி, வாசகர். சுதந்திர இலங்கையின் அரசியல் நிகழ்வுகளையும் ஈழப்போராட்ட வரலாற்றையும் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருப்பவர்.
பாரிஸ் மாநகரத்திலுள்ளது போன்ற இலக்கிய "கபே" க்கள் இல்லாத யாழில் இவரது சாப்பாட்டுக்கடை
இக் கன்னி எழுத்தாளர்களின் ஓசி Literary Cafe.
Adios ஐயா.
நன்றிகள் முகநூல் - நட்சத்திரன் செவ்விந்தியன்
»»  (மேலும்)