10/28/2019

மகிந்த-பிள்ளையான் தொடரும் நட்பு கிழக்கு மக்களுக்கு நன்மை பயக்குமா?

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று இப்பொழுது சந்தித்துக் கலந்துரையாடினார்.L’image contient peut-être : 3 personnes, dont Poopalapillai Prashanthan

நேற்று வாழைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிரச்சார கூட்டத்துக்கு மகிந்த   வருகைதந்த போதிலும்  காலதாமதமாகி விட்டதனால் பிள்ளையானுடனான அவரது சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. எனினும் நாளை காலை  வந்து சந்திப்பேன் என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர்களிடம் வாக்குறுதியளித்து சென்ற மகிந்த இன்று காலை மட்டக்களப்புக்கு விசேடமாக வருகை தந்து பிள்ளையானை சந்தித்துள்ளார்.  
அரசியல் பழிவாங்கல் காரணமாக கடந்த நாலு வருடங்களாக சம்பந்த-ரணில் கூட்டாச்சியால் பிள்ளையான் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த தனது ஆட்சியில்  மட்டக்களப்பு முடிந்த அபிவிருத்திகளை நினைவு படுத்தினார்.அதேவேளை விவசாயிகளுக்கு மீண்டும் உர மானியங்களை வழங்க உள்ளதாக வாக்குறுதி வழங்கினார். அதுமட்டுமன்றி அங்கு குடியிருந்த மக்களிடம் எங்கள் ஆட்சி  வந்தவுடன் பிள்ளையான் விடுதலையாவார் என்று உறுதியளித்தார்.  












0 commentaires :

Post a Comment