இலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்படுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9ஆயிரம் பேரை 2018ம் ஆண்டு இணைத்துக்கொண்டமையிற்காக.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய #மா_தயாபரன் அவர்களுக்கு கிழக்கு மாகாணரீதியில் முதலாம் இடம் கிடைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிற்குள்ளும் கிழக்கு மாகாண ரீதியிலும் மிகச்சிறந்தசேவையை ஆற்றிய மைக்காகஇவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்
இதற்கானபரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் அவர்கலந்து கொள்ளாமையினால் தற்போதைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடந்த காலத்தில் அவரது மிகத் திறமையான வழிநடத்தலினூடாக
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
கிராம சேவையாளர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
கிராம சேவையாளர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோரை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பான செயற்றிட்டத்தினூடாக கிழக்குமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மட்/தமிழ் ஓசை
0 commentaires :
Post a Comment