10/30/2019

சேனநாயக்காவே வந்தாலும் யு என் பியிடம் கேள்வி கேட்க உரிமையில்லை

Official Photographic Portrait of Don Stephen Senanayaka (1884-1952).jpg
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்கவை, கட்சி உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த வசந்த சேனநாயக்க, அதில் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.
'சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகும்போது அமைக்கப்படும் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரா? ரவி கருணாநாயக்க மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவீர்களா? ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன, தொடர்ந்தும் உங்கள் அரசாங்கத்தில் அவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா?' போன்ற கேள்விகளை அந்தக் கடிதத்தில் வசந்த சேனநாயக்க கேட்டிருந்தார்.
எவ்வாறாயினும், வசந்த சேனநாயக்கவின் அந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து வசந்த சேனநாயக்க விலக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பேரன்தான் வசந்த சேனநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

10/28/2019

மகிந்த-பிள்ளையான் தொடரும் நட்பு கிழக்கு மக்களுக்கு நன்மை பயக்குமா?

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று இப்பொழுது சந்தித்துக் கலந்துரையாடினார்.L’image contient peut-être : 3 personnes, dont Poopalapillai Prashanthan

நேற்று வாழைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிரச்சார கூட்டத்துக்கு மகிந்த   வருகைதந்த போதிலும்  காலதாமதமாகி விட்டதனால் பிள்ளையானுடனான அவரது சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. எனினும் நாளை காலை  வந்து சந்திப்பேன் என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர்களிடம் வாக்குறுதியளித்து சென்ற மகிந்த இன்று காலை மட்டக்களப்புக்கு விசேடமாக வருகை தந்து பிள்ளையானை சந்தித்துள்ளார்.  
அரசியல் பழிவாங்கல் காரணமாக கடந்த நாலு வருடங்களாக சம்பந்த-ரணில் கூட்டாச்சியால் பிள்ளையான் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த தனது ஆட்சியில்  மட்டக்களப்பு முடிந்த அபிவிருத்திகளை நினைவு படுத்தினார்.அதேவேளை விவசாயிகளுக்கு மீண்டும் உர மானியங்களை வழங்க உள்ளதாக வாக்குறுதி வழங்கினார். அதுமட்டுமன்றி அங்கு குடியிருந்த மக்களிடம் எங்கள் ஆட்சி  வந்தவுடன் பிள்ளையான் விடுதலையாவார் என்று உறுதியளித்தார்.  












»»  (மேலும்)

10/27/2019

அஞ்சலி - செல்வி தங்கேஸ்வரி.


L’image contient peut-être : 1 personne, gros plan
கிழக்கின் தொல்லியல்,
வரலாற்று ஆய்வாளர்
தொல்லியல் நங்கை
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
பெண்ணியம் பேசாத பெண்ணியவாதி
கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த பெண்கள் வரிசையில் முன்னணி வகித்த பெரும் ஆளுமை அவர்.
வரலாறு,தொல்லியல் ,இலக்கியம் ,சமூகம் ,அரசியல் என எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்த ஒரு பெண்மணி என்றால் அதில் மிகை இருக்காது.
கன்னங்குடா எனும் கிராமத்தில் பிறந்து தன் ஆளுமையால் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறியப் பட்டவர்.துணிச்சல் மிகுந்த பெண் ஆளுமை அவர்
பரணவிதான போன்றோரின் தன்னிச்சையான தொல்லியல் முடிவுகளை கேள்விகளுக்கு உள்ளாக்கியவர்.வாதிடுவதில் வல்லவர்.
கலாசார உத்தியோகத்தராக இருந்த காலத்தில் மட்டக்களப்பு கூத்தை ஆவணப் படுத்துதலில் முன்னின்று உழைத்தவர்.
நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்த காலை அவரோடு இணைந்து பணியாற்றிய பல சந்தர்ப்பங்கள் நினைவில் நீங்கா இடம் கொண்டுள்ளன.
அரசியலில் மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தடம் பதித்த ஒரு சாதனைப் பெண் மணி
பல துறை சார்ந்து அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் அவரது நிலைத்த புகழுக்கு தொல்லியல் ஆய்வுகள் துணை நிற்கின்றன.
திருகோணமலையில் அரசு செய்த குளக்கோட்டன், பற்றிய ஆய்வுகளும் மட்டக்களப்பு மாகோன் பற்றிய ஆய்வுகளும் தங்கேஸ்வரி அவர்களுக்கு புகழ் சேர்த்த நூல்கள் .மட்டக்களப்பு மீது மிகுந்த பற்ற்க் கொண்ட ஒரு ஆளுமையை இன்று இழந்திருக்கிறது.
அவரது நூல்கள்
1.விபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982
2.குளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985
3.மாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1995
4.மட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007
5.கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007
6.கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007
பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ள வேளை பல ஆய்வு மகா நாடுகளில் மட்டக்களப்பின் தொன்மை கலாசாரம் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது
அஞ்சலித்து நிற்கிறேன்
பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கலை கலாசார புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்
இலங்கை.

நன்றி திரு .பாலசுகுமார் முகநூல் 
»»  (மேலும்)

10/26/2019

நொச்சுமுனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து பிரச்சாரம்

  L’image contient peut-être : une personne ou plus, personnes assises et intérieur
25.10. 2019. இன்று நொச்சுமுனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மகளீர் அணி தலைவியுமான செல்வி மனோகரன் வீடு வீடாக சென்று  தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார். 
»»  (மேலும்)

10/24/2019

கிரான்குள தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மகளீரணி தலைவி செல்வி

24.10. 2019. இன்று மாலை கிரான்குளத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து  தேர்தல் பிரச்சார  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மகளீரணி தலைவி செல்வி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. L’image contient peut-être : 5 personnes, personnes assises, foule, enfant et plein air
»»  (மேலும்)

பட்டிப்பளை பிரதேச காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது

L’image contient peut-être : 4 personnes, personnes souriantes, personnes assisesதமிழ் மக்கள் பிரதி செயலர் ஜெயராஜ் தலைமையில் இன்று வியாளனன்று  பட்டிப்பளை பிரதேசம் மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி கிராமமட்ட ஜனாதிபதி தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது.
»»  (மேலும்)

10/22/2019

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும்

L’image contient peut-être : 12 personnes, dont Jaso Samithamby, personnes souriantes, personnes deboutஇன்று 22ந் திகதி கல்முனை நற்பட்டிமுனையில் உள்ள சுமங்கலி மண்டபத்தில் காலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயா ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து கூட்டமொன்று நடைபெற்றது. இக் கூட்டத்திலே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர்களும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கல்முனை பொதுஜன பெரமுனா கிளையின் தலைவர் இ.நடராசா அவர்கள் கலந்துகொண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் சம்பந்தமான ஆவணத்தை நாமல் ராஜபக்ஸ அவர்களிடம் கையளித்தார்.அதன் போது எடுத்துக் கொண்ட படம். கையளித்த ஆவணத்தை வாசித்த நாமல் தங்கள் ஆட்சி விரைவில் வரும். வந்தவுடன் உடனடியாக தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.
வெற்றியின்பின் எமது முதலாவது செயற்பாடு இந்த விடயமாத்தான் இருக்கும் என தெரிவித்தார்.

»»  (மேலும்)

10/19/2019

கிழக்கில் பத்து கட்சிகள் கோத்தபாயாவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கில் பத்து கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.Résultat de recherche d'images pour "east lanka"
*தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான்)  
*தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி(கருணாம்மான்)
*முற்போக்குத் தமிழர் அமைப்பு (வியாழேந்திரன்)
*ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி(டக்ளஸ்)
*அகில இலங்கை தமிழர் மகாசபை(விக்கினேஸ்வரன்)
*ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) 
*சிறி ரெலோ (உதயராசா)
*சமூக ஜனநாயக கட்சி(வரதராஜபெருமாள்) 
*கிழக்கு மீள் எழுச்சிக் கழகம் 
*மக்கள் முன்னேற்ற கட்சி (அருண் தம்பிமுத்து) 
ஆகிய பத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒருமித்து இன்று மட்/வை எம் சி ஏ மண்டபத்தில் எதிர்வரும் தேர்தலில் கூட்டாக கோத்தபாய ராஜா  ஆதரிப்பதென்ற தீர்மானத்தை வெளியிட்டனர்.





»»  (மேலும்)

10/18/2019

மாணிக்கவாசகர்_தயாபரன்_நிருவாகத்தில்_சாதனை.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்படுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9ஆயிரம் பேரை 2018ம் ஆண்டு இணைத்துக்கொண்டமையிற்காக.L’image contient peut-être : 1 personne, assis
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய #மா_தயாபரன் அவர்களுக்கு கிழக்கு மாகாணரீதியில் முதலாம் இடம் கிடைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிற்குள்ளும் கிழக்கு மாகாண ரீதியிலும் மிகச்சிறந்தசேவையை ஆற்றிய மைக்காகஇவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்
இதற்கானபரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் அவர்கலந்து கொள்ளாமையினால் தற்போதைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடந்த காலத்தில் அவரது மிகத் திறமையான வழிநடத்தலினூடாக
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
கிராம சேவையாளர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோரை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பான செயற்றிட்டத்தினூடாக கிழக்குமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மட்/தமிழ் ஓசை 
»»  (மேலும்)

10/11/2019

பயணிக்க வாருங்கள் படகு வந்து விட்டது.

L’image contient peut-être : 2 personnes, personnes assises et intérieur   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'படகு' பத்திரிகை  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் சம்பிரதாயபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது
கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்ற நிலைமையில் அவர் கைது செய்யப்பட்டதனை நான்கு வருடம்  நிறைவடைவதனை முன்னிட்டு
'கிழக்கின் ஜனநாயக குரலை ஒருபோதும் நசுக்க முடியாது' என்கின்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதித்தலைவர் கா. யோகவேள் கட்சியின் தவிசாளர் கிராம மட்ட அமைப்பாளர் பிரதேச அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

10/10/2019

நாளை மட்டக்களப்பில் 'படகு'- வெளியீடு

 L’image contient peut-être : 7 personnes, personnes souriantes, texte
  நாளை முதல் மட்டக்களப்பில் 'படகு'என்னும் பெயரில் மாதாந்த  பத்திரிகை ஒன்று வெளிவருகின்றது.   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக வெளிவரவுள்ள இப்பத்திரிகை நாளைய தினம் அதாவது 11.10. 2019  அன்று கட்சியின்  வாவிக்கரை தலைமைக் காரியாலயத்தில்  சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.  
»»  (மேலும்)

இராவணனை கொன்ற மோடி

 Résultat de recherche d'images pour "இராவணன்"
 நேற்றைய தினம் (8.10.2019)  டில்லியில் விஜயதசமி கொண்டாட்டம் என்ற பெயரில் பிரதமர், துணைக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் ‘ராம் லீலா' என்று கூறி திராவிட வீரனான இராவணன் உருவம் தீயிட்டுக் கொளுத்தப் பட்டுள்ளது. மோடி அம்பு எய்தி கொளுத்தும் காட்சி
பிரதமர் நரேந்திர மோடியே அம்பு எய்தி இராவணனைக் கொல்லும் காட்சி தொலைக் காட்சிகளில் முக்கியமாக ஒளிபரப்பப்பட்டது.
»»  (மேலும்)

10/08/2019

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களது எழுத்துலகம் மீதான பன்முக வாசிப்பு



மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தினர் நேற்று ஞாயிறன்று தமிழ் இலக்கிய அரசியல் சூழலின் பிரதான ஆளுமையான இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களது எழுத்துலகம் மீதான பன்முக வாசிப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில் சுமார் நாற்பது பேர் கொண்ட இலக்கிய நண்பர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வு பற்றி அங்கு உரையாற்றிய  பேராசிரியர் யோகராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பல இளம் வாசகர்களும் இலக்கியவாதிகளும் கலந்துகொண்டு உரையாற்றியமையும்  விவாதங்களில் பங்கெடுத்தமையும் பெரும்பாராட்டுக்குரியதென்றுகுறிப்பிட்டார்.

அத்தோடு  எழுத்து,வாசிப்பு,உரையாடல்,சந்திப்பு என்று தொடர்ச்சியாக மட்டக்களப்பு தமிழகத்தின் சமூக,இலக்கிய, அரசியல், அசைவியக்கத்தை முன்நகர்த்திவரும் பெரியார் வாசகர் வட்டத்தினரை மெச்சியும் கருத்து தெரிவித்தார். 
»»  (மேலும்)

10/04/2019

வாழைச்சேனை தவிசாளரை அநாகரீகமாக பேசிய சைக்கிள்காரர்




கடந்த கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள்,மற்றும்  சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சபை உறுப்பினர் குணசேகரன் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.

அவர் கோறளைப்பற்று பிரதேச சபை  தவிசாளரை அனாகரிகமான வார்த்தைகளால் விளித்தமையினை கண்டிக்கும் வகையில் சபையின் உறுப்பினர் திருமதி.பஞ்சாட்சரம் லெட்சுமி அவர்களினால் கண்டன பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த  அவசர பிரேரணைக்கமைவாக
இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களின் ஆதரவுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை  உத்தரவு  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அடுத்து வரும்  இரு அமர்வுகளுக்கு குறித்த உறுப்பினருக்கான இத்தடை செல்லுபடியாகும். இவர் கஜேந்திரகுமார் தலைமையிலான சைக்கிள் கட்சியின் உறுப்பினராகும் என்பது குறிப்பிடத்தக்கது.



»»  (மேலும்)