ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது: ஆவண நிழல் படத்தில் பொறிக்க வேண்டும் என்ற ஈ.பி.டி.பியின் கோரிக்கை நிறைவேற்றம்!
ஐக்கியதேசிய கட்சியினராலேயே யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது என்பதை பொது நூலக ஆவணப்படுத்தல் காட்சியறையில் வைக்கப்பட்டுள்ள ஆவணப் படத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தமிழில் எழுதப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாதயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா. செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம் யாழ் மாநகரசபையின் கடந்தவாரம் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கான விவாதம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது யாழ் பொது நூலகத்தில் காணப்படும் நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான ஆவண நிழல் படத்திற்கு கீழ் ஆங்கிலத்தில் எரிக்கப்பட்ட யாழ் பொது நூலகம் என பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இது அவ்வாறில்லாது உண்மையான வரலாறு பதிக்கப்பட வேண்டும் என்பதால் அந்த ஆவண நிழல் படத்திற்கு கீழ் ஐக்கிய தேசிய கட்சியால் எரிக்கப்பட்டதென்பதையும் அது அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரான காமினி திசநாயக்கா தலைமையில் எரிக்கப்பட்டதையும் தெளிவாக தமிழில் குறிப்பிட வேண்டும் எனவும் இரா. செல்வவடிவேல் வலியுறுத்தினார்.
குறித்த விடயத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஆர்னோல்ட் குறித்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் உண்மையானதுமானதொன்றாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன் மேற்கொள்வதாக அதனை மாற்றிக்கொள்ள இணக்கமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment