பெரியார் சிலைகளுக்குக் கீழே இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் நீக்கப்பட வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வாதாடி வெற்றிபெற்றிருக்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
நூறு ஆண்டுகள் கழித்து, 'இவர் ஒரு புது சாமியார்' என்று என் சிலையை வணங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்காகத்தான் என் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் கட்டாயம் இருக்க வேண்டும்' என்று பெரியார் கூறியிருக்கிறார்.
இதற்கான ஆதாரங்களை வைத்தோம். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த உண்மையை விளக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. வழக்கு தொடர்ந்தவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் ஆசிரியர்!
0 commentaires :
Post a Comment