மட்டக்களப்பு இலக்கியத்தில் கிராமிய மண் வாசனை மேலோங்கி இருங்கும். அவர்களது உரையாடல் மொழியிலும் கூட அப்படித்தான். "பிள்ளையான்" எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், முன்னாள் ஆயுதப் போராளி சிவனேசதுரை சந்திரகாந்தன் எழுதிய "வேட்கை" வாசிக்க கிடைத்தது. அவர் காட்டும் கிழக்கு வேறாகவும் தெரிந்தது.
அந்த எழுத்தை வாசித்து அவரது ஆலோசகர் ஊடாக வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பினேன். எனது எழுத்துக்களையும் பிள்ளையான் வாசித்து இருப்பதாகவும் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்.
கிடைத்த வாய்ப்பு ஒன்றில் அவரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் நேற்று சந்தித்து இருந்தேன். அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டவர்கள் "மலையக அரசியல் வரலாறு" பற்றிய ஒரு கருத்தரங்கம் ஒன்றையும் அவர்களது கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர் அளவில் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு "வேட்கை" தெரிகிறது.
" மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டம்" எதிர் வரும் சனிக்கிழமை "வேட்கை" பற்றிய கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்திருப்பதாக அறிந்தேன். அதுவரை அங்கு நிற்க வாய்ப்பில்லாததால் கொழும்பு திரும்பி விட்டேன்.
0 commentaires :
Post a Comment