7/29/2019

ஈஸ்டர் தாக்குதல்: பதவி விலகிய இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்பு

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கூட்டாக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீண்டும் திங்கள்கிழமை பதவியேற்றனர். ரவூஃப் ஹக்கீம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இவர்கள் பதவி பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளே இன்று பதவி ஏற்றவர்கள்.
இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் கைத்தொழில், வணிக அலுவல்கள், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி திறன் அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

0 commentaires :

Post a Comment