கன்னியா ஈழத் தமிழர்களின் பூர்விக நிலம் புராணங்களும் ஐதீகங்க்களும் வரலாறும் தமிழர் நிலம் என்பதை உறுதி செய்யும் சாட்ட்சிகளாய் உள்ளன.
திராவிடத் தமிழ் தொன்மை மரபில் ராவணனோடு தொடர்பு பட்டு பேசப் படும் கன்னியா ஈழத் தமிழர்களது மரபுரிமையோடு இறுக்கமான பிணைப்பு கொண்டது.
தமிழர் வரலாற்றை நிருபிக்கும் வகையிலான கல்வெட்டுகள் இங்கு கண்டு பிடிக்கப் பட்டுள்ளன கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் பின்னர் சோழர் கால கல்வெட்டுகளும் இப் பிரதேசத்தை சூழ உள்ள இடங்களிலும் தமிழர் தொல்லியல் வரலாறோடு தொடர்பு பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
எண்பத்து மூன்றாம் ஆண்டுக்கு முன் இங்கு சிவன் ஆலையம் பிள்ளையார் ஆலயம் என்பனவும் கன்னியா யாத்திரிகர் மடமும் தமிழர்களால் சிறப்பாக பராமரிக்கப் பட்டமை அழிந்து போன வரலாற்றுத் தடமாய் உள்ளது.
அதன் பின்னரான காலத்திலேயே இங்கு சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இன்று வரை படிப்படியாக காலூன்றி இன்று முழு கன்னியாவும் அன்பை போதித்த புத்தரின் பெயரால் சூறையாடப் படுகிறது.
கன்னியாவை மீட்கும் அறப் போராட்டத்துக்கு உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒருங்கிணைவோம்
கன்னியா எங்கள் நிலம் எங்கள் உரிமை
கன்னியா பற்றி சோமசுந்ரப் புலவர் இப்படிப் பாடியிருக்கிறார்
"காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று
கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று
தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று
செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று
நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று
நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று
காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று
கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி யாயில்"
எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கும் கன்னியா மீட்பு போராட்டத்தில்
உலகத் தமிழர்களே ஒன்றிணையுங்கள்.