6/03/2019

முஸ்லிம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் ராஜிநாமா

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.Résultat de recherche d'images pour "எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்"
"இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அழிவு ஏற்படக் கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வேண்டியும் நான் ராஜிநாமா செய்துள்ளேன்" என்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.
இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம், இந்த ராஜிநாமா மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிபிசியிடம் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment