இரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில் தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக பேசி தீர்க்க எப்போதோ முன்வந்திருக்க வேண்டும்" என்று கல்முனை விவகாரத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மனோ கணேசன். அவர் கூறுவது கவனத்திற்குரியது.
ஏனென்றால், நுவெரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களாக இருந்ததை 10 பிரதேச செயலகங்களாக மாற்றியிருக்கின்றது தமிழ் முற்போக்குக் கூட்டணி.
இதைப்போல எட்டு உள்ளுராட்சி மன்றங்களைப் பன்னிரண்டு மன்றங்களாக அதிகரித்திருக்கிறது. இதன்படி 05 பிரதேச சபைகள் இப்போது 09 பிரதேச சபைகளாயிருக்கின்றன. ஏற்கனவே இருந்த மூன்று நகரசபைகளோடு சேர்த்து இப்பொழுது அங்கே 12 சபைகள் இயங்குகின்றன.
இதற்கான அரசியல் உபாயங்களை வகுத்து, உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி.
இதில் முக்கிய பங்காற்றியவர்கள் மல்லியப்பு திலகர், அமைச்சர்கள் மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோர். இதை எப்படி அவர்கள் சாதித்தனர் என்பதைப்பற்றிய விவரம் தனியான பதிவாக எழுதுகிறேன்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் உச்ச பயனைப்பெற்றது மலையகப் பிரதிநிதிகளாகத் தானிருக்கும் என எண்ணுகிறேன்.
முன்பு நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் நீண்டகாலமாகவே குறைந்திருந்தது. விகிதாசார அடிப்படையில் அதிகமானவர்களாகத் தமிழர்களிருந்தும் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாதிருந்தது. இன்று அந்த நிலையை மாற்றியிருக்கின்றனர். இதைச் சாத்தியப்படுத்தியது இளைய பாராளுமன்ற உறுப்பினர்களான மல்லியப்பு திலகர் என்கிற திலகராஜ் மற்றும் மனோ கணேசன், திகாம்பரம் போன்றோர்.
ஆனால், பல தசாப்தங்களாகவே பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் தலைவர்களாகவும் இருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் (சம்மந்தன், மாவை உள்ளிட்ட கொம்பனியினர்) கல்முனையில் உள்ள உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இப்போது செருப்பால் எறியை வாங்குமளவுக்குக் கீழிறங்கியிருக்கின்றனர்.
இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கும் பதிவில் படிக்கலாம்.
இதைப்போல மூதூர், தென்மராட்சி, கரைச்சி ஆகிய பிரதேச செயலகங்களை பிரித்து இரண்டிரண்டாக மாற்ற வேண்டிய அவசியமுள்ளது. ஆனால் அதையும் செய்யத் தெரியாமல் உள்ளது கூட்டமைப்பு. இதையெல்லாம் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்வதற்கு அந்த அமைப்பும் தயாரில்லை. அதை ஆதரிப்போரும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால்தான் செருப்பால் மக்கள் எறிகிறார்கள்.
நன்றி முகநூல் தோழர் கருணாகரன்
0 commentaires :
Post a Comment