ஒரு கல்வியாளனாக, ஒரு நடிகனாக,ஒரு கவிஞனாக,ஒரு எழுத்தாளனாக,ஒரு நாடகக்காரனாக, ஒரு தமிழிசை ஆய்வாளனாக வியாபித்து நிற்கும் மகத்தான மனிதர் பேராசிரியர்.மெளனகுரு அவர்கள்.
தள்ளாத வயதிலும் அவரது உயிர்ப்பிலும் துடிப்பிலும் கலந்துவிட்ட தமிழிசையின் மகத்துவமே அவரை இன்றுவரை இயக்குகின்றது எனலாம்.
ஈழத்து புலமையாளர் வரிசையில் பேராசிரியர்கள் வித்தியானந்தன்,கைலாசபதி,சிவத்தம்பி ஆகியோரின் தொடர்ச்சியாக இன்றும் எம்முடன் வாழ்பவர் பேராசிரியர் மெளனகுரு அவர்கள்.
தமிழர்களின் முதுசமான நாட்டுக்கூத்து செல்நெறி மரபின் சிறப்புகளை நவீன நாடக அரங்குடன் பின்னிப்பிணைப்பதில் பெரு வெற்றி கண்டவர்.
*1969ம் ஆண்டு இடம்பெற்ற தீண்டாமைஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முதலாவது மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட "சங்காரம்" எனும் சமூகநீதிக்கான நாடகம் இந்த மெளனகுருவினுடையது.
*நாடகமென்பது சினிமா "போலச்செய்வது" என்றிருந்த குண்டுசட்டிக்குள் குதிரைஒட்டிய அந்த காலங்களில் நாடகத்துறைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அவர் மேடையேற்றிய "புதியதொர்வீடு" நாடகம் ஆகும்.
*என்.கே.ரகுநாதனுடைய கந்தன்கருணையில் நடிகராகவும் சிதம்பரநாதனின் மண்சுமந்த மேனியார் நாடகத்தின் ஆட்டகோலங்களின் வடிவமைப்பாளராகவும் மெளனகுரு அவர்கள் பங்கு வகித்தார்.
* ஈழத்து தமிழிசை,நடன மரபுகளை அடையாளப்படுத்தும் இவரது முயற்சியில் உருவான தமிழிசையணி இன்று மட்டக்களப்பு கிராமங்களில் காலூன்ற வழிவகுத்தமை ஈழத்தமிழரின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.
*இழிகுலத்தோர் இசை என்று ஒதுக்கப்பட்ட பறையொலியை பல்கலைகழகத்துக்குள் நுழைத்து உலக நாடக விழா,பட்டமளிப்பு விழா போன்ற விழாக்களின் முன்னணி இசையாக முழங்க வைத்தவர்
*சுமார் 25 நூல்கள் 250 ஆய்வு கட்டுரைகள்,பல்வேறு நாடகங்கள்,பல பத்து சிறுவர் நாடகங்கள் என நீளும் அவரது எழுத்தியக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
ஆம் அவர் ஈழத்தமிழரின் கலைமுகம். அவருக்கு எமது உண்மைகள் இணையத்தளம் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
0 commentaires :
Post a Comment