சங்க காலத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளை சோழர்கள் ஆண்டனர். ஆனாலும் பிற்கால சோழராட்சி எனப்படுவது தொடர்ச்சியான சுமார் 430 ஆண்டுகால வரலாற்றை கொண்டது. சோழ மன்னர்கள் 850ஆம் ஆண்டு தொடங்கி 1279 வரை கொடி கட்டி பறந்தனர்.
இவர்களில் இராஜ இராஜ சோழனது ஆட்சிக்காலம் 985-1014 வரையானதாகும். இவனே சேர,பாண்டிய,மற்றும் இலங்கை போன்றவற்றை வென்று கொடிநாட்டினான். வடக்கு நோக்கி பல் பகுதிகளை வென்றான்.
இலங்கையில் பொலன்னறுவையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். இவனது காலத்தில் போர்களில் கைதிகளாக்கப்பட்ட அடிமைகளை கொண்டே பிரமாண்டமான தஞ்சை பெருங்கோவில் கட்டப்பட்டது. அதில் ஈழத்திலிருந்து சிறை பிடிக்கப்பட்ட கைதிகளும் அடங்கும்.
ஆலய வழிபாடுகள் வைதீக முறைமைக்குள் உள்வாங்கப்பட்டு பிராமணர்கள் சமூகத்தின் பிரதான பாத்திரம் வகிப்பவர்களாக முன்னிறுத்தப்பட்டனர். இராஜராஜ சோழன் எங்கிருந்தோ வந்த பிராமணர்களுக்கு கோவில் நிலங்கள் என்கின்ற பெயரில் ஏராளமான பிரமதேயங்களை வழங்கினான். ஆலயங்கள் அரசனது நிலவுடமை,பொருளாதார மையங்களாக மாறியது.
அதுவரை காலமும் இந்நிலங்களை வைத்திருந்த பூர்வீக குடிகள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டனர். சாதிமுறைமைகள் வலுவாக்கப்பட்டு பூர்வகுடிகள் சூத்திரர்களாக, தலித்துகளாக ஏதுமற்றவர்க்ளாக ஒடுக்கப்படும் வரலாறு தொடங்கியது.
0 commentaires :
Post a Comment