5/25/2019

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை

மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் முக்கிய அம்சங்கள். L’image contient peut-être : 1 personne
1. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு , நீர்கொழும்பு , மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் உள்ளிட்ட 250ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 500 பேர் வரையிலானோர் காயமடைந்திருந்தனர். இது தொடர்பாக பிரதமர் , அமைச்சரவை மற்றும் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக தகவல்கள் கிடைத்திருந்த போது அது தொடர்பான அக்கறையின்றி கீழ் வரும் செயற்பாடுகளை மேற்கொண்டும் , மேற்கொள்ளாமலும் இருந்துள்ளனர். அதில்,
அ) 2019.05.08 அன்று பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியதன்படி 2014ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாத இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் இலங்கையிலுள்ள சிலர் தொடர்புகளை பேணியதாகவும் , பல்வேறு செயற்பாடுகளின் ஈடுபட்டதாகவும் அறிந்திருந்திருந்துள்ளனர். எனினும் அது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவில்லை,
ஆ) பல்வேறு இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் முஸ்லிம் சமூகத்தினரிடையே செயற்படுவதாக முஸ்லிம் சமூகத்தினராலேயே அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு அறிவித்திருந்த போதும் அது தொடர்பாக செயற்படாமை,
இ) காத்தான்குடி பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் தெதாடர்பாக 2019 ஏப்ரல் 21ஆம் திகதி குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்த சஹரான் ஹசீம் மற்றும் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருதில் குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்த ஏ.எல்.எம்.நியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர்களை கைது செய்வதற்கு முறையாக சட்டத்தை செயற்படுத்தாமை
ஈ) 2018ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி மாவனெல்லையில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்தமையுடன் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினர் தொடர்புபட்டிருப்பதாக இலங்கை முஸ்லிம் சபையினால் தேசிய புலனாய்வு பிரிவுக்கு 2018 டிசம்பர் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த போதும் மற்றும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதும் அது தொடர்பான விசாரணகளை முன்னெடுத்து செல்வதனை தடுக்கப்பட்டு அதில் தலையிடுகள் காணப்பட்டதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளமை
உ) இந்த தாக்குதல் இடம்றுவதற்கு முன்பிருந்து குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தகவல்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமை
ஊ) பாதுகாப்பு சபையின் உறுப்பினரான பிரதமர் பாதுகாப்பு சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாது நாட்டு மக்களுக்காக அவர் செய்ய வேண்டிய அடிப்படை பொறுப்பை செய்ய தவறியமை,
எ) வெளிநாட்டு உளவு பிரிவினால் இலங்கைக்குள் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்களை நடத்தவுள்ளதாகவும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் , தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட சரியான தகவல்களை வழங்கியிருந்த போதும் அந்த தகவல்களின்படி நடவடிக்கையெடுக்க தவறியமை மற்றும் 2019.4.21 ஆம் திகதி அந்த தாக்குதலுக்கு முன்னரும் உளவுப்பிரிவினால் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் அது தொடர்பான நடவடிக்கையெடுக்காமை
ஏ) 2019.04.11 அன்று பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட பாதுகாப்புக்கு பொறுப்பான பிரியலால் தசநாயக்கவினால் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்காமை உள்ளிட்ட விடங்களுக்கமைய 2019.4.21ஆம் திகதி சிவில் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கும் மற்றும் சேதங்களை கட்டுப்படுத்துவதற்கும் முடியுமாக இருந்தபோதிலும்
2. 2019.04.21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் பிரதமர் மற்றும் அமைச்சர்களினால் அந்த தாக்குதல்கள் தொடர்பாக பொறுப்பு கூறாது அந்த பொறுப்புகளை வேறு தரப்பினர் மீது சுமத்துவதற்கு முயற்சித்துள்ளதுடன் அமைச்சர்கள் பொறுப்பற்ற வகையில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு நாட்டை பாதுகாப்பற்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் நடந்துக்கொண்டுள்ளனர்.
3. 2019.04.21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி அந்த குற்றச் செயல்கள் தொடர்பாக சட்டத்தை செயற்படுத்துவதற்கு இடையூறுகளை மேற்கொண்டோ அல்லது தடுத்து நிறுத்தியோ அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் செயற்பட்டுள்ளனர்.
4. 2019.04.21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மேலும் அவ்வாறான தாக்குதல்கள் மற்றும் வன்முறை செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்ட திட்டங்கள் அரசாங்கத்திடம் இருக்கின்ற போதும் 2019.05.13ஆம் திகதி கம்பஹா பிரதேசத்திலும் வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற அடிப்படையாவத வன்முறை செயற்பாடுகளால் கொலை , சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க தவறியமை ,
5. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதமாகியுள்ள போதும் நாட்டில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதாகவும் நாட்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை மீள கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதாகவும் அரச மற்றும் தனியார் துறைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தவறியுள்ளதாகவும் அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாகவும் ,
6. 2019.04.21ஆம் திகதி தாக்குதல்களை தடுக்க முடியாமையினாலும் அதன் பின்னர் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மற்றும் சிவில் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வராமையினாலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மையால் நாட்டின் உள்ளக நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு வெளிநாடுகளுக்கு இடமளித்து செயற்படுவதாகவும் இலங்கை ஜனநாயக சோஷலிச அரசாங்கம் தொடர்பாக மேலும் நம்பிக்கை கொள்ள முடியாது போயுள்ளதாக பாராளுமன்றத்தில் யோசனையை முன்வைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment