எது கேவலம்?
தமிழரிலே ஒரு பகுதியாரை எளியோர் என்றொதுக்கி விட்டு எம்மினத்தையே அழித்தொழித்த 'சிங்கள பேரினவாத இராணுவத்தை' கொண்டு தேரிழுக்கின்ற அயோக்கியத்தனமும்,
எம் மக்கள் மீது குண்டுபோட்ட விமானப்படைகளைகளை கொண்டே கோவில் திருவிழா கும்பாவிஷேகங்களுக்கு பூ தூவி மகிழும் மனோவியாதியும்,
மட்டகளப்பின் 'தமிழ் உணர்வாளர்கள்' இனவாதி மங்கலராமய சுமன தேரரை விடிவெள்ளியாக கொண்டாடுகின்ற அப்புராணித்தனமும்,
வன்னியின் பலநூறு முன்னாள் புலிகள் தம்மையே அழித்தொழித்த அதே 'சிங்கள இனவாத' இராணுவ சீருடைகளை அணிந்துகொண்டு இலங்கை இராணுவத்தின் சிப்பாய்களாக மாறிய வரலாற்று கொடுமையும்,
முப்பது வருசமாக பல்லாயிரம் போராளிகளுக்கு சயனைற்றை கழுத்திலே கட்டி உயிருடன் பிடிபடக்கூடாதென்றும் வீரமரணமடைய சொல்லியும் வழிகாட்டிய புலித் தளபதிமார் வரிசையிலே வந்து வட்டுவால் பாலத்தில் இராணுவத்திடம் சரணைடைந்து தம்முயிரை காத்துக்கொள்ள முனைந்த கேவலமும்,
அத்தனை மக்களையும் பலிகொடுத்து விட்டு வெள்ளாம் முள்ளி வாய்க்காலிலே உயிர் மீது கொண்ட நப்பாசையில் புலிகளின் ஒட்டு மொத்த தலைமைப்பீடமும் வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையை உயர்த்திக்கொண்டுபோனபோது பட்டு நின்ற அவமானமும்,
தமிழர்களின் வரலாற்று நாயகன் சங்கிலியன் போத்துகேயரிடம் கடலூடாக தப்பியோடும்போது பிடிபட்டு இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டபின்னர் அவனது மனைவியார் கிறித்தவ மதத்தைத்தழுவி உயிர் பிச்சை கேட்ட சொந்தமத துரோகமும்
நமக்கு கேவலமில்லை ஆனால்
இலங்கையில் நாலு அப்பாவி முஸ்லிம்கள் இன்று நிலவும் பாதுகாப்பற்ற சூழலில் தமதுயிரை காக்க வெசாக் விழாவில் மலர்ச்செண்டை தூக்கிச் சென்றமை மட்டும் உலகமாக கேவலமாய் போனதெப்படி தமிழர்களே!

0 commentaires :
Post a Comment