5/25/2019

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை

மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் முக்கிய அம்சங்கள். L’image contient peut-être : 1 personne
1. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு , நீர்கொழும்பு , மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் உள்ளிட்ட 250ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 500 பேர் வரையிலானோர் காயமடைந்திருந்தனர். இது தொடர்பாக பிரதமர் , அமைச்சரவை மற்றும் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக தகவல்கள் கிடைத்திருந்த போது அது தொடர்பான அக்கறையின்றி கீழ் வரும் செயற்பாடுகளை மேற்கொண்டும் , மேற்கொள்ளாமலும் இருந்துள்ளனர். அதில்,
அ) 2019.05.08 அன்று பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியதன்படி 2014ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாத இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் இலங்கையிலுள்ள சிலர் தொடர்புகளை பேணியதாகவும் , பல்வேறு செயற்பாடுகளின் ஈடுபட்டதாகவும் அறிந்திருந்திருந்துள்ளனர். எனினும் அது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவில்லை,
ஆ) பல்வேறு இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் முஸ்லிம் சமூகத்தினரிடையே செயற்படுவதாக முஸ்லிம் சமூகத்தினராலேயே அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு அறிவித்திருந்த போதும் அது தொடர்பாக செயற்படாமை,
இ) காத்தான்குடி பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் தெதாடர்பாக 2019 ஏப்ரல் 21ஆம் திகதி குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்த சஹரான் ஹசீம் மற்றும் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருதில் குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்த ஏ.எல்.எம்.நியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர்களை கைது செய்வதற்கு முறையாக சட்டத்தை செயற்படுத்தாமை
ஈ) 2018ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி மாவனெல்லையில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்தமையுடன் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினர் தொடர்புபட்டிருப்பதாக இலங்கை முஸ்லிம் சபையினால் தேசிய புலனாய்வு பிரிவுக்கு 2018 டிசம்பர் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த போதும் மற்றும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதும் அது தொடர்பான விசாரணகளை முன்னெடுத்து செல்வதனை தடுக்கப்பட்டு அதில் தலையிடுகள் காணப்பட்டதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளமை
உ) இந்த தாக்குதல் இடம்றுவதற்கு முன்பிருந்து குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தகவல்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமை
ஊ) பாதுகாப்பு சபையின் உறுப்பினரான பிரதமர் பாதுகாப்பு சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாது நாட்டு மக்களுக்காக அவர் செய்ய வேண்டிய அடிப்படை பொறுப்பை செய்ய தவறியமை,
எ) வெளிநாட்டு உளவு பிரிவினால் இலங்கைக்குள் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்களை நடத்தவுள்ளதாகவும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் , தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட சரியான தகவல்களை வழங்கியிருந்த போதும் அந்த தகவல்களின்படி நடவடிக்கையெடுக்க தவறியமை மற்றும் 2019.4.21 ஆம் திகதி அந்த தாக்குதலுக்கு முன்னரும் உளவுப்பிரிவினால் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் அது தொடர்பான நடவடிக்கையெடுக்காமை
ஏ) 2019.04.11 அன்று பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட பாதுகாப்புக்கு பொறுப்பான பிரியலால் தசநாயக்கவினால் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்காமை உள்ளிட்ட விடங்களுக்கமைய 2019.4.21ஆம் திகதி சிவில் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கும் மற்றும் சேதங்களை கட்டுப்படுத்துவதற்கும் முடியுமாக இருந்தபோதிலும்
2. 2019.04.21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் பிரதமர் மற்றும் அமைச்சர்களினால் அந்த தாக்குதல்கள் தொடர்பாக பொறுப்பு கூறாது அந்த பொறுப்புகளை வேறு தரப்பினர் மீது சுமத்துவதற்கு முயற்சித்துள்ளதுடன் அமைச்சர்கள் பொறுப்பற்ற வகையில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு நாட்டை பாதுகாப்பற்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் நடந்துக்கொண்டுள்ளனர்.
3. 2019.04.21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி அந்த குற்றச் செயல்கள் தொடர்பாக சட்டத்தை செயற்படுத்துவதற்கு இடையூறுகளை மேற்கொண்டோ அல்லது தடுத்து நிறுத்தியோ அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் செயற்பட்டுள்ளனர்.
4. 2019.04.21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மேலும் அவ்வாறான தாக்குதல்கள் மற்றும் வன்முறை செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்ட திட்டங்கள் அரசாங்கத்திடம் இருக்கின்ற போதும் 2019.05.13ஆம் திகதி கம்பஹா பிரதேசத்திலும் வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற அடிப்படையாவத வன்முறை செயற்பாடுகளால் கொலை , சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க தவறியமை ,
5. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதமாகியுள்ள போதும் நாட்டில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதாகவும் நாட்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை மீள கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதாகவும் அரச மற்றும் தனியார் துறைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தவறியுள்ளதாகவும் அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாகவும் ,
6. 2019.04.21ஆம் திகதி தாக்குதல்களை தடுக்க முடியாமையினாலும் அதன் பின்னர் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மற்றும் சிவில் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வராமையினாலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மையால் நாட்டின் உள்ளக நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு வெளிநாடுகளுக்கு இடமளித்து செயற்படுவதாகவும் இலங்கை ஜனநாயக சோஷலிச அரசாங்கம் தொடர்பாக மேலும் நம்பிக்கை கொள்ள முடியாது போயுள்ளதாக பாராளுமன்றத்தில் யோசனையை முன்வைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

5/20/2019

எது கேவலம்?

எது கேவலம்?

தமிழரிலே ஒரு பகுதியாரை எளியோர் என்றொதுக்கி விட்டு  எம்மினத்தையே அழித்தொழித்த 'சிங்கள பேரினவாத இராணுவத்தை' கொண்டு தேரிழுக்கின்ற அயோக்கியத்தனமும்,

எம் மக்கள் மீது  குண்டுபோட்ட  விமானப்படைகளைகளை கொண்டே  கோவில் திருவிழா கும்பாவிஷேகங்களுக்கு பூ தூவி மகிழும் மனோவியாதியும், 


மட்டகளப்பின் 'தமிழ் உணர்வாளர்கள்'  இனவாதி மங்கலராமய சுமன தேரரை விடிவெள்ளியாக கொண்டாடுகின்ற அப்புராணித்தனமும்,

வன்னியின் பலநூறு முன்னாள் புலிகள் தம்மையே அழித்தொழித்த அதே 'சிங்கள இனவாத' இராணுவ சீருடைகளை அணிந்துகொண்டு இலங்கை இராணுவத்தின் சிப்பாய்களாக மாறிய வரலாற்று கொடுமையும்,


முப்பது வருசமாக பல்லாயிரம் போராளிகளுக்கு சயனைற்றை கழுத்திலே கட்டி உயிருடன் பிடிபடக்கூடாதென்றும் வீரமரணமடைய சொல்லியும்  வழிகாட்டிய புலித் தளபதிமார் வரிசையிலே வந்து வட்டுவால் பாலத்தில் இராணுவத்திடம் சரணைடைந்து தம்முயிரை காத்துக்கொள்ள முனைந்த கேவலமும்,

அத்தனை மக்களையும் பலிகொடுத்து விட்டு வெள்ளாம் முள்ளி வாய்க்காலிலே  உயிர் மீது கொண்ட  நப்பாசையில் புலிகளின்  ஒட்டு மொத்த தலைமைப்பீடமும் வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையை  உயர்த்திக்கொண்டுபோனபோது  பட்டு நின்ற அவமானமும்,   

தமிழர்களின் வரலாற்று நாயகன் சங்கிலியன் போத்துகேயரிடம் கடலூடாக தப்பியோடும்போது பிடிபட்டு இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டபின்னர் அவனது மனைவியார் கிறித்தவ மதத்தைத்தழுவி உயிர் பிச்சை கேட்ட சொந்தமத துரோகமும்


நமக்கு கேவலமில்லை ஆனால்   


இலங்கையில் நாலு அப்பாவி முஸ்லிம்கள் இன்று நிலவும் பாதுகாப்பற்ற சூழலில் தமதுயிரை காக்க வெசாக் விழாவில் மலர்ச்செண்டை தூக்கிச் சென்றமை மட்டும் உலகமாக கேவலமாய் போனதெப்படி  தமிழர்களே! 








»»  (மேலும்)

5/19/2019

கிழக்கின் மாற்றுத் தலைமையாக பிள்ளையான்?

கிழக்கின் மாற்றுத் தலைமையாக பிள்ளையான்? Résultat de recherche d'images pour "பிள்ளையான்"
(எழுவான் வேலன் என்பவரால் எழுதப்பட்டு மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் அரங்கம் வாராந்த பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் இங்கே மீள் பிரசுரமாகின்றது)

19.04.2019ம் திகதிய 60 வது அரங்கம் பத்திரிகையில் ‘அரங்கம் பத்திரிகையில் இருந்து பிள்ளையானைச் சந்தித்தேன்’ எனும் அதன் ஆசிரியர் திரு.பூ.சீவகன் அவர்களுடைய கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அதே கட்டுரையை தனது முகநூலிலும் பதிவு செய்திருந்தார். பத்திரிகைக் கட்டுரையின் பதிற்குறிகள் எவ்வாறு இருந்தது என்பது தெரியாது. ஆனால் முகநூலில் பலவாறான பதிற்குறிகளையும் கருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது. இந்த அவதானத்தின் அடிப்படையில் பிள்ளையான் தொடர்பான எனது அவதானத்தினை இப் பத்தியின் ஊடாக முன்வைக்க விரும்புகின்றேன்.
முகநூலில் வெளிப்படுத்தப்பட்ட பதிற்குறிகளும் கருத்துக்களையும் பின்வரும் வகையில் வகைப்படுத்த முடியும்.

1. பிள்ளையானை ஆதரிப்பவர்கள்
அ. மட்டக்களப்பு மண்சார்ந்து பிரதேசப் பற்றுடன் பிள்ளையானை ஆதரிப்பவர்கள்
ஆ. இதுவரையான மாகாண ஆட்சிக்காலங்களை விட பிள்ளையானுடைய ஆட்சிக்காலம் சிறந்தது எனும் அடிப்படையில் பிள்ளையானை ஆதரிப்பவர்கள்.

2. பிள்ளையானை எதிர்ப்பவர்கள்
அ. சனநாயகவாதிகள்
ஆ. புலி ஆதரவாளர்கள்
இ. யாழ் மேலாதிக்க சிந்தனையாளர்கள்
ஈ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள்.

மட்டக்களப்பு மண்சார்ந்து பிரதேசப் பற்றுடன் பிள்ளையானை ஆதரிப்பவர்களும் இரண்டாவது வகைப்பாட்டினுள் வருகின்ற பிள்ளையானை எதிர்ப்பவர்களும் கிழக்கு மக்களின் தேவைகள் அவர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக உண்மையான புரிதல் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பது சந்தேகமே.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது மட்டக்களப்பில் பொதுமக்களிடம் கருணாவுக்கு பெரும் ஆதரவு அலை எழுந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்த மக்கள் ஆதரவை மிக நிதானமாக அவதானித்த விடுதலைப் புலிகள் கருணாவுக்கு எதிராக முதலில் ஊடாக யுத்தத்தினையே ஆரம்பித்தனர். அதன் மூலம் மிக விரைவாக மட்டக்களப்பு மக்களை வெற்றி கொண்ட புலிகள் அடுத்ததாக இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தனர். இவை இரண்டிலும் தோல்வியடைந்த கருணா எடுத்த தவறான முடிவுகளும் அவருடைய தனிப்பட்ட ஒழுக்க நடத்தைகளும் மட்டக்களப்பு மக்கள் அவர் மேல் கொண்டிருந்த நம்பகத் தன்மையினை இழப்பதற்கு காரணமாயிற்று.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கருணாவுடன் கருணாவுக்கு நம்பிக்கையானவராக இருந்த பிள்ளையான் கருணாவுடன் முரண்பட்டுக்கொண்டு ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ எனும் கட்சியுடன் வெளியே வருகின்றார். 2008ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியடைந்து மாகாணசபையின் முதல்வராகவும் ஆகின்றார்.
இங்கு அவதானிக்க வேண்டிய விடயம் புலிகளை ஆதரித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு மக்கள் கருணாவையும் பின்னர் பிள்ளையானையும் ஆதரிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதாகும்.

எப்படி தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தார்களோ அதே போல் மட்டக்களப்புத் தமிழர்கள் யாழ் மேலாதிக்க தலைமைத்துவங்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழர்கள் என்ற ஒன்றுபடுதலின் அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பவர்களாக யாழ் மேலாதிக்கவாதமே இருந்து வந்திருப்பதை
வரலாறு முழுக்க அவதானிக்க முடியும். இதற்கு எதிரான மாற்றுக்களை முன்வைப்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்பட்டு துரோகிகளாக்கப்படுவதனால் தமிழ்த் தேசியத்தினை மானசீகமாக நேசித்து தமது சமூக அரசியல் பொருளாதார அபிலாசைகளை அடக்கி வைத்துக்கொண்டார்கள். இந்த நிலையில்த்தான் கருணாவையும் பின்னர் பிள்ளையானையும் தங்களுடைய சமூகப் பொருளாதார அரசியல் அபிலாசைகளின் பிரதிநிதிகளாகப் பார்த்தார்கள் அவற்றை அடைய முயன்றார்கள்,முயல்கிறார்கள் இதுவே பிள்ளையானுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவுப் பலமாகும்.

இதனை விளங்கிக்கொண்டு பிள்ளையான் தொடர்பான மேற்படி எதிர்ப்பாளர்களின் கருத்களுக்கு வரலாம். முதலில் சனநாயகவாதிகளை எடுத்துக் கொள்வோம். இவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டு "பிள்ளையான் ஒரு கொலைகாரன்" சனநாயகத்துக்கு அவர் சரிவராது என்பதாகும். ஒருவர் மீதுள்ள குற்றம் சட்டரீதியாக நிரூபிக்கப்படாதவரைக்கும் அவர் நிரூபராதி என்பார்கள் இதனால் இந்தக் குற்றச்சாட்டு சட்டத்துக்கு புறம்பானதாகும்.

இருப்பினும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் சமூகத்தின் உயர் வர்க்கத்தினராக இருப்பதனையும் காணலாம். எல்லா இடங்களிலும் இந்த உயர் வர்க்கம் மக்களுடைய துன்ப துயரங்களில் பங்கெடுக்காது சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தமது நலன் பேணுபவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக தங்களுடைய வர்க்க நலனுக்கு பாதகமானவர்களை விமர்சனம் செய்து ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும். இந்த உயர் வர்க்கத்தினரால் சனநாயகவாதிகள், மனித உரிமைவாதிகள், பெண்ணியல்வாதிகள், என்ற பன்முகத்துடன் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் அவர்கள் எதிர்பார்த்த சனநாயகத் தன்மையுடன் நடந்துகொள்ளாது சனநாயகக் கொலைகாரர்களாகவும் அதிகாரவெறிகொண்டவர்களாகவும் இருக்கின்ற பலரை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இந்த உயர் வர்க்கம் அவர்களின் சனநாயகப் படுகொலைகள் பற்றியும் அதிகாரவெறி பற்றியும் பொதுவெளியில் பேசாதது மட்டுமல்ல அவ்வாறானவர்களுடன் தங்கள் தேவைகளுக்காக ஒட்டி உறவாடவும் தயங்காதவர்கள். இதுதான் அவர்களின் சுயநல வர்க்க குணாம்சமாகும்.

சனநாயகவாதிகளாகவும் மனித உரிமை வாதிகளாகவும் அடையாளப்பட்டுக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பவர்கள் பின்பு அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு கொலைகாரர்களாக மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களையும் இந்த சனநாயகவாதிகளால் வழங்கமுடியாது என்பதே உண்மையாகும். இதனால் எந்தக் கொலைகாரனையும் ஆட்சியில் அமர்த்தலாம் என்பது பொருளல்ல. கொலைகாரனுக்கும் போராளிக்கும் இடையிலான வித்தியாசங்களை நாங்கள் விளங்கிக் கொள்ளல் வேண்டும். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றஃஇருந்த கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் பிள்ளையானை விட மிக மோசமான கொலைகளைச் செய்தவர்கள் என்பதை இவர்கள் மிக லாபகமாக மறந்து விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல போராளித் தலைவர்களாக (அவர்கள் மொழியில் கொலைகாரர்கள்) இருக்கின்றவர்களை கேள்விகேட்காது விமர்சிக்காது அங்கீகரிக்கின்ற உயர் வர்க்கம் ஏன் பிள்ளையானை மட்டும் கொலைகாரனாகப் பார்க்கின்றது என்பதற்குள்தான் அவர்களுடைய அரசியல் இருக்கின்றது. அதாவது மட்டக்களப்பிலிருந்து உயர் வர்க்கத்தையும் யாழ் மேலாதிக்கத்தையும் மீறி ஒரு படிக்காத சிறுவர் போராளியாக இருந்த ஒரு பொடியன் முன்னுக்கு வருகிறானே என்கின்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் அதுவாகும்.
இங்கு பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது ஒரு கொடுங்கோன்மையாளனாக தன்னை காட்டிக் கொள்ளாது மக்கள் நலநாட்டமும் சனநாயகப் பற்றும் செயல்திறனும் உள்ளவராகவே தன்னை வெளிக்காட்டியிருக்கின்றார். இதுதான் பிள்ளையானை மற்றவர்களிடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சமாகும். இந்த அம்சம் இந்த சனநாயகவாதிகளை கலக்கடைய வைக்கின்றது. எங்கே எமது வர்க்க நலனும் நாம் கோட்பாட்டில் மட்டும் பேணும் சனநாயகமும் செயல்திறனும் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் பிள்ளையானை கொலைகாரனாக வெளிப்படுத்தவேண்டிய உளவியல் நிர்ப்பந்தத்தினை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
அடுத்து, புலி ஆதரவாளர்கள், யாழ் மேலாதிக்க சிந்தனையாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள். போன்றவர்களை எடுத்துக் கொண்டால் இந்த மூன்று வகைப்பாட்டினரும் சந்திக்கும் ஒரு புள்ளி தமிழ்த் தேசியம் என்பதாகும். இவர்கள் எல்லோரும் தமிழ் தேசியத்தை சிதைத்த ஒரு துரோகியாகவும், பிரதேசவாதியாகவுமே
பிள்ளையானைப் பார்க்கிறார்கள். உண்மையில் தமிழ்த் தேசியத்தைச் சிதைத்தது கருணாவோ பிள்ளையானோ அல்ல இந்த விமர்சகர்களை விட அவர்கள் தமிழ்த் தேசியத்துக்காக தம்மை ஆகுதியாக்கப் புறப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியத்தைச் சிதைத்தது யாழ் மேலாதிக்க கருத்தியல் என்பதை இவர்கள் உணர மறுப்பது வேதனையான விடயமாகும்.

ஆயுதப் போராட்டத்துக்கு முன்பே யாழ் உயர் வேளாளர் தம்மைவிட சாதி குறைந்தவர்களையெல்லாம் வடமராட்சியான், தென்மாராட்சியான், வலிகாமத்தான், தீவான், மட்டக்களப்பான், தோட்டக்காட்டான் என்று பிரதேச வேறுபாடு காட்டி அழைத்ததுடன் அவர்களை தம்மைவிடக் கீழானவர்களாகவுமே நோக்கினார்கள், நடத்தினார்கள். ஆயுதப் போராட்டம் இதனை தற்காலிகமாக மூடிமறைத்திருந்தாலும் தம்மைவிடக் கீழானவர்கள் தலைமைப் பதவிக்கு வருவதையோ அல்லது பொறுப்புக்கள் எடுப்பதையோ விரும்பியவர்கள் அல்ல. தவிர்க்கமுடியாமலே சகித்துக் கொண்டார்கள். இந்த உள்முரண்பாட்டின் உச்ச வெளிப்பாடே கருணா பிளவு ஆகும். இதற்கு முன்பு மிதவாத அரசியலில் இருந்து மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியை பின்னர் தழிழர் விடுதலைக் கூட்டணியை காலூன்ற வைத்த சொல்லின் செல்வர், முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட செ.இராசதுரை விலகிச்சென்றிருந்தார் என்பதை மறக்கக் கூடாது. இந்த உண்மையை யாழ் மேலாதிக்கம் உணர மறுக்கும் வரை தமிழ் தேசியம் உயிர்ப்புடன் இருக்க முடியாது என்பதே உண்மையாகும்.

மேலும் வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசமாக இருந்த போதிலும் வடக்கின் சமூக, பொருளாதார, அரசியல் வேறு கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமை வேறு தமிழ் அரசியல் தலைமைகளும் போராட்டத் தலைமைகளும் இரண்டுக்கும் ஒரே வகையான அரசியல் நடைமுறையினை கையாண்டதன் விளைவே கிழக்கு மக்கள் இன்று அரசியல் அனாதைகளாக்கப்படுவதற்குக் காரணமாகும். இதனையும் மேற்கூறிய மூன்று வகைப்பாட்டினரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.

கிழக்கின் அரசியல் யதார்த்தத்தினைப் புரிந்து கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் கூட கிழக்கில் தனியான அரசியல் நடைமுறையினைக் கையாழ்வதற்கு வக்கற்றவர்களாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவ்வாறு தனியான அரசியல் நடைமுறையினைக் கையாளும் போது அது தங்களுடைய யாழ்ப்பாண அரசியல் இருப்பை பாதிக்கும் என அஞ்சுகிறார்கள். கிழக்கில் பிள்ளையானுடன் சேர்ந்து இயங்கும் கட்சியின் இருப்பு வடக்கில் கேள்விக்குறியாகும் என நினைக்கிறார்கள். எனவே இந்த அரசியல் கட்சிகள் வடக்கு மக்களைத்தான் கவனத்தில் கொள்கிறார்களே தவிர கிழக்கு மக்களை அல்ல என்பதும் கவனத்தில் எடுத்தக்கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்தினையும் பிள்ளையான் தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக் கொள்வதாக இல்லை.

முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண ஆட்சியினையும் பின்னர் கிழக்குமாகாண ஆளுநர் நியமனத்தில் எதுவும் செய்யமுடியாத தமிழ் அரசுக் கட்சியினர் தேவாலயக் குண்டு வெடிப்பில் உண்டான முஸ்லிம் வெறுப்புணர்வை தங்கள் அரசியல் இலாபத்துக்காக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் ஹிஸ்புல்லாவின் வெலிக்கந்த பல்கலைக் கழகத்துக்கும் காணிவழங்கியது பிள்ளையானும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக் கூறி பிள்ளையானை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள். இது அவாகளின் அரசியல் வங்குரோத்து நிலையினையே எடுத்துக்காட்டுகின்றது.

எனவே வடக்கு மக்களின் விருப்பு வெறுப்புக்கும் அவர்களுடைய அரசியல் இருப்புக்கும் கிழக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருப்பது எந்தவகையிலும் நீதியானது அல்ல. எனவே கிழக்கு மக்கள் தங்களுக்கான ஒரு மாற்று அரசியல் தலைமையைத் தேடுகிறார்கள். இந்தத் தேடுதல் வடக்கிற்கு எதிரானதாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதில்லை. உண்மையில் கிழக்கு பலமாக இருக்கும் போதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் சுயநிர்ணயம் பாதுகாப்பானதாக அமையும் என்பதை பிரதேசவாதச் சாயம் பூசுபவர்களும் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். ‘வெறுங்கையில் முழம் போடமுடியாது’ என்பார்கள் அது போல் தற்போது அந்த மாற்றுத் தலைமையாக பிள்ளையானை எடுத்துக்கொள்கின்றார்கள் அதன் வெளிப்பாடே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆதரவாகும். இந்த ஆதரவும் வளர்ச்சியும் பிள்ளையானை பிள்ளையாராக ஆக்கி பூசிக்கப்பட வேண்டியவ ஒருவராக உருவாக்காமல் விமர்சனத்துக்கும் மாற்றத்துக்கும் உரிய தலைவராக பிள்ளையானை எடுத்துக்கொள்வதே இன்றைய கிழக்கின் தேவையாகும். 
»»  (மேலும்)

5/16/2019

எமது கடப்பாடு

L’image contient peut-être : 3 personnes, texteமக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் குழு உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துநெத்தி, திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருண் ஹேமச்சந்திரா, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் தோழர் இந்திக பரணவிதான, பதவி ஸ்ரீ புற பிரதேசசபை உறுப்பினர் தோழர் ஷீலா கருணாநாயக்க, சோஷலிச இளைஞர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சுபோத வீரசிங்க ஆகியோரின் தலைமையில் 2019.05.16ம் திகதி திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது
»»  (மேலும்)

5/14/2019

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளில் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா - கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.இலங்கை வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு; வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு
நாடு முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது, முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீ வைத்துமுள்ளனர்.
இந்த நிலையிலேயே வன்முறையாளர்களின் தாக்குதல்கள் காரணமாக, மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாரமுல்லவில் உயிரிழந்த 45 வயதுடைய அமீர் என்பவர் 4 பிள்ளைகளின் தந்தையாவர். தச்சுத் தொழிலாளியான இவரின் வீடு உட்பட, கொட்டாரமுல்ல பகுதியில் சுமார் 25 வீடுகள் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளன.
இதன்போதே, அமீர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார் என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அங்குள்ள 4 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
நாத்தாண்டியா பிரதேச சபை உறுப்பினர் ரிழ்வான் மற்றும் கொட்டாரமுல்ல பள்ளிவாசல் செயலாளர் ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த பகுதியைச் சேர்ந்த சயின் அஹமட் பிபிசி க்கு தெரித்தார்.
கொட்டாரமுல்லவில் சுமார் 1700 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.
நேற்றிரவு கொட்டாரமுல்ல பகுதியில் ராணுவத்தினர் கடமையில் இருக்கத்தக்கதாக, அவர்களின் ஆதரவுடனேயே முஸ்லிம்களின் வீடுகள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக, அங்குள்ள சிலர் பிபிசியிடம் கூறினர்.
இதேவேளை, கொட்டாரமுல்லயிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தும்மோதர பகுதியிலும் இரண்டு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, வீடுகளும் தாக்கப்பட்டு, தீவைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இது இவ்வாறிருக்க, மிவாங்கொட பிரதேசத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கல்லொளுவ பகுதிலுள்ள முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், குறித்த உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
வீடுகளுக்குள் இருந்த முஸ்லிம்களை வெளியே அழைத்து, அவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்கிறார் அந்த ஊடகவியலாளர்.

இதேபோன்று, இன்னும் பல இடங்களிலும் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களை தாக்கியும் தீ வைத்தும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில், மினுவாங்கொட பிரதேசத்திலும் வன்முறையாளர்களின் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் இறந்துள்ளதாக, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றபோதும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
»»  (மேலும்)

தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை - அரசாணை வெளியீடு

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது. Résultat de recherche d'images pour "வில்லயாத் அஸ் செயிலானி"
இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதி சிறிசேன தடை விதித்திருந்தார்.
ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களின் பிரகாரம் இந்த தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

5/11/2019

வவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்

மட்டக்களப்பு வவுணதீவில்இ இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த முன்னாள் போராளி அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.Résultat de recherche d'images pour "அஜந்தன்"
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதிஇ வவுணதீவு காவலரணில் காவலில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் முன்னாள் போராளி அஜந்தன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில்இ ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அஜந்தன்இ தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.
இந்நிலையில்இ உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுஇ அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்இ வவுணதீவு பொலிஸாரைஇ சஹ்ரான் குழுவினரே கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.



இதையடுத்துஇ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தத்கு அமைவாகஇ இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில்இ பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்இ அஜந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்போதுஇ அஜனந்தனை பிணையில் விடுதலை செய்த பதில் நீதவான்இ அவரை எதிர்வரும் 13ஆம் திகதியன்று மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
»»  (மேலும்)

5/06/2019

விடுதலை இயக்கங்களுக்கு தடைவிதிக்கும் படலத்தை பிரபாகரன் ஆரம்பித்த நாள் இன்று.

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes, texteதானே தலைவனென்று ஏனைய விடுதலை இயக்கங்களுக்கு தடைவிதிக்கும் படலத்தை  பிரபாகரன் ஆரம்பித்த நாள் இன்று.
»»  (மேலும்)

5/04/2019

வழிபாடுகள் இன்றி 10 சடலங்கள் நல்லடக்கம்

கல்முனைஇ சாய்ந்தமருது வீட்டுக்குள்இ ஏப்ரல் 26ஆம் திகதியன்று வீடொன்றுக்குள் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலியான 16 பேரின் சடலங்களும்இ பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று (02) புதைக்கப்பட்டன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் பலியானஇ 10 ஆண்களின் சடலங்களும் மத சடங்குகளின்றி புதைக்கப்பட்டன எனத் தெரிவித்த அவர்இ சிறுவர்கள் அறுவரின் சடலங்கள் மத சடங்குகளுடன் புதைக்கப்பட்டன என்றும்  தெரிவித்தார்.
பிரதேசத்திலுள்ள மதகுருவொருவரின் ஏற்பட்டின் கீழ்இ அவருடைய கோரிக்கையின் பிரகாரம்இ மேற்கண்டவாறு புதைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
»»  (மேலும்)