தடைகள் தாண்டி உரிமையை நிலை நாட்டிய
உயர் கல்வியாளன்
உயர் கல்வியாளன்
கலாநிதி.சு.சிவரத்தினம்
கொடுக்க மறுத்த பதவி உயர்வும் பொய் குற்ற சாட்டில் பறிக்கப் பட்ட விரிவுரையாளர் பதவியும் இன்று சிவரத்தினத்துக்கு கிடைத்திருக்கிறது 2016 மே முதல் பதவி உயர்வு அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைத்திருந்தால் இன்று விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளராக பதவி ஏற்றிருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்தன.
முன்னய நிர்வாகத் தலைமைகளால் வேண்டுமென்றே பதவி உயர்வு திட்டமிட்டு தடுக்கப் பட்டு சிவரத்தினத்தின் பதவியும் பறிக்கப் பட்டது எந்த மனிதாபிமான அணுகு முறையற்ற நிர்வாக தலைமைகள்.ஆனால் தங்களை மனித உரிமை வாதிகளாக ஒளி வட்டம் சூடிக் கொண்ட பதவி மோகம் மிக்க போலி நாடக தாரிகளாய் கிழக்குப் பல்கலைக் கழகத்தை சீரழித்த கொடூரம்.
இன்று சிவரத்தினத்துக்கு நீதி கிடைத்திருக்கிறது அபடியானால் தவறான முடிவுகளை எடுத்தவர்களுக்கு என்ன தண்டனை அதற்கு ஒத்து ஊதியவர்களுக்கு என்ன வகையிலான பதில் நடவடிக்கை.
வஞ்சிக்கப் பட்ட சீவரத்தினத்துக்கு இன்று மீண்டும் பதவி கிடைத்தாலும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் வெறும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல அதற்கும் அப்பால் நீளும் இழப்புகள் அதிகம் பக்க விளைவுகள் இதற்கான இழப்பீடுகளை சரிக் கட்டுவது.
துணை வேந்தர்கள் பணிப்பாளர் பதவிகளின் சர்வாதிகார மொழிக்கு சட்டம் எப்படி பார்க்கிறது.
0 commentaires :
Post a Comment