34 வது பெண்கள் சந்திப்பு
வன்முறைகளற்ற வெளிகளை உருவாக்குதல்
என்கின்ற தொனிப்பொருளில் இம்முறை பெண்கள் சந்திப்பு நிகழ்வானது நெதர்லாந்து நாட்டில் இடம்பெறவுள்ளது.
20.04.2019 சனியன்று முழு நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
- பெண்கள் சந்திப்பு என்பது பெண்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான தனித்த ஒரு வெளியின் அவசியத்தை உணர்ந்த புகலிடப் பெண்களின் முயற்சியில் 1990 இல் ஜேர்மனியின் கேர்ண் நகரில் உருவாக்கம் பெற்ற பெண்களின் ஒரு சந்திப்பு நிகழ்வாகும். இச்சந்திப்பானது ஆரம்பகாலங்களில் ஜெர்மனியில் மட்டுமே நடைபெற்று வந்தது. காலப்போக்கில் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளுக்கும், கனடாவிற்கும் என சற்று விரிவடைந்தது. சுமார் 25 வருடங்களாக தொடர்ந்து வரும் இப் பெண்கள் சந்திப்பானது 2019வரை 33 சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளது.
0 commentaires :
Post a Comment