3/05/2019

கிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக சுவிஸ் உதயம் அமைப்பினால் 
விசேடவேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான புதிய கட்டடத்தொகுதிக்கு இன்று மட்டக்களப்பு திராய்மடுவில் அடிக்கல் நாட்டப்பட்டது.


2004ம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் கல்விக்காக அளப்பரிய சேவையாற்றவரும் சுவிஸ்லாந்தினை தலைமையகமாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் சேவையாளர்களினால் உருவாக்கப்பட்ட இவ் அமைப்பானது இதுவரையில் வாடகைக் கட்டடங்களில் தனது பணியினைத் தொடர்ந்த போதும் சுவிஸ் உதயம் அமைப்பின் முன்னாள் செயவாலளர் குணதாசன் பொருளாளர் துரைநாயகம் மறறும் தலைவர் சுதர்சன் ஆகியோரில் அயராத முயற்சியின் பயனாக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சி.சந்திரகாந்தனின் வழிநடத்தலின் கீழ் தமக்கெனப் பெற்றுக்கொண்ட காணியிலேயே இவ் அடிக்கல் நாட்டப்பட்டது.

பலதடைகள் வந்தபோதும் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சி.சந்திரகாந்தனின் பணிப்பிற்கு அமைய தம்முடன் இணைந்து பயணித்ததன் விளைவாகவே இக்காணியை விரைவாகப்பெற்றுக்கொள்ள முடிந்ததாக இங்கு உரையாற்றிய கிழக்கு சுவிஸ் அமைப்பின் தலைவர் விமலநாதன் குறிப்பிட்டார்.


இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்கில் நாடாளுமன்ற உறுப்பனர் எஸ்.விழாளேந்திரன், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகம், பாராளுமன்ற உறுப்பினர் அமல்,மகளிர் அணித்தலைவியும் மாநகரசபை உறுப்பினருமான திருமதி.செல்வி மனோகர், மாநகரசபை உறுப்பினர் காந்தராஜா,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

0 commentaires :

Post a Comment