3/09/2019

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கிழக்கை மீட்போம் மகளிர் மாநாடு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கிழக்கை மீட்போம் மகளிர் மாநாடு L’image contient peut-être : 3 personnes, personnes debout, foule et plein air
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கை மீட்போம் மகளீர் மாநட்டுப் பிரகடனம் L’image contient peut-être : 4 personnes, fouleL’image contient peut-être : 4 personnes, foule
பெண்களின் வலுவாக்கத்தின் ஊடாகவே கிழக்கு மாகாணத்தினை கல்வி,கலை, சமூக பொருளாதார, அரசியல் நிருவாக அழிவில் இருந்து தடுத்து கிழக்கு மாகாணத்தினை மீட்டெடுக்கமுடியுமென நாம் திடமாக நம்புகிறோம். பெண்களின் கல்வி ரீதியான அடைவு போற்றுதற்குரியதாக இருக்கின்ற போதிலும் அவர்களின் சமுக அரசியல் ரீதியான பார்வை இன்னும் ஆழமாக்கப்படவேண்டும்.
எமதுமண்ணில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் இழப்புக்களையும் வலிகளையும், அதிகம் சுமந்தவர்கள் பெண்களே! எனவே எமது கிழக்கு மண்ணை மீள கட்டியமைப்பதிலும் மக்கள் சிந்தனையுள்ள தூரநோக்கான உறுதி மிக்க அரசியல் தலைமைத்துவத்தினை கட்டியெழுப்புவதிலும் எமது பெண்களின் பங்கு இன்னும் அதிகரிக்கப்படவேண்டும்.
இன பிரச்சினை தீர்வு, நீடித்த சமாதானம், நிலையான அபிவிருத்தி போன்றவற்றில் எமது மகளீரின் கருத்துக்களும் தெளிவுபடுத்தல்களும் உள்வாங்கப்படுவதனூடாகவே அவை முழுமை பெறும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
அதன் அடிப்படையில்,
1. கிழக்கு மாகாணத்தில் இன, மத, மொழி பேதமின்றி அற்பணிப்புடன் சேவையாற்றிய முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஜனநாயக பாதைக்கு திருப்பியவர் அவர்மீது பயங்கரவாத தடைச்சட்டம் விதிக்கப்பட்டுள்ளமையானது கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைவரது மனங்களையும் கலங்கவைத்துள்ளது. எனவே அவர்மீதான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
2. உள்ளுராட்சி,  தேர்தல்களின் போது பெண்களுக்கான இட ஓதுக்கீட்டின் அடிப்படையில் வேட்புமனுவில் விகிதாசாரம் குறிப்பிட்டு ஓதுக்கப்படுவது போன்று பெண்களுக்கென வட்டாரங்களும், உள்ளுராட்சி சபைகளும, மாகாண பொதுதேர்தல்களின் தொகுதிகளும் குறித்து ஒதுக்கப்பட வேண்டும்.
3. கிழக்கில் மதுபான சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு மதுபான சாலைகள் திறப்பதற்கான, மூடுவதற்கான நோக்கங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
4. அதிகவட்டியிலான கடன்கள் நிறுத்தப்பட்டு அரசு பெண்களுக்கான வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்னிக்க வேண்டும்.
5. தேசிய, பிராந்திய அரசியல் கட்சிகளில் முடிவெடுக்கும் அதிகாரமிக்க குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
6. சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அவற்றை விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
7. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள தனியான அமைச்சு உருவாக்கப்படுவதோடு மாகாண சபைகளிலும் முதலமைச்சின் கண்காணிப்பின் கீழ் புதிய செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.
8. மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன் உள்நாட்டில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
9. காணாமல் போன தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ்க் கைதிகள் தொடர்பாக அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதுடன் காணாமற்போனவர்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற சர்வதேச அனுசரனையுடன் விசாரனைகள் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
என சர்வதேச மகளிர் தினமான இன்று (08.03.2019) இல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மகளீர் அணியினராகிய நாம் பிரகடனம் செய்கின்றோம்.

0 commentaires :

Post a Comment